வெந்தயம் நன்மைகள் தினசரி இத சாப்பிடும்போது உடலில் நிகழும் அதிசயம் 2024

வெந்தயம் நன்மைகள்

பாரம்பரிய மருத்துவத்தில் மருந்தாகவும் நமது அன்றாட வாழ்க்கையில உணவுல பயன்படுத்தக்கூடியதுமான வெந்தயத்தை பற்றி வெந்தயம் நன்மைகள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த வெந்தயம் உணவில் தினசரி சேர்த்து வந்தால் உண்டாகும் வெந்தயம் நன்மைகள், ஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்..? அதிகமா சாப்பிடும் போது என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் vendhayam benefits in tamil இதெல்லாம் பத்தி இந்த பதிவில் இன்னைக்கு டீடைலா பார்க்கலாம்.

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை பார்த்தீங்கன்னா சராசரியா 2.5 கிராம் புரோட்டீன் 6.5 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கு 3 கிராம் பைபர் இருக்கு.  அது மட்டும் இல்லாம கால்சியம், மெக்னீசியம், காப்பர் அது மாதிரியான தாது உப்புக்கள் நிறைய இருக்கு. 

குறிப்பா அதுல இருக்குற இரும்பு சத்து ஒரு நாளைக்கு நமக்கு தேவைப்படக்கூடிய இரும்பு சர்க்கரை 20% இருக்கு. இந்த வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வரும்போது நிறைய இருக்கு. அதுல குறிப்பா சர்க்கரை நோயாளிகள் அவங்களோட உணவு முறையை உடற்பயிற்சி, மருந்துகளோடு வெந்தயம் டெய்லி சாப்பிட்டு வந்தாங்கன்னா அவங்களோட ரத்தத்துல சர்க்கரை அளவு நல்லாவே கண்ட்ரோல் ஆகும்.  இதுக்கு காரணம் வெந்தயம் உடம்புல இன்சுலின் ரெசிஸ்டன்ஸ கம்மி பண்ணும்.

இரண்டாவது வெந்தயத்தில் அதிகப்படியான நார் சத்து இருக்கிறதுனால அதை உணவோடு சேர்த்து சாப்பிடும்போது சாப்பாட்டுல இருக்குற சர்க்கரையை வந்து ரத்தத்தில் பொறுமையா கலக்கும். சில பேருக்கு ரத்தத்துல சர்க்கரை அளவு பிரீ டயாபட்டிக் அளவுல இருக்கும் நார்மலாவும் இருக்காது.

டயாபட்டிக் ரேஞ்சிலயும் இருக்காது. அவங்க அந்த உடற்பயிற்சி கூட வெந்தயமும் ரெகுலரா சாப்பிட்டு வந்தாங்கன்னா டயாபட்டிக் ஸ்டேஜ்க்கு போகாமலே இருக்கலாம். வெந்தயம் ரெகுலரா சாப்பிடும்போது ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு கம்மியாகும்.

அது கூட இந்த வெந்தயத்திற்கு அழற்சி எதிர்ப்பு (anti inflammatory) இருக்கறதுனால இதயத்துல ரத்த குழாயில் ஏற்படக்கூடிய ரத்த நாள அடைப்பு வராமல் தடுக்கிறது.

பெண்களுக்கு இது இரண்டு வகையில பயனுள்ளதாக இருக்கும். ஒன்னு பாலூட்டும் தாய்மார்கள் வெந்தயம் ரெகுலரா சாப்பிடும்போது அவங்களோட தாய்ப்பால் உற்பத்தி வந்து அதிகமா இருக்கும். ரெண்டாவது சில பேருக்கு இந்த மாதவிடாய் சமயத்தில் பார்த்தீங்கன்னா அடி வயிறு வலி ரொம்ப அதிகமா இருக்கும். இன்னும் சில பேர் அந்த மூணு நாள் பார்த்தீங்கன்னா வீட்டிலேயே சுருண்டு படுத்திருப்பாங்க. அந்த அளவுக்கு வலி அதிகமா இருக்கும்.

அது மாதிரி சமயத்துல வெந்தயத்தை வறுத்து பொடி ஆக்கி மூணு வேலையும் சாப்பாடு கூட கலந்து சாப்பிடும் போது அவங்களுக்கான வயிறு வலி கொஞ்சம் கம்மியாகும். ஆண்கள் ரெகுலரா வெந்தயம் சாப்பிடும்போது அவங்க உடம்புல டெஸ்டோஸ்டிரோன் (testosterone) ஹார்மோன் அளவு அதிகமாகும்.

ஆண்களுக்கு தசைகள் மற்றும் எலும்புகளோட உறுதி தன்மைக்கும் அவங்களோட இனப்பெருக்க உறுப்புகளோட சீரான வளர்ச்சிக்கும் இந்த டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் ரொம்பவே முக்கியம்.

இந்த வெந்தயத்தை நார்ச்சத்து அதிகமாக இருக்கிறதுனால அதை ரெகுலரா சாப்பிடும்போது மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கும். அதிகப்படியான இரும்பு சத்து இருக்கிறதுனால அதை ரெகுலரா சாப்பிடும்போது ரத்தசோகை பிரச்சனை கூட வராமல் தடுக்குது.

வெந்தயம் நன்மைகள் இவ்ளோ இருந்தாலும் இந்த வந்து ஒரு நாளைக்கு 10 லிருந்து 20 கிராம் வரைக்கும் சாப்பிடுவது நல்லதுன்னு ஆராச்சியாளர்கள் சொல்லிருக்காங்க. அதாவது ஒரு நாளைக்கு ஒன்னு இல்ல ரெண்டு ஸ்பூன் சாப்பிடலாம். அதே சமயம் பாலூட்டும் தாய்மார்கள் மாதவிடாய் சமயத்துல வயிறு வலி அதிகமா இருக்குறவங்க எல்லாம் வந்து ஒரு நாளைக்கு 30 கிராம் வரைக்கும் சாப்பிடலாம் என்று சில அறிவியல் ஆராய்ச்சியில் சொல்லி இருக்காங்க.

இந்த வெந்தயத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது சில தீமைகளும் இருக்கு. அதுல குறிப்பா குழந்தைகளுக்கு அதிகமா கொடுக்கும்போது அவங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமா இருக்கு.

அதே மாதிரி எந்த வயதினரா இருந்தாலும் அதிகமா சாப்பிடும் போது இந்த வாயு தொல்லை என்று சொல்லக்கூடிய கேஸ் ஸ்டிக் ப்ராப்ளம் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கு. இந்த வெந்தயத்திற்கு கர்ப்பப்பையை சுருங்க வைக்கிற தன்மை இருக்கு அதனால கர்ப்பிணியாக இருப்பவர்கள் அதிகமா சாப்பிடக்கூடாது.

வெந்தயம் நன்மைகள், vendhayam benefits in tamil டெலிவரிக்கு ஒன்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி நிறைய சாப்பிட்டாங்கன்னா அவங்களுக்கு நார்மல் டெலிவரி நடக்கிறதுக்கான வாய்ப்புகள் கூட இருக்கு. 

இதையும் படிக்கலாமே!! 👇👇

நிலவேம்பு கசாயம் நன்மைகள் இந்த பதிவை பார்க்காம இத குடிக்காதீங்க 2024

பனங்கிழங்கு சாப்பிடுவதால் நன்மைகள் இதுல இவ்ளோ இருக்கா கட்டாயம் இத பாருங்க 2024..!

சீரக தண்ணீர் பயன்கள் அடேங்கப்பா இதுல இவ்ளோ இருக்கா 2024..!