கரும்பின் நம்பமுடியாத 5 ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அதன் தீமைகள்

பொங்கல் அப்படின்னு சொன்னாளே நம்ம ஞாபகத்துக்கு உடனே வருவது கரும்பு தான். அப்போ அந்த கரும்பு சாப்பிடுவதால் நம்மளுக்கு என்ன நன்மைகள். அதோட கர்ப்பிணி பெண்கள் கரும்பு சாப்பிடலாமா? குழந்தைகளுக்கு அதுவும் மூணு வயசுக்கு குறைவா இருக்கிற குழந்தைகளுக்கு கரும்பு கொடுக்கலாமா? அப்படின்றத பத்தி தான் பாக்க போறோம்.

பொதுவா கரும்பு ஜூஸ் எல்லா சீச்ன்லையும் கிடைக்கும். ஆனா வெயில் டைம்ல நமக்கு வியர்வை அதிகமாகி உடல் வறட்சியாகும். அப்போ நம்ம வெளில போயிருக்கும் போது கரும்பு ஜூஸ் குடிக்கிறது ரொம்ப ஆரோக்கியம்.

மத்த ஜூஸுகளை விட கரும்பு ஜூஸ் குடிக்கிறது மிகவும் ஆரோக்கியம்னு நியூட்ரிஷியன் டாக்டர் சொல்றாங்க. ஆனால் ஐஸ் கட்டி சேர்க்காமதா கரும்பு ஜூஸ் குடிக்கணும். ஐஸ் கட்டி சேர்த்து குடிச்சிங்கன்னா அந்த கரும்பு ஜூஸ் குடிச்சதற்கான பலனே கிடையாது.அதுக்கு பதிலா சளி தும்மல் தான் வரும்.

சில பெண்களுக்கு உடம்பு ஹீட்டால வெள்ளைப்படுதல் ஏற்படும். அப்படி இருக்க பெண்கள் வந்து வெயில் டைம்ல கரும்பு ஜூஸ் குடிக்கும்போது இஞ்சி சேர்க்காம, வெறும் லெமன் சாறு மட்டும் சேர்த்து ஐஸ் கட்டி இல்லாம குடிக்கிறது நல்லது.

கரும்பு ஜூஸ் போடற கடைங்கள்ல பார்த்தீங்கன்னா கண்டிப்பா லெமன் இல்லனா இஞ்சி இல்லன்னா புதினா இல்லனா துளசி ஏதாச்சும் ஒன்னு வச்சு கண்டிப்பா போடுவாங்க. இப்பல்லாம் வெத்தலை கூட வச்சு போடுறாங்களாம்.

ஏன் அப்படி போடுறாங்க தெரியுமா ஏன்னா கரும்பு சூடு தன்மை உடையது. கரும்பு ஜூஸ் மட்டும் குடிச்ச உடனே நம்ம உடம்பு சூட்ட அதிகமாகிடும். கரும்பை நம்ம நல்லா மென்னு சாப்பிடறதுனால நம்ம பற்கள் உறுதியாகுது.அதோட நமக்கு அஜீரண கோளாறுகளும் நீங்குது.

பொதுவா சுகர் பேஷன்ஸ் எல்லாருக்குமே இந்த டைம்ல பயமா இருக்கும். பொங்கல் வேற இனிப்பா சாப்பிடுறோம், இதுல கரும்பு வேற இனிப்பு நம்ம எத தான் சாப்பிடுவது அப்படின்னு ரொம்ப பீல் பண்ணிட்டு இருப்பாங்க.

அவங்க எல்லாம் கவலையே படவேண்டாம். பொங்கல் கொஞ்சமா சாப்பிட்டு கரும்பு நல்ல நிறைய சாப்பிடலாம். ஒன்னும் பிரச்சனை கிடையாது. ஏன்னா கரும்புல இருக்குற சுகர் வந்து நம்மளோட ரத்தத்தில் டைரக்டா கலக்குவது கிடையாது. அதனால சுகர் பேஷன்ஸ் தாராளமா கரும்பு சாப்பிடலாம். அதுக்குன்னு அளவுக்கு அதிகமா சாப்பிடுறது நல்லதுக்கு இல்லை.

மூன்று வயசுக்கு குறைவா இருக்கிற குழந்தைகளுக்கு கரும்பு கொஞ்சமாக குடுங்க. அவங்க ஒன்னும் பெருசா சாப்பிட போறது கிடையாது. ஆனால் ஜூஸா கொடுக்கும் போது 80 மில்லுக்கு குறைவாக தான் இருக்கணும்.

கர்ப்பிணி பெண்கள் கரும்பு, கரும்பு ஜூஸோ சாப்பிடக்கூடாது. ஏன்னா கரும்பு சூடுதன்மை கொண்டது. கரும்பு சாப்பிடுவதனால் பேதி, குமட்டல், வயிற்று வலி போன்ற உபாதைகள் ஏற்படலாம். அதனால கர்ப்பிணிகள் கரும்ப தவிர்க்கிறது நல்லது.

கரும்பில் அளவுக்கு அதிகமாக கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், அயன் சத்துக்கள் எல்லாம் இருக்கு. கர்ப்பிணிகள், அப்புறம் மூணு வயசுக்கு கீழ இருக்குற குழந்தைகளை தவிர்த்து மத்தவங்க எல்லாரும் வாரம் இரு முறை கரும்பு ஜூஸ் குடிக்கலாம்.

கரும்ப நம்ம லைட்டா வாஷ் பண்ணிட்டு டைரக்டா சாப்பிடுறதுனால ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா கடையில போய் ஜூஸா குடிக்கும்போது அந்த மெஷின் சுத்தமா இருக்கான்னு பாக்கணும். அப்புறம் புது ஜூஸ் தான் போடுறாங்களா இல்ல பழைய ஜூஸ்ல கலக்குறாங்களான்றதையும் கண்டிப்பா நம்ம தெரிஞ்சுக்கணும்.

கரும்பு ஜூஸ் பேக் பண்ணி வீட்டுக்கு வாங்கிட்டு வரணும் நினைச்சீங்கன்னா அந்த கரும்பு ஜூஸ் ரெடி பண்ணதுல இருந்து ஒரு மணி நேரத்துக்குள் கொடுத்திடனும். இல்ல அப்படின்னா அதுல பாக்டீரியா பார்ம் ஆயிருக்கும். அதை குடிக்கும் போது தேவையில்லாத உபாதைகளுக்கு ஆளாவீங்க. எந்த ஒரு உணவையும் அளவா சாப்பிட்டு அளவில்லா நன்மை அடைவோம்.