Vettaiyan Review Tamil: ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தின் முதல் விமர்சனம்! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

 First Review of Vettaiyan Review Tamil From Abroad

Vettaiyan Review Tamil: வெளிநாட்டிலிருந்து வெளியான வேட்டையன் படத்தின் முதல் விமர்சனம். ரஜினி நடித்த வேட்டையன் திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

இந்த படம் உலகம் முழுக்க அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு தயாராக இருந்த ரசிகர்களுக்கு திடீரென ரஜினிகாந்தின் உடல்நிலை மோசமான செய்தியை கேட்டு அதிர்ச்சியாகி இருந்தனர் ரசிகர்கள்.

மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள பல முக்கிய பிரபலங்களும் இந்த செய்தியை கேட்டு சோகத்தில் ஆழ்ந்தனர். அதன் பிறகு மருத்துவமனை சார்பில் வெளியான அறிக்கையில் பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லை என கூறப்பட்டது.

விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று வெளியானதும் ரசிகர்களும் பிரபலங்களும் நிம்மதி அடைந்தனர். அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலமாக வீடு திரும்பி இருந்தார்.

தனக்கு ஆறுதல்களும் வாழ்த்துக்களும் சொன்ன அனைவருக்கும் தனது நன்றியும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். தற்போது மீண்டும் வேட்டையின் கொண்டாட்டத்திற்கு ரசிகர்கள் ஆரவாரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் வேட்டையின் படத்தை பார்த்த ஒரு சிலர் சொன்ன தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவைப் போலவே சூப்பர் ஸ்டாருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர்.

மற்ற நாடுகளில் வெளியிடவும் சென்சார் சர்டிபிகேட் அந்தந்த நாட்டில் வாங்க வேண்டும். வெளிநாட்டில் வேட்டையன் திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தைப் பற்றி கூறியுள்ளனர்.

படம் சிறப்பான கருத்துடன் தரமாக உருவாகியுள்ளதாம். மேலும் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும் என கூறுகின்றனர்.

இதனை கேள்விப்பட்டதும் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர் மேலும் அனிருத்தும் இந்த படத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு அவரது ஸ்டைலில் படத்திற்கு விமர்சனம் செய்துள்ளார்.

இதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனைகளையும் படைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.