Uppu Urundai Recipe in Tamil : ரொம்பவே ஈஸியான சிம்பிளான விநாயகர் சதுர்த்தி உப்பு உருண்டை ரெடி

Uppu Urundai Recipe in Tamil : இன்னைக்கு நம்ம சேனல்ல என்ன ரெசிபி பார்க்க போறோம்னா உப்பு உருண்டை ரெசிபி தான் பார்க்க போறோம். இந்த உப்பு உருண்டை ரெசிபியை வந்து நீர் உருண்டைன்னு சொல்லுவாங்க அரிசி மாவு கொழுக்கட்டைன்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி நிறைய நேம்ஸ் இருக்கு வாங்க இதை எப்படி செய்றதுன்றத பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

  • 1/2 ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • 2  டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 இல்லைன்னா 2  வரமிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/4 பெருங்காயத்தூள்
  • துருவிய தேங்காய்
  • கருவேப்பிலை
  • தேவையான அளவு உப்பு

உப்பு உருண்டை செய்முறை

ஃபர்ஸ்ட் ஒரு கடாய் எடுத்துக்கோங்க. அதுல ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊத்திக்கோங்க ஒரு டீஸ்பூன் கடுகு ஆட் பண்ணிக்கோங்க ஒரு டேபிள் ஸ்பூன் உளுந்து ஆட் பண்ணிக்கோங்க. ஒன்னுல இருந்து ரெண்டு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு ஆட் பண்ணிக்கோங்க ஒன்னு இல்லைன்னா ரெண்டு வரமிளகாய் ஆட் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறம் கருவேப்பிலை கட் பண்ணி ஆட் பண்ணிக்கோங்க. மிளகாய் ஒன்னுல இருந்து ரெண்டு ஆட் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறம் ஒன்னுல இருந்து ரெண்டு பெரிய வெங்காயம் சின்ன சின்னதா கட் பண்ணி ஆட் பண்ணிக்கோங்க.

பெருங்காயத்தூள் வந்து கால் டீஸ்பூன் ஆட் பண்ணிக்கோங்க அதுக்கப்புறம் ஒரு டீஸ்பூன் உப்பு ஆட் பண்ணிக்கோங்க. இதை நல்லா வதக்கி விட்டுட்டு இறக்கிடலாம். அதுக்கப்புறம் ஒரு பவுல் எடுத்துக்கோங்க. ஒரு கப் அரிசி மாவு ஆட் பண்ணிக்கோங்க. அரை டீஸ்பூன் உப்பு ஆட் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறம் நம்ம ரெடி பண்ணி வச்சிருக்க வெங்காயம் ஆட் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறம் துருவுன தேங்காய் இல்லைன்னா, கட் பண்ண தேங்காய் ஆட் பண்ணிக்கோங்க.

இந்த ரெசிபிக்கு வந்து நீங்க கட் பண்ணி தேங்காய் ஆட் பண்ணாலும் டேஸ்டா இருக்கும். இப்ப இதை நல்லா மிக்ஸ் பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் சுடு தண்ணி கொஞ்சமா ஆட் பண்ணிக்கோங்க தண்ணி கொஞ்சம் கொஞ்சமா ஆட் பண்ணி நல்லா பிசைஞ்சு எடுத்துக்கலாம். இந்த ரெசிபிக்கு வந்து நீங்க வெங்காயம் வதக்கும் போதே மாவை வந்து அரைச்சு சேர்த்து பிசைஞ்சுக்கலாம்.

அப்படியும் செய்யலாம் இந்த மாதிரி தனியாவும் மாவு போட்டு நீங்க பிசைஞ்சு எடுத்துக்கலாம். இப்ப இது எல்லாத்தையும் சேர்த்து நல்லா பிசைஞ்சாச்சு இப்ப வந்து கொழுக்கட்டை மாவு ரெடி ஆயிடுச்சு. இப்ப வந்து அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா எடுத்து சின்ன சின்ன பால்ஸா உருட்டிக்கோங்க. ரொம்ப சின்னதாவும் வேணாம் ரொம்ப பெருசாவும் வேணாம் நார்மலா இந்த சைஸ்க்கு உருட்டிக்கோங்க இப்ப இந்த கொழுக்கட்டை மாவுலயே வந்து நீங்க பிடி கொழுக்கட்டையும் செய்யலாம். இல்லைன்னா வேற எதாவது மோல்டு வச்சிருந்தீங்கன்னா அந்த ஷேப்ல வந்து நீங்க செஞ்சு எடுத்துக்கலாம்.

இப்ப இதை எல்லாமே உருட்டி ரெடி பண்ணி வச்சாச்சு. இப்ப வந்து ஒரு இட்லி பிளேட் இல்லைன்னா ஸ்டீமர் பிளேட் எடுத்துக்கோங்க. அதுல வந்து ஒவ்வொன்னா இந்த மாதிரி ரெடி பண்ணி வச்சுக்கோங்க இப்ப இந்த கொழுக்கட்டை உருண்டை எல்லாமே சேர்த்து அதுல பிளேஸ் பண்ணிக்கலாம் இப்ப ஒவ்வொன்னா வச்சாச்சு இப்ப இதை அப்படியே வந்து ஸ்டீமர்ல வச்சிரலாம். இதை வந்து ஒரு 10 நிமிஷம் வேக வச்சா போதும், இப்ப 10 நிமிஷம் கழிச்சு நல்லா அவிச்சு எடுத்தாச்சு பாருங்க நல்லா வந்துருச்சு அவ்வளவுதான் ரொம்பவே ஈஸியான சிம்பிளான உப்பு உருண்டை ரெடி ஆயிடுச்சு. இது வந்து மோஸ்ட்லி விநாயகர் சதுர்த்திக்கு எல்லாருமே செய்வாங்க.

Sweet Kozhukattai Recipe in Tamil : 5 நிமிடங்களில் சுலபமாக Soft ஆன பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி