சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும் தேதி எப்போது? புதிய தகவல்கள் வெளியானது!!

Sunita Williams Return Date: சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புஷ்வில்மோர் ஆகியோரை மீட்டு பூமிக்கு அழைத்துவர க்ரூ நயன் மிஷினின் டிராகன் மின்களம் விண்வெளிக்கு புறப்படுகிறது.

போயிங் நிறுவனத்தின் சோதனை விண்கலம் ஸ்டார் லைனர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் புஷ் வில்மோர் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்களுடன் கடந்த ஜூன் ஐந்தாம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டது.

புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஹீலியம் வாயு கசிவு டஸ்டர்கள் ஃபெயிலியர் என கோளாறுகள் ஏற்பட்டதால் மிஷன் பைலட் சுனிதா வில்லியம்ஸ் ஆட்டோ பைலட் முறையிலிருந்து மாற்றி மேனுவல் முறையில் இயக்கி விண்வெளி மையத்தை பத்திரமாக சென்றடைந்தார்.

ஸ்டார்லைன் நேரில் ஏற்பட்ட பழுதை சரி செய்ய முடியாததால் ஏழு நாட்களில் பூமிக்கு திரும்பி இருக்க வேண்டியவர்கள் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக அங்கேயே சிக்கி தவித்து வருகின்றனர். போயிங் நிறுவனத்தின் கௌரவ பிரச்சனை என்பதால் கோளாறுகளை சரி செய்து ஸ்டார் லைனரிலேயே இருவரையும் அழைத்து வருவோம் என்று ஆரம்பத்தில் கூறி வந்த நாசா பின்பு அது பேரழிவுக்கு வழிவகுக்கும் என்ற சர்வதேச நிபுணர்களின் எச்சரிக்கையை தொடர்ந்து தனது முடிவை கைவிட்டது.

இதை எடுத்து சர்வதேச விண்வெளி மையத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஸ்டார் லைனர் விண்கலம் வீரர்கள் யாருமின்றி காலியாக கடந்த ஏழாம் தேதி பூமிக்கு திரும்பியது. வேறு வழியின்றி சுனிதா வில்லியம்ஸ் வில்மோர் இருவரையும் அழைத்து வர எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் உதவியை நாடியது நாசா.

இதற்காக ப்ளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் விண்வெளி மையத்திலிருந்து க்ரூன்ட் மிஷனின் டிராகன் விண்கலத்தை சுமந்து கொண்டு பால்கன் நயன் ராக்கெட் நாளை புறப்படுகிறது. நிக் ஹாக் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய இரண்டு பேர் மட்டுமே செல்ல உள்ள இந்த விண்கலத்தில் மற்ற இரண்டு இருக்கைகள் காலியாக விடப்படும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் விண்வெளியிலிருந்து திரும்பும் போது சுனிதா வில்மோர் இருவரையும் இந்த விண்கலம் பூமிக்கு அழைத்து வரும்.