TVK Manadu தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு அனுமதி வழங்குவது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை தொடர் ஆலோசனைகள் ஈடுபட்டிருக்கிறார்கள். மாநாடு தொடர்பாக காவல்துறையினர் 21 கேள்விகளுக்கும் தவெக சார்பில் பதில் மனு கொடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகின்ற 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டி பக்கத்தில் இருக்கக்கூடிய வீசாலை கிராமத்தில் நடத்த திட்டமிட்டு இருக்காங்க. மாநாடு திட்டமிடப்பட்டு அந்த 85 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு இந்த பகுதியில விவசாயம் எதுவும் செய்யப்படவில்லை. வானம் பார்த்த பூமியாதான் இருக்குது இந்த இடத்துலதான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கோறி விழுப்புரம் மாவட்ட காவல்துறையில தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலர் புசி ஆனந்த் அவர்கள் கடந்த மாதம் 28 ஆம் தேதி மனு ஒன்னு கொடுத்தாருங்க.
இந்த மனுவை வாங்கிய காவல்துறை இந்த இடத்தை வந்து ஆய்வு மேற்கொண்டாங்க நம்ம பார்த்துட்டு இருக்க காட்சிகள் தேசிய நெடுஞ்சாலை அருகில் இருக்கக்கூடிய இந்த 85 ஏக்கர் காவல்துறை சார்புல உடனடியா அன்னைக்கு மாலையை வந்து இந்த இடத்தை பார்த்தாங்க. தேசிய நெடுஞ்சாலை பக்கத்துலயே இருக்குங்க அதிகபட்சமா போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். அவங்க கொடுத்த மனுல அவங்க சொல்லப்பட்ட விஷயங்கள் சுமார் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் வருவார்கள் ஏன்னா எதிர்பார்க்கப்படுகிறதுன்னு சொல்லி முதல் முதல் அந்த மனுவில் கொடுத்தாங்க.
காவல்துறை உடனே இந்த பக்கத்துல ஆலோசனை மேற்கொண்டாங்க. தேசிய நெடுஞ்சாலை ஓரம் இருக்கிறதுனால கொடுக்குறதுக்கு வாய்ப்பில்லைன்னு சொல்லி தொடர்ந்து அவங்க பேசிக்கிட்டு இருந்த நிலைமையில 21 கேள்விகள் மாநாடு தொடர்பாக 21 கேள்விகள் கேட்கப்பட்ட விளக்க நோட்டீஸை கடந்த திங்கட்கிழமை விழுப்புரம் மாவட்ட காவல்துறை தமிழக வெற்றிக் கழகத்துக்கு வழங்கினாங்க. இதனைத் தொடர்ந்து ஐந்து நாட்கள் அவகாசமும் கொடுக்கப்பட்டது. நேற்று மாலையோட அந்த அவகாசம் முடிவடைந்த நிலைமையில தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இந்த 21 கேள்விகளுக்கும் அவங்க தெளிவான விளக்கத்தை கொடுத்திருந்தாங்க.
இதுல பார்த்தீங்கன்னா அவங்க கேட்ட முதல் கேள்வி மாநாடு நடத்த போறேன்னு சொல்லி இருந்தீங்க ஆனால் எந்த நேரம் குறிப்பிடப்படலன்னு சொன்னாங்க. மாநாடு பார்த்தீங்கன்னா மதியம் இரண்டு மணி முதல் இரவு 10:00 மணி வரை நடைபெறும்னு சொல்லிருந்தாங்க. நிகழ்ச்சி நேரல் எதுவுமே போடாமலே அனுமதி கேட்டிருக்கீங்கன்னு சொன்னாங்க. இந்த இந்த மாநாட பொறுத்தவரை பார்த்தீங்கன்னா முதல்ல கண்காட்சி இரண்டாவது வந்து நடிகர் விஜய் வந்து பாத்தீங்கன்னா கொடியேற்றாரு அடுத்தது தமிழ் தாய் வாழ்த்து வரவேற்புரை அடுத்தது தீர்மானங்கள் தலைவர் உரை நன்றி அந்த மாநாடு முடிக்க போகுது எவ்வளவுங்க சேர் போட போறீங்க எவ்வளவு பேர் வருவாங்கன்னு கேட்டிருந்தாங்க.
