weather update today tamil: தற்போதைய நிலவரப்படி குமரிக்கடலில் இருந்து இலங்கை அருகாமையில தொடர்ந்து வலுவான சுழற்சி நிலவி வருகிறது. அது குறிப்பாக தென்னிலங்கை அருகாமையில்தான் வலுவாக நிலவி வருகிறது. குமரிக்கடலை விட தென்னிலங்கை அருகாமையில வலுவாக நிலவி வருகிறது. இந்த நிலையில நேற்றைய தினம் இன்னும் தென்மாவட்டங்கள்ல பல்வேறு இடங்களில் மழை பெய்திருக்கிறது மற்றும் தென் உள்மாவட்ட பகுதிகள்ல நீண்ட காலமாக பெய்யாத இடங்கள்ல சிறப்பான மழை பெய்திருக்கிறது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே 28 ஆம் தேதி மிக மிக அருமையான சுற்றுமழை இந்த மாதத்திலேயே இந்த 28 ஆம் தேதி நேற்றுதான் நிறைவான நாள் கிட்டத்தட்ட அதற்கு முந்திய நாளும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்த நிலையில நேற்றைய தினம் தமிழ்நாட்டுல கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் திருச்சி மாவட்ட சுற்றுவட்டார பகுதியிலும் பல்வேறு இடங்கள்ல தென்மாவட்டங்கள்ல பல்வேறு இடங்களில் பரவலாக மழை மற்றும் வடதமிழகத்திலும் அங்கங்கே அங்கங்கே மழை இருந்தது.
இந்த நிலையில இன்றைய தினத்தை பொறுத்தவரையில எந்தெந்த மாவட்டங்கள்ல மழைக்கான வாய்ப்புகள் இருக்கிறது அப்படின்றதை பார்க்கலாம். இன்றைய நிலவரத்தை பொறுத்தவரையில குமரிக்கடலை நோக்கி சுழற்சி நகர்கின்ற காரணத்தினால இன்று இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களில் பரவலாக மழை இருக்கும். தென்கடலோர மாவட்டங்களில் இன்று இரவு நள்ளிரவு நேரங்களில் பரவலாக முதற்கட்ட மழையும்.
இரவு நள்ளிரவு நேரங்கள்ல டெல்டா மற்றும் வட மாவட்டங்களிலும் பரவலாக மழைக்கான வாய்ப்புகளும் மதிய நேரங்களில் காற்றின் திசைவேக மாறுபாடு காற்று சுழற்சி இருக்கிறது அதாவது மேற்கு மாவட்டங்கள் பாலக்காடு, கோயம்புத்தூர் ,திருப்பூர் மற்றும் அதே மாதிரி திருப்பூர் மாவட்டத்துடைய மேற்குப் பகுதிகள் பொள்ளாச்சி, தேனி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டங்கள்ல மேற்குத் தொடர்ச்சி மழை மாவட்டங்கள்ல மதியத்தில் மழை தொடங்கி தென் உள் மாவட்டங்கள் வரையிலும் மழை என்பது தீவிரமாக பெய்யும்.
மதியத்திற்கு பிறகு மழை தொடங்கி அந்த மழை தீவிரமாக பெய்து கொண்டே இருக்கும். சில இடங்கள்ல ஒவ்வொரு இடங்கள் இன்றைக்கு அந்த திருப்பூர் மாவட்டத்துடைய மேற்குப் பகுதிகளிலும் தென்காசி மாவட்டங்களிலும் தேனி மாவட்டங்களிலும் விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஒவ்வொரு இடங்கள்ல மேக வெடிப்பு மழை கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. 10 லிருந்து 15 முதல் 18 cm வரையிலும் ஒவ்வொரு இடங்கள்ல பதிவாகலாம். குறிப்பாக திருப்பூர் மாவட்டங்கள்ல பல்வேறு இடங்களில் மழை அதிகமாக இன்றைய தினம் இருக்கும்.
அதே மாதிரி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்ல பரவலாக இன்றைய தினம் மழை எதிர்பார்க்கலாம். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், ஒட்டஞ்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகள் இன்னும் பல்வேறு இடங்களில் பரவலாக மழைப்பொழிவு இன்றைய தினம் காணப்படும்.
இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஹார்ட்ஸ்பெட், கன்னியாகுமரி உட்பட அதுக்கு அடுத்தபடியாக இரவு மற்றும் நள்ளிரவு நேரங்கள்ல ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்கள்ல இன்று இரவு நள்ளிரவு நேரங்களில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் உறுதியாகவே பெய்யும். இன்று இரவு நள்ளிரவு நேரங்கள்ல தென்கடலோர மாவட்டங்கள்ல பலத்த இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகளும், வட மாவட்டங்கள் வட உள்மாவட்ட பகுதிகள்ல குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், காரைக்கால் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அரியலூர் பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்றைய தினம் இரவு மற்றும் நள்ளிரவு நேரங்களிலும் பிற்பகல் மதியத்திற்கு பிறகும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும்.