காமராஜர் வாழ்க்கை வரலாறு

ஒவ்வொரு ஆண்டும் உயர்கல்விக்கான All India Survey on Higher Education ( AISHE) அமைப்பின் ஆய்வறிக்கையை மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகும் போதெல்லாம், அது நாட்டிற்க்கே சொல்லும் செய்தி ஒன்றுதான். தமிழ்நாடு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்து, இந்தியாவிலேயே மாணவர் சேர்க்கை விகிதம் அதிகம் கொண்ட மாநிலங்களில் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் தமிழ்நாடு இடம்பெறுகிறது என்பதுதான்.

ஒவ்வொரு ஆண்டும் ஆய்வறிக்கை வெளியாகும் போதெல்லாம், இதனைக் கண்டு தமிழ்நாடு பெருமைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த பெருமைக்கு எல்லாம் காரணம், 60 வருடங்களுக்கு முன்பு ஒப்பற்ற தமிழின பெருந்தலைவர் ஒருவர் தொடங்கி வைத்த திட்டம் தான். அதுதான் பள்ளி மாணவர்களுக்கான இலவச மதிய உணவு திட்டம். இதனை செயல்படுத்தி சமூக மாற்றத்தை ஏற்படுத்திய அந்த தலைவர் கர்மவீரர் காமராஜர்

1955 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சென்னை பூங்கா நகரில் சென்னை ராஜிய தொடக்கப்பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர் நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. சென்னை மாநகராட்சி கல்வி அலுவலராக பணிபுரிந்த அனுபவம் பற்றி சுந்தரவ வடிவேலுவிடம் உரையாடினார் காமராஜர்.

சில பள்ளிகளில் சரியான மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டதை அறிந்தார் காமராஜர். அப்போதுதான் காமராஜரின் மனதில் ஒரு சிந்தனை உதித்தது. அந்த திட்டம்தான் இலவச மதிய உணவுத் திட்டம்.

நீதிக்கட்சி தொடங்கிய உணவு திட்டம் சில மாநகராட்சி பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதனை தமிழ் நாடெங்கும் செயல்படுத்த முடிவு செய்தார். அந்த கூட்டத்திலேயே தனியார் பள்ளிகளும் இத்தகைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என காமராஜர் வலியுறுத்தினார். அத்திட்டத்தை தள்ளி வைக்கும்படி மத்திய அரசு அதிகாரிகள் சொன்னதை காமராஜர் ஏற்றுக்கொள்ளவே இல்லை.

மதிய உணவு திட்டத்தில் மட்டும் கை வைக்காதீர்கள் என்று அத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு பெற்று வந்தார். 1956, 57 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மதிய உணவு திட்டம் குறித்தும் அறிமுகம் செய்யப்பட்டது. 1956 ஜூலை 13ஆம் தேதி இத்திட்டம் தமிழ்நாடு எங்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. 

உணவுக்காக பள்ளிப்படிப்பை விட்டு வேலைக்கு அனுப்பப்பட்ட மாணவர்களெல்லாம் மதிய உணவு திட்டத்தால் மீண்டும் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மூடப்படும் நிலையிலிருந்து பள்ளிகளெல்லாம் மீண்டும் திறக்கப்பட்டு பள்ளி மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்க தொடங்கியது. மாணவர்களின் அடிப்படை தேவை கல்வி மற்றும் உணவு என்பதை காமராஜர் தனது தொலைநோக்கு பார்வையால் உணர்ந்ததால் தான் இன்று தமிழ்நாடு கல்வியிலும், அறிவிலும் சிறந்து விளங்குகின்றது. இது அவரது திறமைகளை போற்றிப் புகழும் வரலாற்றின் ஒரு பக்கம் மட்டும்தான்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி எப்படி தேசத்திற்கே முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதையும், ஒரு நாட்டின் முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் இன்றுவரையிலும் இருக்கிறார் கர்மவீரர் காமராஜர்.

1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்த விருதுப்பட்டி கிராமத்தில் குமாரசாமி, சிவகாமி தம்பதிக்கும் மகனாய் பிறந்தார் காமராஜர். தங்களது குலதெய்வ பெயரான காமாட்சி என்ற பெயரையே பெற்றோர் காமராஜருக்கு சூட்டினர். மகனை ஆசை ஆசையாக ராஜா என்று அழைத்ததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் அப்படியே அழைக்க காமாட்சி என்ற பெயர் காமராஜ் என மாறியது.

பள்ளிப்படிப்பில் பெரும் ஆர்வம் காட்டி வந்த காமராஜருக்கு, திடீரென ஒரு அதிர்ச்சி செய்தி வந்தது. அதுதான் அவருடைய தந்தை குமாரசாமியின் மரணம். இதனால் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு குடும்பத்தின் வறுமையை சமாளிக்க வேலைக்கு செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. அப்போது காமராஜரின் தாய்மாமன் கருப்பையா தான், அவரது குடும்பத்துக்கு ஆதரவு கரம் நீட்டினார். அவர் நடத்தி வந்த துணிக்கடையில் காமராஜரை வேலைக்கு அமர்த்தினார். அந்த துணிக்கடை தான் காமராஜருக்கு அரசியலை கற்றுக் கொடுத்தது. 

சுதந்திரப் போராட்டம் உணர்ச்சி கொந்தளிப்புடன் நடந்து கொண்டிருந்த காலகட்டம் என்பதால், காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக சுதந்திர வேட்கையை கொண்டு சேர்த்துக் கொண்டிருந்தனர். அந்த வேட்கை காமராஜரையும் தொற்றிக் கொண்டது. வரதராஜு நாயுடு, சத்தியமூர்த்தி, திருவிக போன்றோரின் சுதந்திரத்தை நோக்கிய பேச்சு காமராஜருக்குள் அரசியல் ஆர்வத்தை தூண்டின. 

காங்கிரஸ் பொதுக்கூட்டங்களுக்கு செல்வது காங்கிரஸ் தலைவர்களின் பேச்சைக் கேட்பது என்றிருந்த காமராஜர். ஒரு கட்டத்தில் நேரடி அரசியலில் ஈடுபட தீர்மானித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சிக்கு கொடி கட்டுவது தொடங்கி மக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிப்பது வரை கட்சியின் அடிப்படை தொண்டனாக அனைத்து வேலைகளையும் துடிப்புடன் செய்தார். 

அந்த காலகட்டத்தில் நீதிக்கட்சி தான் காங்கிரசிற்கான எதிர்க்கட்சி என்பதால், எங்கெல்லாம் நீதிக்கட்சி பொதுக்கூட்டம் நடக்கிறதோ அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதே காமராஜரின் வழக்கமாக இருந்தது. இதன் மூலம் கட்சியில் முக்கிய அங்கீகாரத்தையும் பெற்றார். ஆனால் அரசியலில் ஈடுபடுவதால் காமராஜரின் எதிர்காலம் வீணாகி விடுமோ என்று பயந்த குடும்பத்தினர், காமராஜரை திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கே ஒரு மரக்கடையில் வேலையில் சேர்ந்தாலும் அங்கும் கட்சி வேலைகளை பார்ப்பதாக குடும்பத்தினருக்கு செய்தி வர, அவரை மீண்டும் சொந்த ஊருக்கே வரவழைத்துவிட்டனர்.

கடைகளில் வேலை பார்க்க வேண்டாம் என இன்சூரன்ஸ் ஏஜென்ட் வேலை வாங்கி கொடுத்தாலும், காமராஜரின் கவனம் முழுவதும் அரசியலின் மீது இருந்தது. திருமணம் செய்து வைத்தால் ஆவது குடும்பத்தை சுற்றி இயங்குவார் என்று குடும்பத்தினர் எண்ணினாலும் அந்த வாய்ப்பை அடியோடு நிராகரித்த காமராஜ், இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என தீர்க்கமாக கூறினார்.

ஆங்கிலேய அரசுக்கு எதிராக உப்பு சத்தியாகிரகம் என்ற மிகப்பெரிய போராட்டம் தமிழ்நாட்டிலும் எழுச்சியுடன் நடந்த போது, அந்த போராட்டத்தில் இளைஞரான காமராஜர் கலந்து கொண்டு சிறை சென்றார். இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். அதுவே காமராஜ் தனது வாழ்க்கையில் அனுபவித்த முதல் சிறைவாசம்.

சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு காந்தியும், காங்கிரசும் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டார். ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கேற்றதன் மூலமாக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொறுப்பில் இருந்து மாநில பொறுப்புக்கு உயர்ந்தார் காமராஜ். சென்னை மாகாண காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் என்ற பதவி அவருக்கு கிடைத்தது.

