எருமைப்பால் தினசரி தவறாமல் குடித்து வந்தால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்..!

உடல் வலிமையாகவும் ஆரொக்கியமாகவும் இருக்க நாம் தினசரி பாலினை குடிக்கிறோம் அல்லது பாலில் தயாரிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுகிறோம். அதிலும் பசும்பாலை விட எருமைபாலில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பதிவில் எருமைப்பால் தினசரி குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம்.

எருமைப்பால் தினசரி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

இதயத்திற்கு நல்லது

புளித்த எருமைப்பாலில் லாக்டில் என்ற பாக்டீரியா அதிக அளவில் உள்ளது. இந்த பாக்டீரியா இதய ஆரோக்கியத்திற்கு  ரொம்ப நல்லாது. தினசரி குடிப்பதால் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் அளவுகளை குறைக்கும். தினசரி காச்சிய எருமைப்பாலை தினசரி குடிப்பது இதயத்திற்கு ரொம்பவே நல்லது.

உடல் எடை

எருமைப்பாலில் கலோரிகள் அதிகளவில் இருந்தாலும் எல்.பரகேசி என்ற பக்டீரியா அதிகளவில் இருப்பதால் உடல் எடை அதிகரிப்பை தடுக்கிறது. மேலும் உடல் எடை அதிகரிப்பை கட்டுபடுத்தும் புரோபயாடிக்குகள் அதிகளவில் உள்ளன.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய புரோபயாடிக் எருமைப்பாலில் அதிகளவில் உள்ளது. எனவே தினசரி எருமைப்பால் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலில் நோய் தோற்று வராமல் தடுக்கிறது.

நீரிழிவு நோய்க்கு நல்லது

எருமைப்பாலில் புரோபயாடிக்குகள் அதிகளவில் உள்ளன. இவை நீரிவு நோய்க்கு எதிரானாவை. எனவே தினசை எருமைப்பால் குடிப்பதால் நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைக்கலாம்.