TN School Teacher: ஆசிரியர்களுக்கு சவால்! தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் மீண்டும் அமலில்!

தமிழ்நாட்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

மாணவர்கள் சரியான நேரத்தில் வந்தாலும், ஒரு சில ஆசிரியர்கள் தொடர்ந்து தாமதமாக வந்து, சீக்கிரம் புறப்பட்டு சென்றுவிடுகின்றனர். இது குறித்து புகார்கள் அதிகம் வந்தன.

ஆசிரியர்களைக் கட்டுப்படுத்தும் வகையில், 2019ஆம் ஆண்டு இறுதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர் வருகைப் பதிவேடு பயோமெட்ரிக் முறையை தமிழக அரசு அமல்படுத்தியது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த முறையை தமிழக அரசு நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், ஆசிரியர்களுக்கு மீண்டும் கைரேகை அடிப்படையிலான வருகைப்பதிவு முறை (பயோ மெட்ரிக்) அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, அனைத்து வகையான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் கீழ்நிலை அலுவலர்கள், அனைத்து விவரங்களையும் தயார் செய்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் துணை அலுவலகங்கள், பயோமெட்ரிக் வருகைப் பதிவேடுகளை மேற்கொள்ளலாம்.

3½ ஆண்டுகளுக்கு முன்பு எத்தனை பயோமெட்ரிக் இயந்திரங்கள் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டன? எத்தனை இயங்குகின்றன, இயங்கவில்லை என்பது குறித்தும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.