கட்சியில் காமராஜருக்கு செல்வாக்கு உயர விருதுநகர் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்தார் என்று அவர் மீது வெடிகுண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர்களின் சட்டரீதியான தலையிட்டால் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் காமராஜர். அதனை தொடர்ந்து காமராஜரின் அரசியல் பாதையில் தொடர்ந்து ஏர் முகம் தான்.

1936 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜ் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டன. 1937 இல் தான் காமராஜர் முதன்முதலில் தேர்தலை சந்தித்தார். அந்த ஆண்டு நடந்த சட்டமன்ற பொது தேர்தலில் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட காமராசுக்கு வாய்ப்பு அளித்தார் ஸ்ரீதர் சத்தியமூர்த்தி. 

சொந்த தொகுதியில் போட்டியிட்ட காமராஜர் எதிர்த்து யாரும் வேட்பாளராக நிற்கவில்லை என்பதால் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். அன்று முதல் கட்சி பணி, மக்கள் பணி என இரண்டு பக்கமும் சுற்றி சுழண்டு செயல்பட்டார். இதன் காரணமாகவே 1940 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் காமராஜர்.

அந்த சமயத்தில் நடந்த போராட்டம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டிருந்த காமராஜ் சிறையில் இருந்தபடியே நகர சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆங்கிலேய அரசுக்கு எதிராக 1942 ஆம் ஆண்டு காந்தி ஆகஸ்ட் புரட்சியை அறிவித்தார். அந்தப் போராட்டத்தை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தின் பங்கேற்க பம்பாய் சென்ற காமராஜ் அங்கே நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களை காவல்துறையின் கண்ணில் படாமல் ரயில் வழியாக தமிழகம் கொண்டு வந்து காங்கிரஸ் தொண்டர்களிடம் சேர்த்தார்.

கட்சிக்காக எப்பேர்பட்ட ஆபத்தையும் சந்திக்க காமராஜ் தயாராக இருப்பதைக் கண்டு சொந்தக் கட்சியினரே வியந்தன. காங்கிரஸில் காமராஜரின் மதிப்பு மென்மேலும் வளர தொடங்கியது.

தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் வந்த காந்தி ஹரிஜன் பத்திரிக்கையில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் தமிழ்நாட்டில் ராஜாஜிக்கு எதிராக ஒரு குழு செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு கடுமையாக எதிர்வினை ஆற்றிய காமராஜர். தான் வகித்து வந்த ஆட்சி மன்ற குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.காந்தியை எதிர்த்த காமராஜரின் இந்த துணிச்சல் கட்சிக்குள் காமராஜரின் மதிப்பை உயர்த்தியது. 

1946 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் காமராஜர். அப்போது சென்னை மாகாண முதலமைச்சராக முத்துரங்கனை தேர்வு செய்தார் காமராஜர். ஆனால் இறுதியில் த. பிரகாசம் அவர்களே வெற்றி பெற்றார். 

ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் காமராஜர் உள்ளிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களை பொருட்படுத்தாமலேயே இருந்தார். முதல்வர் பிரகாசம் இதனால் கட்சிக்கொள்ளும் ஆட்சிக்குள்ளும் குழப்பம் ஏற்பட தொடங்கியது. முதலமைச்சர் பிரகாசத்திற்கு எதிராக கட்சிக்குள் அதிர்ச்சி குரல்கள் அடுத்தடுத்து எனத் தொடங்கின. இதன் விளைவாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பிரகாசம். 

இதன் பின்னர் நடந்த சட்டமன்ற குழு தலைவர் தேர்தலில் காமராஜ் முன்னிறுத்திய ஓமந்தூர் ராமசாமி வெற்றி பெற்று முதலமைச்சரானர். இங்கிருந்தே காமராஜரின் கின்மேக்கர் ஆட்டம் தொடங்கியது. இதுவே லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமராக்கும் கிங்மேக்கர் பயணத்தை தொடங்கி வைத்தது.

