அதிரடியாக பாதிக்குப் பாதி குறைந்த இ பைக்கின் விலை!!

அதிரடியாக பாதிக்குப் பாதி என விலையை குறைக்த்த நிறுவனம். என்னதான் நடக்கிறது பார்க்கலாம் இந்த பதிவில். புதிதாக ஒரு ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என நினைக்கும் பலருக்கும் இப்போது முதல் தேர்வாக இருப்பது இ பைக்குகள் தான்.

எரிபொருள் செலவு மிச்சப்படுத்துவதோடு சொகுசான பயணத்தையும் இந்த இ பைக் கொடுப்பதே இதனை தேடி வருவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்க காரணம். இந்தியாவிலேயே இ பைக் பயனர்கள் தமிழகத்தில் தான் அதிகம் என்பதை அதற்கு சாட்சி,

இதில் ஓலாவும், ஏத்தர் நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு மக்களிடம் தங்கள் பைக்குகளை கொண்டு சேர்க்கிறது. புதுவித லுக் அசத்தலான வண்ணங்கள் என ஆரம்பத்தில் அமர்க்களம் காட்டிய ஓலா நிறுவனம் அத்தனை எளிதாக மார்க்கெட்டில் தன்னை நிலைநிறுத்த முடியவில்லை. காரணம் தரம் இல்லாத தயாரிப்பு என இணையவாசிகளின் வசவுகளை வாங்கி கட்டிக் கொண்டது. 

இந்த சூழலில் தான் தனது எஸ்1 மாடலின் விலையை வெறும் 49000 99 ரூபாயாக குறைத்து திடீரென மார்க்கெட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விலை குறைப்புக்கு காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், சமீபகாலமாக ஓலா இ பைக்குகள் பயனர்களை கலங்கடித்தது நினைவிருக்கும், செல்லும் வழியிலேயே திடீரென தீப்பிடித்து எறிந்த வாகனங்கள், சாலையின் நடுவே திடீரென நின்றது, பார்க்கில் நிறுத்திய போது வெயிலின் தாக்கத்தால் பற்றி எரிந்தது என தனது பயனர்களை ஓலா ரணகளப்படுத்தி இருந்தது. 

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஆசையாக வாங்கிய ஓலா பைக் இருபதே நாட்களில் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதால் நேராக ஷோரூமுக்கே சென்று அங்கே தீ வைத்து எரித்த காட்சியும் சமீபத்தில் அரங்கேறியது.

பல விமர்சனங்கள், பற்றி எரியும் வாகனங்கள் என எல்லாம் வரிசை கட்டி வந்தாலும் அதையெல்லாம் சரி செய்யும் நிலையில் நிறுவனம் இல்லை என்ன குறையை வாடிக்கையாளர்கள் சொன்னார்களோ அதே குறைகளோடு தான் அடுத்தடுத்த வாகனங்களும் சந்தைக்கு வரிசை கட்டி வந்தன.

இதனால் வாடிக்கையாளர்கள் ஓலா இ பைக்குகளுக்கு  டாட்டா காட்டிவிட்டு மற்ற நிறுவனங்களை தேடிச் சென்றனர் கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் தனது வாகனத்தின் விலகி கணிசமாக குறைத்து இருக்கிறது ஓலா நிறுவனம்.

இந்த மாடலுக்கான பேட்டரி கெபாசிட்டி இரண்டு கிலோ வாட்டாகவும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 95 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டு இருக்கிறது. இதற்கு முன்பாக எஸ்1 பாடலின் விலை ஒரு லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.