Sweet Kozhukattai Recipe in Tamil : 5 நிமிடங்களில் சுலபமாக Soft ஆன பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி

ஹலோ காய்ஸ் இன்னைக்கு நம்ம என்ன ரெசிபி பார்க்க போறோம்னா இனிப்பு பூரண கொழுக்கட்டை ரெசிபி தான் பார்க்க போறோம். இந்த இனிப்பு பூரண கொழுக்கட்டையை வந்து ஸ்வீட் கொழுக்கட்டைன்னு சொல்லுவாங்க, இல்லனா சாஃப்ட் கொழுக்கட்டைன்னு சொல்லுவாங்க. இந்த கொழுக்கட்டை ரெசிபி வந்து எல்லாருமே விநாயகர் சதுர்த்திக்கு கண்டிப்பா வீட்ல செய்வாங்க. வாங்க அது எப்படி செய்றதுன்றத பார்ப்போம் ஃபர்ஸ்ட்

[ez-toc]

தேவையான பொருட்கள்

  • ஒரு கப் பாசிப்பருப்பு
  • கப் வெல்லம்
  • ஒரு டேபிள் ஸ்பூன் நெய்
  • ரெண்டு கப் துருவுன தேங்காய்
  • ஒரு டீஸ்பூன் ஏலக்காய்
  • தேவையான அளவு உப்பு

கொழுக்கட்டை பூரணம் செய்வது எப்படி

ஒரு குக்கர் எடுத்துக்கோங்க அதுல ஒரு கப் பாசிப்பருப்பு ஆட் பண்ணிக்கோங்க. அதுல.தண்ணி ஊத்தி நல்லா வேக வச்சு வச்சு.எடுத்துக்கலாம். ஒரு ரெண்டுல இருந்து மூணு விசில் வச்சா போதும் இப்ப வந்து ஒரு கடாயில ஒரு கப் வெல்லம் ஆட் பண்ணிக்கோங்க. ரெண்டு இல்லைன்னா ஒன்றரை கப் தண்ணி ஆட் பண்ணிக்கோங்க. நல்லா அந்த வெல்லம் வந்து நல்லா கரையற அளவுக்கு நல்லா கொதிக்க வச்சு எடுத்துக்கோங்க.

அதுக்கப்புறம் பாசிப்பருப்பு நல்லா வெந்துருச்சு இதை நல்லா நம்ம மேஷ் பண்ணி விட்டுக்கலாம். இப்ப வந்து ஒரு கடாயில ஒரு டேபிள் ஸ்பூன் நெய் ஆட் பண்ணிக்கோங்க. ரெண்டு கப் துருவுன தேங்காய் ஆட் பண்ணிக்கோங்க. இதை ஒரு ரெண்டுல இருந்து மூணு நிமிஷம் நல்லா ரோஸ்ட் பண்ணிக்கலாம்.

அதுக்கப்புறம் நம்ம மேஷ் பண்ணி வச்சிருக்க பாசி பருப்பு ஆட் பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் நம்ம ரெடி. பண்ணி வச்சிருக்க வெல்லத்தையும் ஆட் பண்ணிக்கலாம். வெல்லம் ஆட் பண்ணும்போது சல்லடை வச்சு ஆட் பண்ணுங்க இப்ப இது ரெண்டையுமே சேர்த்தாச்சு. நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுக்கோங்க.

அதுக்கப்புறம் ஒரு டீஸ்பூன் அளவுக்கு ஏலக்காய் தட்டி ஆட் பண்ணிக்கோங்க. இதையும் நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுக்கலாம். சும்மா டேஸ்ட்க்கு கொஞ்சமா சால்ட் ஆட் பண்ணிக்கோங்க. இதை நல்லா கிண்டி விட்டுக்கிட்டே இருக்கலாம். இப்ப பூரணம் கன்சிஸ்டன்சிக்கு வந்த உடனே இறக்கிடலாம்.

