சர்க்கரை நோயாளிகள் தொடக்கூடாத உணவுகள்? இந்த குறிப்பிட்ட உணவுகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்கவும்!!

சர்க்கரை நோய் வந்தவர்களும் சரி வராமல் தடுக்க நினைப்பவர்களும் சரி இங்கே குறிப்பிடப்படும் எட்டு வகை உணவுகளை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

பீட்சா, கடைகளில் கிடைக்கும் பீட்சாக்களில் அதிக கலோரிகள் உள்ளன. எனவே நீங்கள் வீட்டிலேயே தயார் செய்து சாப்பிடுவது சிறந்தது.

பிரட் மற்றும் மாவு பொருட்கள் சர்க்கரை நோயாளிகள் முதலில் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.

பொறித்த உணவுகளை சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது அல்ல. உருளைக்கிழங்கு சிப்ஸ் , ஃப்ரைட் ரைஸ், பொறித்த கோழி தவிர்ப்பது நல்லது.

மது பொதுவாகவே மது உடலுக்கு தீங்கு விளைவிப்பது என்றாலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் அதிகமாக தீங்கு விளைவிக்க கூடியது.

கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள் சர்க்கரை நோயாளிகள் கொழுப்பு சத்து நிறைந்துள்ள பால் பொருட்கள் வெண்ணெய் ஐஸ்கிரீம் தயிர் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

மாமிசம் மாமிசத்தில் உள்ள கொழுப்புகள் உங்களது உடலின் கொழுப்பு அளவை அதிகரிக்க வைக்கும் இவை சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் இதய பாதிப்புகள் வரவும் காரணமாக அமைகின்றன.

ழங்களை சாப்பிடுவது சிறந்த ஒன்று. ஆனால் கடைகளில் கிடைக்கும் பழச்சாறுகளை வாங்கி அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

வாழைப்பழம் மற்றும் தர்பூசணி வாழைப்பழம் மற்றும் தற்போது சரி ஆகியவை சத்தானவை தான் என்றாலும் இதனை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது