சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வேட்டையன் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் அனிருதீன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் உருவாகி இருக்குது. இந்த படத்துல சூப்பர் ஸ்டாரோட அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி என பல நட்சத்திரங்கள் நடிச்சிருக்காங்க.
ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பிய ரஜினி தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிச்சிருந்தாரு ஆனா அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையல அதனால தற்பொழுது வேட்டையின் படம் மூலமாக திரும்ப வெற்றி பாதைக்கு திரும்புற முனைப்புல இருக்காரு.
அந்த வகையில இந்த படம் கண்டிப்பாக தலைவரை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும்னு சொல்றாங்க இந்த படத்தோட ஆடியோ வெரி விழா மிக பிரம்மாண்டமாக நடந்ததை அடுத்து இந்த படத்தோட ட்ரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வருது.
இதனை அடுத்து அண்டை மாநிலங்கள்ல வேட்டையன் திரைப்படத்தின் முதல் காட்சி அதிகாலை 4:00 மணிக்கே திரையிடப்படும்னு அறிவிப்பு வெளியாகி இருக்கு கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற அன்றை மாநிலங்களில் ஏற்றம் படத்தோட முதல் காட்சி அதிகாலை 4:00 மணிக்கு திரையிடப்படுது ஆனால் தமிழ்நாட்டுல அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லைங்கிற காரணத்தினால முதல் காட்சி 9:00 மணிக்கு தான் போடப்படும் அறிவிப்பு வெளியாகி இருக்கு.
இந்த படத்தோட டிக்கெட் புக்கிங்கை விரைவிலேயே தொடங்க இருக்காங்க வசூல்லையும் புதிய சாதனை படைக்கும்னு எதிர்பார்க்கலாம். ஜெயிலர் வசூலையும் தாண்டி வேட்டையின் திரைப்படம் தரமான சம்பவம் செய்யும்னு ரசிகர்கள் சொல்லிட்டு வராங்க.