தேன் சிட்டு குருவி பற்றிய தகவல்கள்

Then Chittu in Tamil

தேன் சிட்டு பறவையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. மற்ற தென் சிட்டு மாதிரிதாங்க இதுக்கு தென் தான் முக்கிய உணவு. ஆனால் சில சமயங்களை தன் குஞ்சுகளுக்கு சிறு பூச்சி பூச்சியினங்களையும் உணவா  கொண்டு வந்து கொடுக்கும். 

இந்த பறவை ரொம்ப வேகமா பறக்கும் தன்மை கொண்டது. ஒரு இடத்துல நிலையா இருந்துகிட்டே பறக்க இதால முடியும். இது பூக்களுக்கு அடியில் அமர்ந்து தேன உறிஞ்சும்.

உருவ அமைப்புன்னு  பாத்தா ஆண் பறவைகள் பார்க்க கருப்பு நிறத்தில் இருந்தாலும், சூரிய வெளிச்சம் பட்டு தின்னா ஊதா நிறத்தில் ஒளிரும்.

பெண் பறவைகளுக்கு ஆலிவ் பச்சை நிறத்தில் மேல் பகுதி இருக்கும் . அடிப்பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

மற்ற தேன் சிட்டுகளோட ஒப்பிடும்போது  இந்த பறவையோட அழகு அதாவது வாய் சிறியதாகத்தான் இருக்கும். வால்  வந்து சதுரமா கரு நிறத்தில் இருக்கும்.

ஆண் பறவைக்கும் பெண் பறவைக்கும் நல்ல வித்தியாசம் தெரியும். ஆண் பறவை கருத்த ஊதா நிறத்தில் இருக்கும்.வயிற்று அடிப்பகுதியில் மஞ்சள் நிறம் இருக்கும். சிறு கருப்பு கீற்றும் தெரியும்.

புணர்ச்சியை விரும்பும் காலங்களில் தன்னுடைய மஞ்சள் இறகுகளை விரித்து காட்டக்கூடும் இந்த பறவை.

பெண் பறவை ஆலிவ் பச்சை நிறம் கொண்ட மேல் இறகு இருக்கும். பறவையோட அடியில் மஞ்சள் நிறம் இருக்கும். புருவம் இளம் மஞ்சள் நிறத்தில் கண்ணுக்கு பின்னாடி சிறு கீற்றுடன் காணப்படும்.

இந்த பறவைகள் எப்போதுமே நிறைய தோட்டங்களில் மலர்கள் அதிகம் இருக்ககூடிய இடங்களில் தான் வாழ்கிறது.

எப்பவுமே ஜோடியாகத்தான் வாழும். சில இடங்களில் 40, 50 பறவைகள் கூட்டமாக கூட வாழும். ஆனாலும் தன் இணையை பிரிந்து இது வாழ்வது இல்லை.

இந்த பறவை அதிக சத்தம் எழுப்பகூடியது. இந்த சத்தம் ரொம்ப அதிகமா கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.

இந்த பறவையையா இவ்வளவு சத்தம் போடுது அப்படின்னு சொல்ற அளவுக்கு சிறிய பறவை ஆனால் பெரிய சத்தமா இருக்கும்.

இந்த பறவை எப்பவுமே சத்தமிட்டு கொண்டே தான் இருக்கும். உணவு சாப்பிடும் வேலையில் சிறகை ஆட்டிக்கிட்டே இருக்கும்.

 சில சமயங்களில் பூக்களுக்கு அடியிலே அல்லது மேலேயோ அமர்ந்து சாப்பிடும்.

சாப்பிடறப்ப இந்த சிறகு ஆட்டிக்கிட்டே இருக்கிறது தகவல் பரிமாற்றம் கூட சொல்லலாம்.

நின்னுகிட்டே  ஒரு இடத்தில் பறக்கக்கூடிய அந்த தன்மை இருந்தும் கூட அது அதிகமா பயன்படுத்துகிறது இல்லை.

திராட்சை போன்ற பழங்களில் உள்ள சாரை உறிஞ்சி சாப்பிடுற தன்மை இதுக்கு இருக்கு.பூவிதழ்களை கிழித்து தன்னோட வாயை உள்ள விட்டு உறிஞ்சியும் சாப்பிடும்.இது மாதிரி சாப்பிடுவதனால்  மகரந்த சேர்க்கை நடப்பதற்கு பயனா இருக்கு.

இதனுடையை வாய் பத்து செண்டிமீட்டருக்கும் குறைவான கீழ்நோக்கி வளைந்துள்ள அளகுள்ள நீண்ட வாயா இருக்கும்.

நாக்கு உறிஞ்சான் போன்ற அமைப்புல இருக்கும். அதனால பூவில் இருக்கும் தேனை உறிஞ்சி சாப்பிடுவதற்கு வாயும் நாக்கும் வசதியா அமைஞ்சிருக்கு.

பூக்களில் இருக்கக்கூடிய தேனை எடுக்கறதுக்கு இது போறப்ப அங்க வரக்கூடிய சிறு பூச்சிகளை பிடிச்சுட்டு வந்து தன் குஞ்சுக்கு ஊட்டும். சிலந்தி வண்டு, எறும்பு, தேனீ இது மாதிரி பூச்சிகள் தான் அது.

இது மைனா போன்று கூடு கட்ட சிறு குப்பைகள், சிலந்தி வலை, பஞ்சு, பூஞ்சான், செடிகளுடைய சிறு பட்டை இதையெல்லாம் கொண்டு வந்து தான் கூடு கட்டும்.

இது சரியா பிணைச்சு கட்டுறது இல்ல, ஆனா சிலந்தி வலையில் கூடிய அந்த ஒட்டும் தன்மையை வச்சு அஞ்சு நாளிலிருந்து பத்து நாளைக்குள்ள கூடு தயார் பண்ணிடும்.

தன்னுடைய இறகு அப்படியே பறந்து உள்ள அமர்ந்து, அமர்ந்து வீடு கட்டுவாதல்  அந்த கூடு வட்ட வடிவமாக வரும்.

கூடு பெரும்பாலும் மரத்தின் கிளைகளிலும், செடிகளில் தான் கட்டும். சில சமயங்களில் துணி காயப்போட பயன்படுத்தக்கூடிய கம்பிகளையும் பயன்படுத்தாம நம்ம ரொம்ப நாளைக்கு விட்டு வச்சிட்டோம்னா அந்த கம்பிகளையும், கழிவறைகள் உடைய இடுக்குகள் கூட கட்டும்.

ஒரு பறவை ஒரு தடவைக்கு இரண்டு முட்டை மட்டும் தன இடும். பெண் பறவை மட்டும்தான் அடக்காக்குது, வீடு கட்டுவதும் அதுதான் எடுத்துக்குது. இரண்டு பறவைகளும் மாத்தி மாத்தி அட காக்குற பழக்கம் இதுக்கு இல்ல.

ஆண் பறவை வந்து குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கிறதுல கொஞ்சம் பங்கு எடுத்துக்குது. ஆனாலும் அதையும் பெண் பறவை தான் அதிகமா பங்களிப்பு பண்ணும்.