சட்டமன்ற கூட்டங்களில் சுவாரசியமாக உரையாற்றுவது, கைதட்டல்களை பெறுவதில் எல்லாம் காமராஜருக்கு துணியும் விருப்பமில்லை. மாறாக மக்களுக்கு ஆக வேண்டிய திட்டங்களை நோக்கியே கவனம் செலுத்தினார். அதே சமயம் கட்சி வளர்ச்சிப் பணியிலும் காமராஜர் உழைப்பும், ஆர்வமும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

நேர்மையான முதலமைச்சர் ஆக விளங்கிய போதும் ஓமந்தூர் ராமசாமிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் பலரும் போர்க்கொடி தூக்க, ஓமந்தூராரை பதவி விலகச் செய்துவிட்டு அவருக்கு பதிலாக பிஎஸ் குமாரசாமி ராஜாவை முதலமைச்சராகினார் காமராஜ். இதன் மூலம் இரண்டாவது முறையாக கிங்மேக்கராக மாறி இருந்த காமராஜ் கட்சியிலும், ஆட்சியிலும் பெரும் செல்வாக்கை பெற்றார்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பின் நடந்த முதல் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை காங்கிரஸ் கட்சிக்கு இல்லாததால், மைனாரிட்டி அரசை அமைக்க வேண்டிய சூழல் உருவானது. ஒருபுறம் மைனாரிட்டி அரசுக்கு தலைமை வகிக்க மூத்த காங்கிரஸ் தலைவர்கள் யாரும் முன்வரவில்லை. மறுபுறம் ஆட்சி அமைத்தாலும் அந்த ஆட்சியை தக்க வைப்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழுந்தது.

அப்போதுதான் அரசியலில் இருந்து ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ராஜாஜியை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வந்து அவரை முதலமைச்சராக்கினார் காமராஜ். அரசியல் எதிரிக்கும் ஆட்சி அதிகாரத்தை கொடுத்திருக்கிறார் காமராஜர் என்ற பேச்சு எழத் தொடங்கின. ஆட்சி பொறுப்பேற்ற  முதலமைச்சர் ராஜாஜி புதிய கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

பெற்றோர் செய்யும் தொழிலை அவர்களது வாரிசுகளும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது போல குலக்கல்வி திட்டம் என்று விமர்சித்த எதிர்க்கட்சிகள், ராஜாஜி கொண்டு வந்த அந்த திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கினர். திட்டத்தில் காமராஜருக்கும் உடன்பாடில்லை என்றாலும் திட்டத்தை கொண்டு வருவதில் முதலமைச்சர் ராஜாஜி பிடிவாதம் காட்டினார்.

இதன் விளைவாக கட்சிக்குள் அதிர்ப்தி எழவே முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் ராஜாஜி, அடுத்து யாரை முதலமைச்சராக்குவது என்ற கேள்வி எழுந்த போது காங்கிரஸ் மூத்த தலைவர்களின் பார்வை காமராஜர் மீது பட்டது, இதனை தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பை ஏற்க சம்மதித்தார் காமராஜர், ஆனால் அவருக்கு எதிராக ராஜாஜியின் ஆதரவுடன் சி சுப்பிரமணியம் நிறுத்தப்பட்டிருந்தார், போட்டியின் முடிவில்  சி சுப்பிரமணியத்துக்கு 41 வாக்குகள் மட்டுமே கிடைக்க அவரை விட இரண்டு மடங்கு வாக்குகள் அதிகம் பெற்று 1954 ஏப்ரல் 13-ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றார் காமராஜர்.

முதலமைச்சருக்கான  தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டபோதும் சி சுப்பிரமணியத்தின் அறிவு, ஆற்றல், அனுபவத்தை அங்கீகரித்து அவரையும் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார் காமராஜர். அதேபோல தன்னை எதிர்க்கும் வேட்பாளரை முன்மொழிந்த பக்தவச்சலத்தையும் அவருடைய அரசியல் நிர்வாக அனுபவத்தையும் அங்கீகரித்து அமைச்சராக்கினார்.

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் ரெட்டைமலை சீனிவாசனின் பேரன் பரமேஸ்வரனை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக்கி பெரும் புரட்சி செய்த காமராஜர் குலக்கல்வி திட்டத்தை ரத்து செய்தார்.

காமராஜர் முதலமைச்சரானாலும் அவர் அப்போது சட்டமன்ற உறுப்பினர் அல்ல எனவே முதலமைச்சர் பதவியில் நீடிக்க குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். குலக்கல்வி திட்டத்தை ரத்து செய்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அப்போது புதிதாக தொடங்கப்பட்டிருந்த திமுக காமராஜரை ஆதரித்தது.

