நடிகர் விஜய் நடித்து வெளியாகிய கோட் திரைப்படம் முதல் நாளில் 126.32 கோடி ரூபாய் வசூல் அடித்திருப்பதாக பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருக்கிறார். விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 126.32 கோடி வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான தி கோட்டஸ் திரைப்படம் மீனாட்சி சௌதரி, சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.
படத்தினை அர்ச்சனா கல்பாத்தி தனது ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி அதாவது நேற்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் படம் வெளியானது.
இந்த திரைப்படத்தில் நிறைய சிற்பசைகளும் திரையரங்கு அனுபவங்களையும் படம் உறுதி செய்தது என தகவல் வெளியாகி இருந்தது. மற்றொரு தரப்பினர் இந்த படத்திற்கு சரியான வலு சேர்க்கவில்லை என பலவிதமான விமர்சனங்கள் இருந்த நிலையிலும் இப்படம் 400 கோடி ரூபாயில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாளில் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய படங்களில் 126.32 கோடி இப்படம் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவமான உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் தற்போது அதனை வெளியிட்டு இருக்கிறார்.