தினசரி பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இவ்ளோ இருக்கா 2024

பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

நமது முன்னோர்கள் உணவே மருந்து அப்படின்னு வாழ்ந்தாங்க. ஆங்கில மருத்துவத்தின் தந்தை அப்படின்னு சொல்லக்கூடிய ஹிப்போகிரிட்ஸ் என்ன சொல்லி இருக்காரு அப்படின்னா, உணவு உங்கள் மருந்தாகவும் மருந்து உங்கள் உணவாகவும் இருக்கட்டும் அப்படின்னு சொல்லி இருக்காரு.

நமக்கு வரக்கூடிய பெரும்பாலான வியாதிகளுக்கு காரணமும் சரி, மருந்தும் சரி நாம சாப்பிடுற சாப்பாட்டில் இருக்கு. அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சன்ற மாதிரி நல்லதுன்னு சொல்லிட்டு சில உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது அதனால பக்க விளைவுகள் இருக்கு.

இன்னைக்கு நாம தினமும் ஒரே ஒரு பல்லு பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளையும் அதே போன்று அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது ஏற்படக்கூடிய தீமைகளை பற்றியும் பார்க்கலாம்.

பூண்டை பச்சையா சாப்பிடுறதுதான் ரொம்ப ரொம்ப நல்லது. தினமும் காலையில ஒரே ஒரு பல்லு பூண்டு எடுத்து அதை ஃபர்ஸ்ட் நசக்கி ஒரு அஞ்சு நிமிஷம் காற்றோட்டமா வைங்க. எதனால அப்படின்னா பூண்டை கிரஷ் பண்ணதுக்கு அப்புறம் காத்தோட்டமா வைக்கும் போது தான் பூண்டில்  இருக்கிற சில கெமிக்கல்ஸ் காற்றோடு வினைபுரிந்து பெட்டர் கெமிக்கல்சா மாறும்.

அதுக்கப்புறம் மென்னு நம்ம உமிழ் நீர் ஓட கலந்து சாப்பிடும்போது அதோட ஃபுல் மருத்துவ குணங்களும் கிடைக்கும். அப்படி பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன இருக்கு வாங்க பார்க்கலாம்.

இதயத்துக்கு ரொம்ப நல்லது.

பூண்டில் Allicin அப்படின்னு ஒரு கெமிக்கல் இருக்கு அது வந்து நம்ம உடம்புல நைட்ரிக் ஆக்சைடு உற்பத்திய அதிகபடுத்தும்.  இந்த நைட்ரிக் ஆக்சைடு நம்ம உடம்புல இருக்குற ரத்த நாளங்களை விரிவடை செய்யும். அதனால இந்த ரத்த கொதிப்பு இருக்கிறவங்களுக்கு பிளட் பிரஷர் கண்ட்ரோல் ஆகும்.

கூடவே எல்டிஎல் கொலஸ்ட்ரால் அப்படின்னு சொல்லக்கூடிய கெட்ட கொழுப்பை நம்ம ரத்தத்தில் கம்மியாகும். அதனால இதயத்துல ரத்த நாள அடைப்பு வராமல் தடுக்கும். அதனால ஹார்ட் அட்டாக் வராமல் காப்பாத்தும்.

நம்ம குடலுக்கு நல்லது.

பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நம்ம குடல்ல நிறைய நல்லது பண்ற பாக்டீரியாக்கள் இருக்கு. அந்த பாக்டீரியாக்களுக்கு நாம சாப்பிடுற சாப்பாடு செரிமானம் ஆகுறதுல முக்கிய பங்கு இருக்கு. அந்த பாக்டீரியாக்கள் வளரத்துக்கு pre biotic அப்படின்னு சொல்லக்கூடிய உணவு பொருட்கள் வேண்டும். அது வந்து பொதுவா இந்த வெங்காயம், தக்காளி, வாழைப்பழம், தயிர், பூண்டு இது மாதிரியான உணவுப் பொருட்கள்ல நிறைய இருக்கு. அதனால தினமும் பூண்டு நம்ம சேர்த்துட்டு வரும்போது நம்மளோட ஜீரண மண்டலம் நல்லாவே வேலை செய்யும். செரிமான பிரச்சனை வராமல் இருக்கும்.

மூளைக்கு ரொம்பவே நல்லது 

பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தினமும் எவ்வளவோ காரணங்கள்னால நமக்கு ஸ்ட்ரெஸ் அதிகமாகுது. அது கூடவே இந்த புகைபிடித்தல், மது அருந்துதல், தவறான உணவு பழக்கங்களால நம்ம உடம்புல free radicles சொல்லக்கூடிய கழிவுகள் சேருது. இந்த free radicles என்ன பண்ணனும்னா நம்ம உடம்போட செல்களை டேமேஜ் பண்ணும்.

அதனால கேன்சர், Cancer, Dementia, Ageing, Neuro Degenerative Disorder அது மாதிரி பல வியாதிகள் வரும். இந்த பூண்டுக்கு Anti Oxidant மற்றும் Anti Inflammatory Properties இருக்கு. அதனால நம்ம உடம்போட செல்களை பாதுகாக்கும். Dementia போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்

பூண்டில் விட்டமின் சி, விட்டமின் பி6 போன்ற விட்டமின்களும் செலினியம், மேக்னீசு, பாஸ்பரஸ் அது மாதிரி நிறைய தாது உப்புக்கள் நிறைய இருக்கு. இது நம்ம உடம்புல வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகப்படுத்தும். அதன் மூலமா இன்பெக்சன் உள்ள வராமல் தடுக்கும். அது மட்டும் இல்லாம பூண்டுக்கு Anti Microbial Peptides இருக்கு. அதனால இந்த சளி, சொரம் இருக்கும்போது பூண்டு ரசம் சாப்பிடும் போது அது சீக்கிரமா கம்மியாகும்.

 சர்க்கரை வியாதி

தினமும் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் சர்க்கரை வியாதி இருக்கிறவங்க பூண்டு ரெகுலரா சாப்பிடும்போது அவங்க உடம்புல அந்த இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்னு சொல்லக்கூடியது கம்மியா ஆகும். அவங்க ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்ட்ரோல் ஆகும் இதெல்லாம் இல்லாம ரத்தத்தை சுத்திகரிக்கும்.

வெயிட் லாஸ்க்கு ஹெல்ப் பண்ணும், ஆண்மை குறைவு பிரச்சனையை சரி பண்ணும், ஃபீடிங் மதர்ஸ் டெய்லியும் பூண்டு சாப்பிடும்போது தாய்ப்பால் நிறைய சுரக்கும், மேலும் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள வீடியோவை பார்க்கவும். 

இதையும் படிக்கலாம!! 👇👇

நிலவேம்பு கசாயம் நன்மைகள் இந்த பதிவை பார்க்காம இத குடிக்காதீங்க 2024

பனங்கிழங்கு சாப்பிடுவதால் நன்மைகள் இதுல இவ்ளோ இருக்கா கட்டாயம் இத பாருங்க 2024..!

வெந்தயம் நன்மைகள் தினசரி இத சாப்பிடும்போது உடலில் நிகழும் அதிசயம் 2024