இனிப்பு பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி? இன்னைக்கு நம்ம இந்த பதிவுல என்ன ரெசிபி பார்க்க போறோம்னா விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெசிபி தான் பார்க்க போறோம்.
தேவையான பொருட்கள்
- 1/2 கப் வெல்லம்
- 2 ஏலக்காய்
- 1 கப் அரிசி மாவு
- 1/2 டீஸ்பூன் எள்ளு
- 3 டேபிள் ஸ்பூன் தேங்காய் (கட் பண்ணியது )
செய்முறை
ஃபர்ஸ்ட் உங்களுக்கு தேவையான அளவுக்கு வெல்லம் எடுத்து வச்சுக்கோங்க. நான் இங்க வந்து அரை கப் வெல்லம் எடுத்து வச்சிருக்கேன். அதுல வந்து முக்கால் கப் தண்ணி ஆட் பண்ணிட்டு நல்லா அந்த வெல்லம் வந்து கரையற அளவுக்கு நல்லா கொதிக்க வச்சு எடுத்துக்கலாம். அதுலயே ஏலக்காய் ரெண்டு தட்டி ஆட் பண்ணிருக்கேன். அதையும் சேர்த்து நல்லா கொதிக்க வச்சு எடுத்துக்கலாம்.
இப்ப வந்து ஒரு பவுல்ல ஒரு கப் அரிசி மாவு எடுத்து வச்சுக்கோங்க அரை டீஸ்பூன் எள்ளு ஆட் பண்ணிக்கோங்க மூணு டேபிள் ஸ்பூன் அளவுக்கு சின்ன சின்னதா தேங்காவை கட் பண்ணி எடுத்துக்கோங்க. அதுக்கப்புறம் ஒரு டீஸ்பூன் நெய் ஆட் பண்ணிக்கோங்க. டேஸ்ட்க்கு ஒரு பின்ச் வந்து சால்ட் ஆட் பண்ணிக்கோங்க. இது வந்து ஆப்ஷனல் தான்.
இப்ப வந்து நம்ம ரெடி பண்ணி வச்சிருக்க வெல்லம் சிரப்பை வந்து வடிகட்டியில வச்சு ஆட் பண்ணிக்கோங்க. அதை கொஞ்சம் கொஞ்சமா ஆட் பண்ணி நல்லா இந்த மாதிரி மாவு வந்து ரெடி பண்ணிக்கோங்க. நம்ம எப்படி வந்து தண்ணி ஊத்தி மாவு பிசைவோமோ அது மாதிரி இந்த வெல்லம் தண்ணிய வச்சு நீங்க ரெடி பண்ணிக்கலாம். இப்ப வந்து கொழுக்கட்டை மாவு ரெடி ஆயிடுச்சு..
இப்ப வந்து அதுல இருந்து கொஞ்சமா எடுத்து இந்த மாதிரி கையில உருட்டிட்டு இந்த மாதிரி பிடிச்சுக்கோங்க. இப்ப வந்து பார்த்தீங்கன்னா உங்களுக்கு ஷேப் வந்துருச்சு. இந்த மாதிரி எல்லா கொழுக்கட்டையும் சேர்த்து ரெடி பண்ணி வச்சுக்கோங்க. பார்த்தீங்கன்னா நல்லா வந்துருச்சு.
இப்ப வந்து ஒரு இட்லி பிளேட் இல்லைன்னா ஸ்டீமர் ட்ரே எடுத்துக்கோங்க. அதுல இந்த மாதிரி கொழுக்கட்டையை வந்து நல்லா பிளேஸ் பண்ணிக்கோங்க. இப்ப வந்து ஸ்டீமர்ல ஒரு 15 நிமிஷம் நல்லா வேக வச்சு எடுத்துக்கலாம். 15 நிமிஷம் கழிச்சு பார்த்தீங்கன்னா நல்லா தெரியும். கலர் சேஞ்ச் ஆயிருச்சு .ரொம்பவே நல்லா வந்திருக்கு ரொம்பவே சிம்பிளான ரெசிபி தான் அவ்வளவுதான். ரொம்பவே ஈஸியான சிம்பிளான இனிப்பு பிடி கொழுக்கட்டை ரெசிபி ரெடி ஆயிடுச்சு.
Uppu Urundai Recipe in Tamil : ரொம்பவே ஈஸியான சிம்பிளான விநாயகர் சதுர்த்தி உப்பு உருண்டை ரெடி