சர்க்கரை பொங்கல் குக்கரில் செய்வது எப்படி: இன்னைக்கு நம்ம இந்த பதிவில் என்ன ரெசிபி பார்க்க போறோம்னா சர்க்கரை பொங்கல் ரெசிபி தான் பார்க்க போறோம். சர்க்கரை பொங்கல் வந்து எப்படி டேஸ்ட்டா வீட்லயே நல்லா ஸ்வீட்டா சிம்பிளா எப்படி பிரஷர் குக்கர்லயே செய்றதுன்றது தான் இந்த பதிவில் பார்க்க போறோம்.
ஃபர்ஸ்ட் உங்களுக்கு தேவையான அளவுக்கு பச்சரிசி எடுத்து வச்சுக்கோங்க. நான் வந்து இங்க ஒரு கப் பச்சரிசி எடுத்து வச்சிருக்கேன். அதுக்கப்புறம் அரை கப் பாசிப்பருப்பு எடுத்து வச்சிருக்கேன். இது ரெண்டையுமே சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணிட்டு ஒரு 20 நிமிஷம் நல்லா ஊற வச்சு எடுத்துக்கோங்க. 20 நிமிஷம் கழிச்சு நல்லா அலசிட்டு நல்லா கிளீன் பண்ணிட்டு ஒரு குக்கர் எடுத்துக்கோங்க.
அதுல வந்து இந்த ஊற வச்ச அரிசி பருப்பை ஆட் பண்ணிக்கோங்க அதுக்கப்புறம் நாலு கப் தண்ணி ஆட் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறம் சால்ட் ஆட் பண்ணிக்கோங்க. கொஞ்சமா இதை வந்து குக்கர்ல ஒரு ரெண்டுல இருந்து மூணு விசில் வச்சா போதும் ஆல்ரெடி ஊறுனதுனால நல்லாவே வெந்துரும். அதுக்கப்புறம் ஒரு கடாய் எடுத்துக்கோங்க. அதுல ரெண்டு கப் வெல்லம் ஆட் பண்ணிக்கோங்க. நீங்க வந்து இதுல வந்து வெல்லம் இல்லைன்னா நாட்டு சர்க்கரை இல்லைன்னா கருப்பட்டி இல்லைன்னா சுகர் எது வேணாலும் நீங்க ஆட் பண்ணிக்கலாம். நான் வந்து இங்க வெல்லம் ஆட் பண்ணிருக்கேன்.
இப்ப வந்து அந்த வெல்லம் நல்லா கரையறதுக்கு தண்ணி ஆட் பண்ணிக்கோங்.க அதை நல்லா கொதிக்க வச்சுக்கோங்க. நல்லா மெல்ட் ஆகணும் அந்த அளவுக்கு ரெடி பண்ணி எடுத்துக்கோங்க. இப்ப வந்து பிரஷர் குக்கர் எடுத்துக்கலாம். மூணு விசில் வச்சாச்சு பார்த்தீங்கன்னா தெரியும் அரிசியும் பருப்பும் நல்லா வெந்துருச்சு. இப்ப வந்து அரிசியையும் பருப்பையும் நல்லா மசிச்சு விட்டுருங்க. நல்லா மேஷ் பண்ணி வச்சுக்கோங்க. இப்ப வந்து ஸ்டவ்ல திருப்பி குக்கர் வச்சுக்கோங்க வச்சுட்டு நம்ம ரெடி பண்ணி வச்சிருக்க வெல்லம் சிரப்பை வந்து வடிகட்டியில வச்சு ஆட் பண்ணிக்கோங்க. வெல்லம் நல்லா ஆட் பண்ண பின்னாடி நல்லா கம்ப்ளீட்டா மிக்ஸ் பண்ணிக்கோங்க.
க எல்லா சைடும் நல்லா மிக்ஸ் ஆகுற மாதிரி அதுக்கப்புறம் ஏலக்காய் பவுடர் இல்லைன்னா ஏலக்காய் தட்டி ஆட் பண்ணிக்கோங்க. ஒரு கால் டீஸ்பூனுக்கு அதுக்கப்புறம் நெய் ஆட் பண்ணிக்கோங்க நெய் தான் இதுல மெயின் இதுல வந்து நான் நெய் வந்து கால் கப் ஆட் பண்ணிருக்கேன் உங்களுக்கு இன்னும் நிறைய வேணும்னா கூட ஆட் பண்ணிக்கலாம். நெய் நல்லா ஆட் பண்ணிட்டு நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுக்கோங்க. இப்ப வந்து இதை நல்லா மிக்ஸ் பண்ணியாச்சு லாஸ்ட்டா வந்து நெய்யில முந்திரிப்பருப்பு பருப்பும் கிஸ்மிஸும் நல்லா வறுத்து எடுத்துக்கோங்க.
வறுத்து எடுத்துட்டு அந்த பொங்கல்ல அப்படியே மேல ஆட் பண்ணிக்கோங்க இதை நல்லா கம்ப்ளீட்டா கிண்டி விட்டுக்கலாம் அவ்வளவுதான் ரொம்பவே ஈஸியான சிம்பிளான டேஸ்டியான சர்க்கரை பொங்கல் வீட்லயே ரெடி ஆயிடுச்சு இது வந்து நீங்க குக்கர்ல செய்றதுனால ஒரு 20 நிமிஷத்துலயே செஞ்சு முடிச்சிடலாம் அவ்வளவு சிம்பிளா இருக்கும் டக்குனு செஞ்சு முடிச்ச மாதிரி இருக்கும் இந்த ரெசிபி புடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்.