தமிழ்நாடு போக்குவரத்து கழகத்துல இருந்து ஒரு சூப்பரான ஜாப் வந்திருக்கு பிரஷர் அப்ளை பண்ணிக்கலாம். அப்ளை பண்றதுக்கு எந்த ஒரு பீஸ்மே கிடையாது. அதே மாதிரி எக்ஸாம் கிடையாதுங்க டைரக்ட்டா மெரிட் செலக்சன் தான்.
டிப்ளமோ படிச்சவங்க, டிகிரி படிச்சவங்கன்னு சொல்லிட்டு நிறைய வேகன்சி இருக்கு. கிட்டத்தட்ட 500 காலி பணியிடங்கள் முழு தகவலை தெளிவா சொல்ல போறேன். தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அதாவது டிஎன் எஸ்டிசில இருந்து வந்திருக்கக்கூடிய இந்த ஜாபுக்கான ஒரு அபிஷியல் நோட்டிபிகேஷன் லிங்க் அப்ளை லிங்க் எல்லாமே நான் வந்து கீழே கொடுத்திருக்கேன்.
TNSTC-யில் இருந்து கிட்டத்தட்ட ஒரு 500 வேகன்சி விட்டுருக்காங்க. ரீஜியன் வைசா அப்டேட் பண்ணிருக்காங்க. தமிழ்நாடு முழுவதும் ஒரு ஐந்து ரீஜியன் அதாவது விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி அண்ட் சென்னை ரீஜியன் இந்த மாதிரி ஐந்து ரீஜியன் வைசா ஒரு 500 வேகன்சி விட்டுருக்காங்க. ஆன்லைன் மோடு அப்ளிகேஷன்தான் அப்ளை பண்றதுக்கு பீஸ் கிடையாது செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி அப்ளிகேஷன் ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. க்ளோசிங் வந்து பாத்தீங்கன்னா அக்டோபர் மாதம் 21 அண்ட் இந்த ஜாபுக்கு எக்ஸாம் கிடையாது. பியூர்லி வந்து மெரிட் செலக்சன் தான்.
யாரெல்லாம் இந்த ஜாபுக்கு ஷார்ட் லிஸ்ட் ஆயிருக்காங்களோ அதாவது செலக்ட் ஆயிருக்காங்களோ அவங்களுக்கான ரிசல்ட்ட வந்து அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி அபிஷியல் வெப்சைட்ல பப்ளிஷ் பண்ணிருவாங்க. அந்த ரிசல்ட்ட பார்த்துட்டு நீங்க டைரக்டா டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன்ல பார்ட்டிசிபேட் பண்ணாலே போதும் நவம்பர் 13 ஆம் தேதியிலிருந்து நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வரைக்கும் உங்களுக்கு டாக்குமெண்ட் வெரிஃபிகேஷன் டேட் கொடுத்திருக்காங்க. வெரிஃபிகேஷன கம்ப்ளீட் பண்ணிட்டு நீங்க டைரக்டா ஜாப்ல ஜாயின் பண்ணிக்கலாம்.
தற்பொழுது வந்திருக்கக்கூடிய இந்த ஜாபுக்கு வந்து பாத்தீங்கன்னா இயர் ஆஃப் பாஸிங்க பொறுத்த அளவு நிறையவே கொடுத்திருக்காங்க. பாஸ்ட் அவுட் வந்து நிறைய இயர்ஸ் வந்து மென்ஷன் பண்ணிருக்காங்க. டிப்ளமோ, டிகிரின்னு சொல்லிட்டு தனித்தனியா வேலை வாய்ப்பு இருக்கு. எல்லாமே நான் உங்களுக்கு தெளிவா சொல்றேன். பாஸ்ட் அவுட் வந்து பாத்தீங்கன்னா 2020 பாஸ்ட் அவுட் அப்ளை பண்ணிக்கலாம். அதே மாதிரி 2021, 2022, 2023 இப்ப ரீசன்டா 2024-ல பாஸ்ட் அவுட் ஆனவங்க வரைக்கும் இந்த ஜாபுக்கு எலிஜிபிள் தான் அப்ளை பண்ணிக்கலாம்.
இந்த ஜாபுக்கான சேலரி வந்து உங்களுக்கு ஸ்டைபண்ட் மாதிரிதான் கொடுப்பாங்க. இது வந்து உங்களுக்கு ட்ரைனிங் கேட்டகிரில வரும் அதாவது அப்ரண்டிஸ் கேட்டகிரில தான் தற்பொழுது வேலை வாய்ப்பு வந்திருக்கு. ஸ்டைபண்ட பொறுத்த அளவு நீங்க டிகிரி கம்ப்ளீட் பண்ணிட்டு அப்ரண்டிஸ் ஜாபுக்கு அப்ளை பண்றீங்க அப்படின்னா உங்களுக்கு மாதம் ₹9000 ஸ்டைபண்ட் கொடுக்குறாங்க. டிப்ளமோ முடிச்சிட்டு இந்த ஜாபுக்கு அப்ளை பண்றீங்க அப்படின்னா மாதம் ₹8000 உங்களுக்கு ஸ்டைபண்ட் வந்து கொடுக்குறாங்க.
மேலும் விவரங்களுக்கு:
கீழேயுள்ள இணைப்பிலிருந்து TNSTC ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பைப் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.