அந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் காமராஜர். எப்போதும் மக்கள் நலன் குறித்து யோசிக்கின்ற முதலமைச்சர் என்பதால் கிருஷ்ணகிரி நீர்த்தேக்க திட்டம், சாத்தனூர் நீர்த்தேக்க திட்டம், அமராவதி புள்ளம்பாடி நீர்த்தேக்கத் திட்டங்கள் என ஏராளமான திட்டங்கள் செயல்படுவோம் பெற்றன.

நீர்மின் திட்டம், அனல் மின் திட்டம் என்று தொலைநோக்கு பார்வையுடன் சிந்தித்து மத்திய அரசிடம் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி பல திட்டங்களை கொண்டு வந்தார். காமராஜரின் கருணை உள்ளத்தில் உதித்த அற்புதமான திட்டம் தான் மதிய உணவு திட்டம். பள்ளிக்கு வரும் ஏழைக்கு குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தார் காமராஜர்.

ஒரு கட்டத்தில் மதிய உணவுக்காக பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் கல்வி கற்கும் குழந்தைகளின் எண்ணிக்கையும் உயர்ந்தது. இன்றும் தமிழ்நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் ஒன்றான இத்திட்டம் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது. இதனாலே அவர் கல்விக்கண் திறந்த காமராஜர் என அழைக்கப்படுகிறார்.

1957-ல் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்தல் வந்தது. சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டார் காமராஜர். அந்த தேர்தலில் காங்கிரஸ் இறுதி பெரும்பான்மையை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்ததோடு இரண்டாவது முறையாக முதலமைச்சரானால் காமராஜர். 

சென்னை கிண்டி அறுவை சிகிச்சை கருவிகள் தொழிற்சாலை, நீலகிரி கச்சா பிலிம் தொழிற்சாலை, இந்தி டெலிபின்டர் தொழிற்சாலை, துப்பாக்கி தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரி சுரங்கங்கள், சேலம் உருக்காலை, சென்னை ஆவடி இராணுவ தளவாட தொழிற்சாலை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, அரக்கோணம் இளைஞரணி எங்கு தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர முயன்றார் முதலமைச்சர் காமராஜர்.

மாநிலத்தின் தொழில் வளர்ச்சியில் முதலமைச்சர் காமராஜர் முனைப்புடன் செயல்பட்டார். இதன் பலனாக தமிழக முழுக்க ஏராளமான தொழில்பேட்டைகள் நிர்மாணிக்கப்பட்டன. காமராஜர் ஆட்சியில் மட்டும் தமிழ்நாட்டில் 159 நூற்பாலைகள், 30 லட்சம் நுட்பு கதிர்கள், 8000 துணிநூற்பு பாவுகள், அதிக எண்ணிக்கையில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.

சென்னை வண்டலூரில் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனம் சார்பாக ஆண்டுக்கு 3000 கார்கள், 1500 ட்ரக்குகள், இன்ஜின்கள், வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக சிம்சன் இந்தியா பிஸ்டன்ஸ் டிவிஎஸ் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. முக்கியாமாக பனியன் கம்பெனிகள் தொழில் வளர்ச்சியில் கணிசமான பங்களிப்பை செய்திருந்தது. 

விவசாயிகள் நிலை பற்றி அவருக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களுக்காகவே கிராமப்புறங்களில் நுகரப்பட்ட மின்சாரத்தில் 70% மின்சாரம் விவசாய மோட்டார் பம்ப் செட்டுகளை இயக்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. 1963ல் மொத்தமாக 10,000 விவசாய பம்பு செட்டுகள் தமிழ்நாட்டின் மின்சாரத்தை கொண்டு இயக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டது.

காமராஜர் ஆட்சி காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் ஒரு பக்கம் தூய்மையாகவும், துரிதமாகவும் நடந்து கொண்டிருந்தாலும் சட்டம் ஒழுங்கு சார்ந்து சில பிரச்சினைகள் இருக்கவே செய்தன. அவற்றில் முக்கியமானது முதுகுளத்தூர் கலவரம், தேர்தல் பிரச்சினையை தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையிலான முதல் இரு சமுதாயத்தினருக்கு இடையிலான மோதலாக உருமாறியது.

அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு சர்ச்சைக்கு உள்ளானது. அரசியல் சர்ச்சைகள் ஆயிரம் இருந்தாலும் ஆக வேண்டிய காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் காமராஜர். 

