தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள்

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் :- பள்ளியில் தவறு செய்தவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையாகவும், கோவில்களில் வேண்டுதலின் பேரில் அரைகுறையாக போடப்படுவதுதான் இந்த தோப்புக்கருணம். 

ஆசனங்களுக்கு எல்லாம் ஆசானாய் இருப்பது தோப்புக்கரணம் முன்பெல்லாம் வாரம் தவறாமல் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வோம் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டால் தான் வழிபாடு செய்த திருப்தியே வரும்.

பிள்ளையாரை எங்கு பார்த்தாலும் கைகள் காதுக்கு போய் தோப்புக்கரணம் போட்டு விடுவோம். இப்போது பிள்ளையாருக்கு வணக்கம் வைப்பதோடு சரி.

இது ஆன்மீக சமாச்சாரம் ஆனால் தோப்புக்கரணம் நம்மை அறிவாளியாக ஆகிவிடுகிறது என்பது தெரியுமா. முன்பெல்லாம் படிக்காமல் வீட்டுப்பாடம் செய்யாமல் வரும் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய தண்டனை தோப்புக்கரணம் தான்.

காரணம் மனித உடலின் மூளை பகுதியில் வலது இடது இரண்டு பக்கமும் நரம்புகளை தூண்டி ஆற்றலை அளித்து நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது தோப்புக்கரணம்.

தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

அன்றாட செய்யும் போது மூளை உடலில் உள்ள மந்தத்தையும் சோர்வையையும் நீக்கி அறிவார்ந்த வேலைகளை திறம்பட செய்ய வைக்கிறது. மருத்துவர் ரீதியாகவும் தோப்புக்கரணம் மூளைக்கு சக்தியை தருவதாக நிரூபணம் செய்திருக்கிறது.

தோப்புக்கரணம் போடுவதால் அக்குபஞ்சர் புள்ளிகள் உடலில் தூண்டப்படுகிறது மூளையுடன் தொடர்புடைய அனைத்து நரம்புகளும் சக்தி பெருகிறது.

உலகமே வியந்து போன அறிவியல் உண்மை மூளையை புத்துணர்ச்சி அடைய செய்யும் ஆற்றலும் மூளை செல்களை தூண்டும் சக்தியும் கொண்டது இந்த தோப்புக்கரணம் முறை. இது போன்ற பல ஆச்சரியமான தன்மைகளை உடையது தான் இந்த தோப்புக்கரணம். 

 சோர்வை நீக்கி உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்வை கொடுக்கும். மனதில் இருக்கும் பலவீனத்தை அடக்கி பலத்தை உண்டாக்கும். மன வலிமையை அதிகரிக்கும்.

மூளை செயல்பாடு குறைந்த குழந்தை கூட கல்வியில் சிறந்தவங்க முடியும் என்பதை அறிவியல் ஆய்வுகளின் மூலம் இந்த தோப்புக்கரண பயிற்சியின் பலனை நிரூபித்திருக்கிறார்கள்.

உலக அளவில் பிரைன் ஆக்டிவேஷன் யோகா என்று பின்பற்றுகிறார்கள். நீங்களே இணையத்தில் தேடி பாருங்கள் அப்போதுதான் இதன் மகிமை புரியும்.

எந்தவிதமான யோகா உடற்பயிற்சியும் செய்ய நேரமில்லாதவர்கள் கூட இந்த ஒரே ஒரு பயிற்சியை பின்பற்றினால் போதும்.

தினமும் ஐந்து நிமிடங்கள் மட்டும் செய்தால் போதும் ஆரம்ப நிலையில் ஐந்து முறையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். திடீரென்று ஆர்வத்தில் அதிகமாக செய்தால் கால்கள் வழி  எடுத்து விடும்.

மூளையில் உள்ள செல்கள் தூண்டப்படுவதால் அறிவாற்றல் பெருகும். நினைவாற்றல் அதிகரிக்கும். மன அழுத்தம் நீங்கி உற்சாகமும் ஏற்படும்.ஆட்டிசம் பிரச்சனை கூட மாற்றங்கள் ஏற்படும் என அறிவியல் கூறுகிறது. உடலும், மனமும் சீராகும். உடல் உறுதியாகும்.

இன்று அதிகமாக செலவிடப்படுவது உடல் எடையை குறைப்பதற்காகத்தான். இந்த ஒரே பயிற்சி முறையை சரியாக பின்பற்றி வந்தால் உடல் எடையும் சீராகும்.

நடைபயிற்சியும் உடற்பயிற்சியும் எளிதில் தராத சக்தியை ஐந்தே நிமிட தோப்புக்கரணம் தந்துவிடும். இனி பிள்ளையாரிடம் மட்டுமல்லாமல் வீட்டிலும் தோப்புக்கரணம் போடுங்கள் பத்து நாட்களில் பலனை உணர்வீர்கள். 

இன்று அறிவியல் கண்டுபிடித்ததை நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தியுள்ளார்கள் என்ற பெருமையை விட, நாமும் இந்த தோப்புக்கரணை முறையை பயன்படுத்தி பலன் அடையவும் மகிழ்வுடன் வாழுங்கள்.

இதையும் படிக்கலாமே!!

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

ஒருவரை வசியம் செய்வது எப்படி? இதை செய்தால் மாட்டும் போதும் எப்படி பட்டவரும் வீழ்ந்து விடுவார்கள்..!

ஒருவரை வசியம் செய்வது எப்படி? இதை செய்தால் மாட்டும் போதும் எப்படி பட்டவரும் வீழ்ந்து விடுவார்கள்..!