இதுல மொத்தம் 50000 சேர்கள் நாங்க போடப்போறோம்னு சொல்லிருந்தாங்க. மாநாட்டுக்கு மொத்தம் எவ்வளவு பேர் வருவீங்கன்னு கேட்கும்போது 37 மாவட்டங்கள்ல தலா 1000 பேர் பாண்டிச்சேரி கேரளா ஆந்திரா டெல்லி தமிழ்நாடு உள்ளிட்ட மொத்தம் 50000 பேர் வருவாருன்னு சொல்லிருந்தாங்க. மொத்தம் ஏற்கனவே அவங்க அனுமதி கேட்கும்போது ஒன்றரை லட்சம் பேர் வருவான்னு சொல்லிருந்தாங்க. ஆனால் நேற்று அவங்க கொடுத்த விளக்கம் ஒன்னுல ஆண்கள் 30000 பெண்கள் 15000 முதியவர் 5000 500 மாற்றுத் திறனைகள் அவர்களுக்கான சிறப்பு சேர் ஏற்பாடு செய்யப்படும் இது மட்டுமில்லாமல் உணவு நாங்க தயார் செய்து பொட்டளம் போட்டு கொடுக்க போறோம்ன்றதையும் அவங்க விளக்கம் சொல்லிருந்தாங்க.
மாநாட்டுக்கு மொத்தம் 16 வழிகள் போடப்பட்டிருக்கு 16 வழியிலும் வந்து இவங்க உள்ள போயிட்டு வெளிய வரணும் விஐபிக்கு மட்டும் நாலு வழி இதையும் அவங்க மென்ஷன் பண்ணிருந்தாங்க. தீயணைப்பு ஏற்பாடுகள் என்னன்னு கேட்டா ஐந்து தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துறதுக்கும் தயார் நிலையில் இருக்காங்க. குடிநீர் டேங்க் மூலமா கொடுக்க போறோம்னு சொல்லிருந்தாங்க. 250 தற்காலிக கழிவரைகள் இங்க கட்ட அமைக்க போறேன்னு சொல்லிருந்தாங்க.
இது மட்டும் இல்லாமல் பார்க்கிங்க்கு மொத்தம் வந்து ஆறு வழி உள்ள போறதுக்கும் வெளிய வரதுக்கும் இதுல வாகனங்கள் பார்த்தீங்கன்னா தமிழ்நாடு முழுவதும் இந்த மாநாட்டிற்கு வரப்போற வேன் மொத்தம் 250 கார் 250 பேருந்து 100 பைக் 1000 இதுமட்டுமில்லாமல் மின்சாரம் ஜெனரேட்டர் மூலியமா வாங்கப்போறோம் இதுதாங்க இந்த மாநாட்டுக்கு நாங்க செய்திருக்கிற ஏற்பாடுன்னு சொல்லி தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் ஆனந்த் நேற்று மாலை விழுப்புரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் கிட்ட பதிலை விளக்க நோட்டீஸ் கொடுத்திருந்தாருங்க.
இந்நிலையில நேற்று இரவு முழுவதும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாஜ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிரமா இந்த நேரம் வரைக்கும் ஆலோசனை மேற்கொள்றாங்க அனுமதி கொடுக்கிறதா வேண்டாமா அப்படின்னு நம்ம பார்த்துட்டு இருக்க இந்த இடம்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழக முதல்வர் இந்த இடத்துல பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரம் பார்த்தீங்கன்னா கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திமுக தொண்டர்கள் இங்க கலந்துகிட்டாங்க.
இதுல மொத்தம் சுமார் ஒரு 20000-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற அந்த கூட்டம் நடைபெற்றது இது மாநாடு ஆனா இவங்க காவல்துறை சார்புல தற்போது யோசிக்கிறது முதல்ல ஒன்றரை லட்சம் பேர் வருவாங்கன்னு சொல்லி இருந்தாங்க இப்ப வந்து 50000 பேர் வருவாங்கன்னு சொல்லி இருக்காங்க.
எந்த அளவுக்கு இது சாத்தியம் அப்படின்றதையும் காவல்துறை யோசிக்கிறாங்க காவல்துறை ஏதாவது காரணங்களை காட்டி அனுமதி மறுத்தால் பாதுகாப்பு வழங்க மறுத்தால் தமிழக வெற்றிக் கழகம் உடனடியாக திங்கட்கிழமைக்குள் இந்த பதில் கிடைக்கும் கிடைக்கலனா திங்கட்கிழமை நீதிமன்றத்துக்கு சென்று அனுமதி கோறவும் சட்ட வல்லுனர்கள் அதேபோல அவங்களோட கட்சி வழக்கறிஞர்கள் கொண்ட குழுகிட்ட தொடர்ந்து தமிழக பொது அந்த வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் புஸி ஆனந்த் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
எந்த நேரத்திலும் அனுமதி வழங்கப்படலாம் அல்லது அனுமதி மறுக்கப்படலாம் இந்த நிலையில் தான் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு காவல்துறை அனுமதி வழங்குவது குறித்து தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
G.O.A.T படம் முதல் நாளிலேயே சாதனை! Box Office வசூல் முழு விவரங்கள் இதோ!