காமராஜரை அரசியல் களத்தில் ஆவேசமாக எதிர்த்து குரல் கொடுத்தவர்களும், களமாடியவர்களுமே பாராட்டுவதும் போற்றுவதும் என்கிற அதிசயம் தமிழ்நாட்டில் அரங்கேறியது. எதிர்க்கட்சிகளும் பாராட்டும் வகையில் ஆட்சி நடத்திய காமராஜருக்கு 1962 தேர்தல் களமும் வெற்றியை கொடுத்து மூன்றாவது முறையாக காமராஜரை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதே சமயம் அரசியல் ரீதியாக அவரை கவலையில் ஆழ்த்தியது தேர்தல் முடிவு அந்த தேர்தலில் ஐம்பது இடங்களை கைப்பற்றி தமிழ்நாடு சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி ஆக திமுக உருவெடுத்தல். அந்த வெற்றியை மற்ற தலைவர்களெல்லாம் வெறும் வீக்கம் என்று சொன்னபோது, காமராஜர் மட்டுமே திமுக வளர்கிறது என துல்லியமாக கணித்தார். அப்போது தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அளவிலும் காங்கிரஸ் கட்சிக்கு சரிவு ஏற்பட்டிருந்தது. அந்த சரிவிலிருந்து காங்கிரசை மீட்டெடுக்க வேண்டுமென்றால் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டும். அதற்கு பதவியில் இருக்கும் தலைவர்கள் விலகி கட்சிப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றார் காமராஜர்.

அந்தத் திட்டத்தை நேருவிடம் சொன்னபோது அதை ஏற்றுக் கொண்ட நேரு அதற்கு காமராஜர் திட்டம் என பெயர் வைத்தார். அதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் பதவியில் இருந்து விலகத் தயாரானார் காமராஜர். காமராஜரின் பதவி விலகல் முடிவை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.

1954ல் காமராஜர் முதலமைச்சராக வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தியவர் பெரியார் தான். காமராஜரின் ஆட்சியை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்றார் பெரியார். தேர்தல் சமயங்களில் காமராஜரின் பிரச்சார பீரங்கியாக பெரியாரின் விடுதலை பத்திரிக்கை செயல்பட்டது. ஒரு வேலை காமராஜ் பதவி விலகினால் அது காங்கிரஸ் தற்கொலை செய்து கொண்டதற்கு ஒப்பானது என்றார் பெரியார். ஆனாலும் கட்சி பணிக்காக முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் காமராஜர்.

1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. ஒரு சில நாட்களில் அவசரநிலை தளர்த்தப்படலாம் என நம்பிய காமராஜருக்கு அடுத்தடுத்து நடந்த அரசியல் கைது படலம் அவரது உடல் நிலையை மோசமாகியது.

கடுமையான காய்ச்சல், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பு போன்றவற்றால் காமராஜரின் உடல்நிலை பலவீனமடைந்தது. 1975 ஜூலை 15ஆம் தேதி தனது 73 ஆம் பிறந்த நாளை மிக எளிய முறையில் கொண்டாடினார் காமராஜர். அவசர நிலை காரணமாக தன்னைத்தானே வீட்டுக்குள்ளேயே அடைத்துக் கொண்டவர். 1975 அக்டோபர் இரண்டாம் தேதி பிற்பகல் 3 15 மணிக்கு நெஞ்சு வலியால் இயற்கை எய்தினார்.

இந்த பேர் அதிர்ச்சி சம்பவத்தால் இந்தியாவே அதிர்ந்து போனது. முதலமைச்சராக இருந்த கருணாநிதி காமராஜருக்கு முழு அரசு மரியாதை உடன் இறுதி நிகழ்வை நடத்த உத்தரவிட்டார். 1976 ஆம் ஆண்டு காமராஜருக்கு உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.

எத்தனை முதலமைச்சர்கள் வந்தாலும் காமராஜர் என்று ஒரு எளிமையான முதலமைச்சர் இருந்தார் தெரியுமா என்பதை இன்னும் பலரது பேச்சாக இருக்கிறது. தனது கட்சி பதவியை எல்லாம் தாண்டி கொண்ட கொள்கையாலும் எளிமையான வாழ்வியலாலும் இன்றும் என்றும் மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர் காமராஜர்.