TNSTC Recruitment 2024: இன்னைக்கு என்ன பர்க்க போறோம் அப்படீன்னா எல்லாரும் எதிர்பார்த்து காத்திருந்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்தி வெளியிட்டு இருக்காங்க. அது என்னன்னு பார்த்தீங்க அப்படின்னா தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 2,877 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்காங்க.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் எட்டு போக்குவரத்துக் கழகங்கள் மூலம், தினமும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் வெவ்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த சேவையானது நகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு பரவலாக கிடைக்கிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலரும் இந்த பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் காலியிப்பணியிடங்கள் நிரப்பபடாமல் இருந்துவந்ததால் சேவையை வழங்குவதில் சிரமங்கள் இருந்தன. இதனைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு, போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 2,877 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தப் புதிய பணியிட நிரப்பத்தால் போக்குவரத்துச் சேவை மேலும் மேம்படுத்தப்பட்டு, பயணிகளுக்கு ஒரு சீரான மற்றும் முழுமையான சேவையை வழங்குவதற்கு உதவியாக இருக்கும். இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் கீழ், டிசிசி பணியிடங்கள் எனப்படும் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணிகள் 2,340 இடங்களும், 537 தொழில்நுட்ப பணியாளர்கள் இடங்களும் நிரப்பப்படவுள்ளன.
இதில், சமூகநீதிக்கான ஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மொத்தம் 769 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 307 டிசிசி பணியாளர்கள் மற்றும் 462 தொழில்நுட்பப் பணியாளர்கள் இடங்கள் அடங்கும். மீதமுள்ள 2,108 இடங்கள் பிற பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பதவிகளுக்கான வயது வரம்பு
- குறைந்தபட்ச வயது: 18 வயது
- அதிகபட்ச வயது: 40 வயது
ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பதவிகளுக்கான தகுதி
- குறைந்தபட்ச கல்வித் தகுதி: 10+2 வகுப்புகளில் தேர்ச்சி அல்லது சமமான தேர்ச்சி அல்லது பட்டப்படிப்பு.
- இத்தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து கூடுதல் தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்து தெளிவுபெறவும்.
இந்த பணிக்கான அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க இங்கே Click செய்யவும்