What is Karma in Tamil : கர்மா என்றால் என்ன ”போதுண்டா போதும் நினைப்பீங்க” இது எல்லாமே ஒரு விஷயத்தை தாங்க சொல்லுது!!

What is Karma in Tamil : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான். இல்லனா தளபதி ஸ்டைல சொல்லலாமா நீ பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எறிய உனக்கேக்கும். போதுண்டா போதும் நினைப்பீங்க இது எல்லாமே ஒரு விஷயத்தை தாங்க சொல்லுது கர்மா.

What is Karma in Tamil

What is Karma in Tamil விளக்கம் 

What is Karma in Tamil கர்மா நம்மளுடைய சிந்தனை, சொல், செயல் இதனால் அடுத்தவர்களுக்கு நல்லது நடந்தா நமக்கும் நல்லது நடக்கும். இல்ல இதுக்கு எதிர்மறையா நம்ம சிந்தனை சொல், செயல், இதனால் அடுத்தவர்களுக்கு கெட்டது நடந்தா நமக்கும் கெட்டது தான் நடக்கும். இந்த நம்பிக்கைதான் கர்மா.

கர்மா இருக்கிறது உண்மைதானா டவுட்டே வேணாம் கண்டிப்பா உண்மைதான். ஒரு குட்டி கதை மூலமா தெரிஞ்சுக்கலாமா ஒரு ஊர்ல நீலகண்டன் விவசாயி இருந்தாரு. அவர் தோட்டத்துல விளையிற மாங்கா, தக்காளி, கத்திரிக்காய், முருங்கைகானு நீலகண்டனுக்கு தேவைப்படுறது போக மீதியை அவர் ஊர்ல இருக்கிற ஒரே மளிகை கடையில் போய் கொடுப்பாரு.

காசுக்கு பதிலா உப்பு, பருப்பு, அரிசி வீட்டுக்கு தேவையான மல்லிகை சாமானை வாங்கிப் பாரு. நீலகண்டன் கிட்ட ஒரு நாள் கடைக்காரர் ஏம்பா நீலகண்டா என்னால அடிக்கடி உன் காய்களை எடை போட முடியல, நீயே வீட்ல எடை போட்டு கொண்டு வந்துடுன்னு சொல்லிட்டாரு.

ஒரு ஆறு மாசம் இவங்க ரெண்டு பேருக்கும் வியாபாரம் இப்படியே போக, திடீர்னு ஒரு நாள் காய்கறி கொண்டு வந்த நீலகண்டன அந்த கடைக்காரர் கண்டபடி திட்ட ஆரம்பிச்சிட்டாரு. ஒண்ணுமே புரியாத நீலகண்டன் எதுக்கு என்னை திட்டுகிறீர்கள் என்று கேட்கிறார்.

அதுக்கு அந்த கடைக்காரர் ரெண்டு நாளைக்கு முன்னாடி நீ கொண்டு வந்த காய்களை எடை போட்டு பார்த்தேன் எல்லாத்தையும் 100 கிராம் 200 கிராம் குறையுது. இவ்வளவு நாளா என்னை ஏமாத்திட்டு இப்போ ஒன்னும் தெரியாத மாதிரி கேள்வி கேட்கிறாயா என்று கடைக்காரர் கத்த ஆரம்பிச்சிடுறாரு.

பதிலுக்கு நீலகண்டன் பொறுமையாக அவர் கிட்ட நீங்க காய்களை என் வீட்டிலேயே எடை போட்டு கொண்டு வர சொன்னீங்க. ஆனா என்கிட்ட எடை கல் இல்ல, அதனால அளவு பார்க்க உங்க கிட்ட வாங்கின ஒரு கிலோ உப்பு, பருப்பு இத வச்சு தான் இத்தனை நாளா எடை போட்டு கொடுத்தேன்னு சொன்னாரு.

எப்பயோ ஒரு நாள் நா கம்மியா கொடுத்தேன் மல்லிகைப்பொருளால இவ்வளவு நாளா எனக்கு கம்மியான காய்கள் கிடைச்சிருக்குன்னு புரிஞ்சுகிட்ட கடைக்காரர் வாய மூடிட்டு பேசாம போயிட்டாரு.

கர்மா

இப்ப இந்த கதையோட கரு என்னன்னு நமக்கு புரிஞ்சிருக்கும். நம்மளும் அந்த கடைக்காரர் மாதிரி நம்ம செஞ்ச தப்பு மறந்துட்டு அடுத்தவங்க நமக்கு செஞ்ச கெட்டது நினைச்சு கோவப்பட்டு இருப்போம். ஆனால் கர்மா சும்மா விடுமா இல்ல கண்ண மூடுனா உலகமே இருட்டனு நினைச்சுக்கிட்டு நம்மளுடைய ஆசை, கோபம், வன்மம் இதனால் அடுத்தவர்களுக்கு கெட்டது செஞ்சா கண்டிப்பா நம்ம கிட்டயே திரும்ப வரும். சில சமயம் ரெண்டு மூணு மடங்கா கூட திரும்ப வரும். அதான் கர்மா எஃபெக்ட்.

ஆன்மீகத்துக்கும் எதாவது சம்பந்தம் இருக்கான்னு கேட்டா அது அவங்க நம்பிக்கையை பொறுத்தது. ஆனா கருமாக்கும் அறிவியலுக்கும் சம்பந்தம் இருக்கு. கிட்டத்தட்ட நியூட்டனின் மூன்றாம் விதி மாதிரி கூட சொல்லலாம். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு. இல்லைங்க இதுல லாஜிக்கே இல்லைங்க நினைச்சா இதுல லாஜிக் பாக்காதீங்க எதார்த்தத்தை பாருங்க.

நம்ம எல்லாருக்கும் ஒரு உள்ளுணர்வு இருக்கும். ஒரு கஷ்டத்தில் இருக்கிறப்ப நம்ம அன்னைக்கு செஞ்ச தப்புனாலதான் இப்ப அனுபவிக்கிறோம்னு தோணும். அப்படி தோணுதுனா கர்மாவ What is Karma in Tamil புரிஞ்சுகிட்டோம்னு அர்த்தம்.

நம்ம பசங்களுக்கு சின்ன வயதிலேயே தப்பு பண்ணா சாமி கண்ண குத்தும் சொல்லித்தரத விட ,நல்லது பண்ணா நமக்கு நல்லது நடக்கும் கெட்டது பண்ணா நமக்கு கெட்டது நடக்கும் என்கிற கர்மாவ சொல்லிக் கொடுக்கணும்.முடிஞ்ச அளவுக்கு நம்மள சுத்தி இருக்குறவங்களுக்கு நல்லது பண்ணுவோம் நம்மளும் நல்லா இருப்போம்.

Myna Bird in Tamil : மைனா பறவை பற்றி பலருக்கும் தெரிந்திடாத Top 10 ஆச்சர்ய தகவல்கள்

Scroll to Top