கொழுக்கட்டை மாவு தயாரிப்பது எப்படி

ஒரு பவுல்ல ஒரு கப் அரிசி மாவு எடுத்துக்கோங்க. அரை டீஸ்பூன் சால்ட் ஆட் பண்ணிக்கோங்க. ஒரு டீஸ்பூன் நெய் ஆட் பண்ணிக்கோங்க இதை நல்லா ஃபர்ஸ்ட் மிக்ஸ் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறம் சுடுதண்ணி ஆட் பண்ணிக்கோங்க கொஞ்சம் கொஞ்சமா சுடு தண்ணி ஆட் பண்ணி நல்லா பிசைஞ்சு எடுத்துக்கலாம். இப்ப இது எல்லாத்தையுமே சேர்த்து நல்லா பிசைஞ்சு எடுத்துக்கலாம் இப்ப வந்து கொழுக்கட்டை மாவு ரெடி ஆயிடுச்சு.

இப்ப அதுல இருந்து கொஞ்சமா எடுத்து எடுத்துக்கோங்க. இப்ப வந்து கொழுக்கட்டை
அச்சு எடுத்துக்கோங்க இல்லன்னா ஷேப் மோல்டு எடுத்துக்கோங்க. நீங்க எந்த ஷேப் மோல்டு வேணாலும் எடுத்துக்கலாம். இப்ப வந்து அந்த மோல்டுல வந்து ஆயில் தடவி விட்டுக்கலாம். இப்ப வந்து கொழுக்கட்டை மாவை உள்ளுக்க பிரஸ் பண்ணிக்கோங்க.

அதுக்கப்புறம் பூரணத்தை உள்ளுக்கு வச்சுக்கோங்க. பூரணத்தை உள்ளுக்கு வச்சுட்டு மூடிக்கோங்க. இப்ப நல்லா க்ளோஸ் பண்ணிட்டு லைட்டா பிரஸ் பண்ணுங்க. சுத்தி நல்லா பிரஸ் பண்ணி விட்டுக்கோங்க. இப்ப வந்து எடுத்துட்டீங்கன்னா கொழுக்கட்டை ரெடி ஆயிரும்.

நீங்க இதை வந்து வாழை இலையிலயும் வச்சு செஞ்சுக்கலாம். வாழை இலையில நல்லா எண்ணெய் அப்ளை பண்ணிட்டு நீங்க ரெடி பண்ணி எடுத்துக்கலாம். க்ளோஸ் பண்ணிட்டு சைடுல வந்து நல்லா ஷேப் கொடுத்துக்கோங்க.

இப்ப எல்லாமே ரெடி ஆயிடுச்சு. இப்ப வந்து ஒரு இட்லி பிளேட் இல்லைன்னா ஸ்டீமர் ட்ரே எடுத்துக்கோங்க. அதுல வந்து ஒவ்வொன்னா கொழுக்கட்டையை அடுக்கி வச்சுக்கலாம். வச்சிட்டு ஸ்டீமர் ஆன் பண்ணிக்கோங்க. இதை வச்சு ஒரு 10 நிமிஷம் நல்லா அவிச்சு எடுத்துக்கோங்க, 10 நிமிஷம் நல்லா வேக வச்சு எடுத்தா போதும்.

உங்களுக்கு என்ன ஷேப்ஸ்ல வேணுமோ அந்த ஷேப்ஸ்ல நீங்க கொழுக்கட்டை ரெடி பண்ணி எடுத்துக்கலாம். பூரணம் வந்து எல்லாத்துக்குமே சேம் தான் இந்த பூரணத்துல வந்து நீங்க கடலைப்பருப்பு மாவு, இல்லைன்னா வேர்க்கடலை மாவு எதுனாலும் ஆட் பண்ணிக்கலாம். ரொம்பவே டேஸ்டா இருக்கும். அவ்வளவுதான் ரொம்பவே ஈஸியான சிம்பிளான இனிப்பு கொழுக்கட்டை ரெடி ஆயிடுச்சு.

Kozhukattai Recipe in Tamil : ரொம்பவே ஈஸியான சிம்பிளான விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை ரெடி

Scroll to Top