படிக்காத மேதை, கைக்கொடுத்த தெய்வம் உள்ளிட்ட படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா காலமானார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் நட்டித்து நன்கு அறியப்பட்டவர் நடிகை சகுந்தலா.

சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த சகுந்தலா, சென்னையில் லலிதா பத்மினி ராகினி நடத்தும் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று நடனமாடி வந்தார்.

 அப்போது கிடைத்த அறிமுகங்கள் மூலம் திரையுலகில் நுழைந்து சிறு சிறு வேடங்களில் நடித்து நடிப்பை தொடங்கினார் சகுந்தலா.

 வயது மூப்பு காரணமாக அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.