மத்தி மீன் வேறு பெயர்கள்

மத்தி மீன் வேறு பெயர்கள்

மீனுன்ன  எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். அப்படிப்பட்ட மீன்கள் இருக்கிற சத்துல ரொம்ப முக்கியமான சத்து மத்தி மீன்ல இருக்கு. அப்படி என்னதான் சத்து அந்த மத்தி மீன்ல இருக்குனு பார்ப்போமா?

பொதுவா நம்ம ஊர்ல மத்தி மீன் கொஞ்சம் ரேட் கம்மியா தான் இருக்கும் ஆனா சத்து அதிகம். மனித உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் அவசியமா தேவைப்படுற புரத சத்து மீன்லதான் அதிகம் இருக்கு.

அதுலயும் மத்தி மீன்ல உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கொழுப்பு, வைட்டமின்கள், தாது சத்துக்கள் ரொம்பவே இருக்கு.

100 கிராம் மத்தி மீன்ல  புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்புச்சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர் சத்து 66.70 கிராமும் உள்ளது.

மத்தி மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இதில் விட்டமின் பி12 உள்ளதால் இதயத்தை பாதுகாக்கிறது.

மேலும் பல்வேறு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. இந்த மத்தி மீனை சாப்பிட்டால் கண் பார்வை வலுப்பெறும். மேலும் தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் மத்தி மீனை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவாகி இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

இதில் இருக்கும் அயோடின் தாது சத்து முன் கழுத்து கழலை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மேலும் பாஸ்பரஸ் சத்தினால் எலும்புகளுக்கு வலிமை தருகிறது. மத்தி மீன் தமிழில் சாளை மீன், கவலை மீன் என அழைக்கப்படுகிறது.