புதன்கிழமை, அக்டோபர் 16, 2024
Home பயனுள்ள தகவல் Ettukudi Murugan : எட்டுக்குடி முருகன் சுவாரஸ்ய தகவல்கள்

Ettukudi Murugan : எட்டுக்குடி முருகன் சுவாரஸ்ய தகவல்கள்

Ettukudi Murugan | எட்டுக்குடி முருகன்

Ettukudi Murugan Temple – நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டுக்குடி முருகன் கோவில். வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் (Ettukudi Murugan) தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி என்ற ஊரில் இந்த கோவில் அமைந்துள்ளது. 

நாகப்பட்டினம் அருகில் உள்ள ஊரில் இறைத்தன்மை கொண்ட சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த சிற்பி ஒரு அற்புதமான முருகன் சிலையை செதுக்கிறான். அப்போது ஆட்சியில் இருந்த சோழ மன்னர் ஒருவர் திருப்பி வழித்த சிலையில் சொக்கிப் போனார்.

இதுபோன்ற தெய்வீகமான வேறு சிலைகளை அச்சிறுப்பி செதுக்க கூடாது என்ற எண்ணத்தில் அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டுமாறு மன்னர் உத்தரவிட்டார்.

இதனால் வேதனை அடைந்த சிற்பி பக்கத்து ஊருக்கு வந்தார். அந்த ஊரில் தனது விடாமுயற்சியால் மற்றொரு அற்புதமான முருகன் சிலையை வடித்தார். தெய்வீகமான அந்த சிலையில் இருந்து ஒளி வீச தொடங்கியது.

சிற்பம் முழுவதுமாக முடிவதற்குள் அச்சிலைக்கு உயிர் வந்து சிலையில் முருகன் அமர்ந்திருக்கும் மயில் பறக்கத் தொடங்கியது. அதை கண்ட மன்னர் அந்த மயிலை எட்டிப்பிடி என உத்தரவிட்டார். அதன் பிறகு அந்த மயில் அங்கேயே சிலையாக நின்று விட்டது. காலப்போக்கில் இந்த ஊரின் பெயரும் எட்டிப்பிடி என்பது எட்டுக்குடி என மாறிவிட்டது. 

இத்தளத்தில் சிவபெருமான் சௌந்தரநாயகர் எனும் திருநாமத்துடனும், அம்பிகை ஆனந்தவல்லி என்னும் திருநாமத்துடனும் காட்சி தருகின்றனர்.  வான்மீகர் சித்தர் சமாதி கோவிலில் உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் வன்னி மரம். தீர்த்தம் சரவணப் பொய்கை தீர்த்தம். அருணகிரிநாதரை ஸ்தலம் முருகனை தமது திருப்புகளில் பாடியுள்ளார். 

இந்த முருகன் கோயில் சிறப்பு என்னவென்றால் பார்க்கும் விதத்திற்கு ஏற்ப முருகன் விக்ரகம் நமக்கு காட்சி தருவதாகும். குழந்தையாக பார்த்தால் குழந்தை வடிவிலும், இளைஞனாக பார்த்தால் இளைஞன் போலவும், முதியோராக பார்த்தால் முதியூர் தோட்டத்திலும் முருகன் காட்சியளிக்கிறார்.

கோவில் பிரகாரத்தில் முருகனின் நவ தளபதிகளுக்கும் சிலைகள் இருக்கிறது. தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், ஐயப்பன், மகாலட்சுமி, சௌந்தரராஜ பெருமாள், நவகிரகங்கள் ஆகியோருக்கும் இங்கு சிலைகள் இருக்கின்றன. சித்ரா  பௌர்ணமி தினத்தன்று இங்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது. 

வான்மீகர் என்கிற சித்தர் சமாதி அடைந்த தளமாக இக்கோவில் இருக்கிறது. இக்கோவிலில் சஷ்டி விரதத்தையும், கௌரி விரதத்தையும் மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

தீபாவளி அன்று கடைபிடிக்கப்படும் கேதார கௌரி விரதம் தோன்றிய தளம் இது என கூறப்படுகிறது. இங்கு முருகன் அம்பாறையில் இருந்து அம்பு எடுக்கும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.

 பயந்த சுபாவம் உள்ள குழந்தைகள் இந்து முருகனை தரிசிப்பதாலும், இந்த முருகனின் வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்வதாலும் அவர்கள் பயம் நீங்கி படைப்பாற்றல் மிக்கவர்களாக திகழ்வார்கள் என்பது பக்தர்கள் கருத்தாகும். நீங்களும் இந்த கோவிலுக்கு வந்து இறைவனின் அருளை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான்..!

Aaradhyahttps://puthiyathagaval.com
வணக்கம்.. நான் ஆராத்யா நமது புதியதகவல்.காம் இணையதளத்தில் எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி..
RELATED ARTICLES

வானிலை இன்று: சென்னை மக்களுக்கான நல்ல செய்தி – ஆவலுடன் எதிர்பார்த்த நிம்மதி!

அதி கன மழைக்கான வாய்ப்பு சென்னைக்கு இன்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதமான மழையே பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் கூறிவருகின்றனர். இது சென்னை மக்களுக்கு சற்றே நிம்மதி தரும் செய்தியாக...

பிறப்புறுப்பில் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

பிறப்புறுப்பு அரிப்பு இது ஆண்களுக்கும் ஏற்படலாம், இருப்பினும் இது பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண் பிறப்புறுப்பின் அமைப்பு அதற்குக் காரணம்.யோனி பகுதியின் pH அளவு ஈரப்பதம் மற்றும் ஈரப்பதம் இல்லாமை ஆகிய...

தமிழக பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் செய்திகள்! இனி ஒவ்வொரு சனி, ஞாயிறும் விடுமுறை!

தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தியை தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2024-2025 ஆம் கல்வியாண்டில், தமிழ்நாடு பள்ளி நாட்களின் எண்ணிக்கையை 210 ஆகக் குறைத்து, செப்டம்பர் காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறையை ஐந்திலிருந்து...

Most Popular

வாய்ப்ப நழுவ விடாதீங்க! ரயில்வேயில் 8,113 வேலைகள்.. உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய ரயில்வேயில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை (NDPC) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8,113 காலி பணியிடங்கள்.இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஐந்து நாட்களே உள்ளன. எனவே, உடனடியாக விண்ணப்பிக்கவும்.காலியிடங்களின் விவரம் ஸ்டேஷன்...

வானிலை இன்று: சென்னை மக்களுக்கான நல்ல செய்தி – ஆவலுடன் எதிர்பார்த்த நிம்மதி!

அதி கன மழைக்கான வாய்ப்பு சென்னைக்கு இன்று இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிதமான மழையே பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் கூறிவருகின்றனர். இது சென்னை மக்களுக்கு சற்றே நிம்மதி தரும் செய்தியாக...

மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில் 106 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு Madurai Ration Shop Recruitment 2024

Madurai Ration Shop Recruitment 2024 மதுரை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள 106 காலி பணியிடங்களுக்கு 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் மட்டுமே தேவை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில்...

பிறப்புறுப்பில் அரிப்பு நீங்க பாட்டி வைத்தியம்

பிறப்புறுப்பு அரிப்பு இது ஆண்களுக்கும் ஏற்படலாம், இருப்பினும் இது பொதுவாக பெண்களை அதிகம் பாதிக்கிறது. பெண் பிறப்புறுப்பின் அமைப்பு அதற்குக் காரணம்.யோனி பகுதியின் pH அளவு ஈரப்பதம் மற்றும் ஈரப்பதம் இல்லாமை ஆகிய...

Recent Comments