மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – பள்ளிகள், கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பு

தமிழக மாணவர்கள் தீபாவளியை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறையை கொண்டாடினர். இந்த நிலையில் மீண்டும் அரசு நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

கந்த சிஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் நவம்பர் 7ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் சூரசம்ஹாரம் விழாவையொட்டி நவம்பர் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நவம்பர் 23-ம் தேதி ஜாம்புவானோடைத் தர்க்கா கந்தூரி விழா நடைபெறுகிறது. ஜாம்புவானோடை தர்க்கா கந்தூரி விழாவையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் நவம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த விடுமுறைக்கான மாற்று வேலை நாட்கள் திருவாரூரில் டிசம்பர் 7ம் தேதியும், தூத்துக்குடியில் டிசம்பர் 14ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.