Udhayanidhi Stalin Deputy CM: துணை முதலமைச்சராக உதயநிதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சொல்லுங்க நீண்ட நாட்களாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் என்ற பேச்சு இடம் பெற்று வந்த நிலையில தற்பொழுது அது உறுதியாகி இருக்கிறது.
அண்மையிலே கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் ஆய்வு செய்தபோது மாற்றம் ஏமாற்றம் அளிக்காது மாற்றம் இருக்கும் என தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில தற்பொழுது அமைச்சரவையில் மிகப்பெரிய மாற்றம் செய்த அறிவிப்பானது ஆளுநூர் மாளிகையால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற ஒரு அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று அவருக்கு கூடுதலாக பிளானிங் அண்ட் டெவலப்மென்ட் என்ற துறையும் வழங்கப்பட்டிருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தொடர்ச்சியாக புதிய அமைச்சராக பதிவியேற்கக்கூடிய புதிய சட்டமன்ற உறுப்பினுடைய பெயரும் அதில் இடம் பெற்றிருக்கின்றன. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதேபோன்று கோவை சலியன் அதேபோன்று சேலம் உடைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ராஜேந்திரன், இதுக்கு முன்னால் அமைச்சராக இருந்த ஆவடி நாசர் உள்ளிட்டவர்கள் புதிதாக அமைச்சர்கள் வருகிறார்கள் என்ற ஒரு அறிவிப்பும் இதில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிதாக அமைச்சராக பொறுப்பேற்கக் கூடியவர்கள் அவர்களுடைய பதவி ஏற்பு நாளைய தினம் மாலை மூன்றரை மணி அளவில் நடைபெறும் என்ற ஒரு அறிவிப்பை ஆளுனர் மலிகை வெளியிட்டிருக்கிறது. அதேபோன்று ஏற்கனவே இருக்கக்கூடிய அமைச்சர்களுடைய இலாக்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. குறிப்பாக மூத்த அமைச்சர்களுடைய இலாக்கள் மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கு முன்பாக தற்போது அமைச்சரவிலிருந்து நான்கு அமைச்சர்கள் வெளியாகி சென்றிருக்கிறார்கள்.