தினசரி சின்ன வெங்காயம் சாப்பிடுறதுனால கிடைக்க கூடிய நம்பமுடியாத 10 ஆரோக்கிய நன்மைகள்

டெய்லி சின்ன வெங்காயம் சாப்பிடுறதுனால என்னென்ன மருத்துவ பயன்கள் இருக்கு அப்படின்னு பார்க்கிறோம். அதே சமயம் அது வந்து அதிகமா சாப்பிடுறதுனால என்னென்ன பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு அதை பத்தி பார்க்க போறோம். 

சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தில் இருக்கிற carbohydrate, protein, fat, energy எல்லாமே 100 கிராம் பெரிய வெங்காயத்தை கம்பேர் பண்ணும்போது சின்ன வெங்காயத்தில் இரண்டு மடங்கு அதிகமா இருக்கு.

வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களை கம்பேர் பண்ணாலும் பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் வந்து கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம் எல்லாமே வந்து அதிகமாக இருக்கு.

ஒரே அளவு எடையுள்ள சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டையும் கம்பேர் பண்ணும்போது பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் இருந்து இரண்டு மடங்கு அதிகமாக சத்துக்கள் இருக்கு. அதனால சின்ன வெங்காயம் தான் பெஸ்ட்.

இவ்வளவு சத்துக்கள் இருக்கிறதுனால தான் நம்மளோட பாரம்பரிய மருத்துவத்துல சின்ன வெங்காயத்தை வந்து மருந்தா பயன்படுத்திட்டு இருந்தாங்க.

சின்ன வெங்காயத்தில் பார்த்தீங்க அப்படின்னா ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் (antioxidants) வந்து நிறைய இருக்கு.

chinna vengayam payangal

சுருக்கமா சொல்லணும் அப்படின்னா நமக்கு தினம் தினம் வந்து நம்ம சாப்பிட சாப்பாட்டில் இருந்து, சுவாசிக்கிற காற்றில் இருந்து இல்ல நம்ம வெளியில போயிட்டு வரோம் அந்த தூசு எல்லாமே வந்து நம்ம உடம்புல சில நச்சு கழிவுகளை வந்து உற்பத்தி பண்ணும்.

சின்ன வெங்காயம் தினமும் சாப்பிடுவது இதயத்திற்கு ரொம்ப நல்லது. சின்ன வெங்காயத்துல அல்லிசின் (allicin) அப்படின்னு ஒரு கெமிக்கல் இருக்கு. இரத்த் கொதிக்கு இருப்பவர்களுக்கு ரத்த குழைய்களை விரிவடைய செய்து ரத்த அழுத்தத்தை  கண்ட்ரோல் பண்ணும்.  அதுமட்டுமில்லாம நம்ம உடம்பில் இருக்ககூடிய கொலஸ்ட்ரால கண்ட்ரோல் பண்ணும்.

குறிப்பா கெட்ட கொலஸ்ட்ரால்ன்னு சொல்லக்கூடிய LDL ஓட அளவை குறைக்கிறது. ரத்த குழாய்களுக்கு உள்ளக ரத்தம் உறைதலை தடுக்கிறது . இதனால் மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

அதனால இதயத்திற்கு இந்த சின்ன வெங்காயம் ரொம்பவே நல்லது.

அடுத்ததா இந்த சின்ன வெங்காயம் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களுக்கு ரொம்பவே நல்லது. அலர்ஜி பிரச்சனை இருக்கிறவங்களுக்கு எல்லாம் பார்த்தீங்கன்னா கண்ணு எரிச்சல் இருக்கும், தும்மல் அடிக்கடி வரும், கண்ணுல இருந்து தண்ணி நிறைய ஊத்தும், அது மாதிரி வந்து சில அறிகுறிகள் வரும்.

அலர்ஜி பிராப்ளம் இருக்கிறவங்க தினமும் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வராங்க அப்படின்னா  அலர்ஜி பிரச்சனை வந்து நல்லாவே கண்ட்ரோல் ஆகும். அதே மாதிரி இந்த ஆஸ்துமா ப்ராப்ளம் இருக்கிறவங்க கூடசின்ன வெங்காயம் ரெகுலரா சாப்பிடம்போது அவங்களுடைய அறிகுறிகள் வந்து கண்ட்ரோல் ஆகுது ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சுருக்காங்க. அலர்ஜி ஆஸ்துமா மாதிரியான பிராப்ளம் இருக்கிறவங்க சின்ன வெங்காயம் ரெகுலரா சாப்பிடலாம்.

health benefits of chinna vengayam in tamil

நம்ம நுரையீரல் தாக்கக்கூடிய சளி, இருமல்  இது மாதிரியான வியாதிகளுக்கும் சின்ன வெங்காயம் வந்து ரொம்பவே நல்லது.  சின்ன வெங்காயம் ரெகுலரா சாப்பிடும் போது நம்ம உடம்போட நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இன்ஃபெக்ஷன் வராமல் தடுக்கும். அப்படியே இன்ஃபெக்ஷன் வந்தாலும் மருந்துகளோடு நம்ம சின்ன வெங்காயம் ரெகுலரா எடுத்துக்கிட்டு வந்தோம் அப்படின்னா இன்ஃபெக்சன் சீக்கிரமா குணமாகும்.

அடுத்தது சின்ன வெங்காயம் வந்து தோலுக்கு வந்து ரொம்ப நல்லது. ஏன்னா தோல்ல ஏற்படக்கூடிய படர்தாமரை, தேமல்  பரு இது எல்லாத்துக்குமே  சின்ன வெங்காயத்தை வந்து நாம அரைச்சு பேஸ்ட் மாதிரி செஞ்சு அதுல கொஞ்சம் மஞ்சள் கலந்து பேஸ்ட் மாதிரி தோல் வியாதி இருக்கிற இடத்துல அப்ளை பண்ணிட்டு வரும்போது தோல் பிரச்சனை எல்லாம் வந்து நல்லாவே கண்ட்ரோல் ஆகும்.

 சின்ன வெங்காயம் வந்து தலை முடிக்கு ரொம்பவே நல்லது. கீழே உள்ள வீடியோவில் சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் பற்றி விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளவும். மேலும்  சின்ன வெங்காயம்எதற்க்கெல்லாம் பயன்படுத்தலாம்என்பதைபார்த்துதெரிந்து கொள்ளவும்.