அடேங்கப்பா பப்பாளி பழத்தின் நன்மைகள் இவ்வளவு இருக்கா 2024

பப்பாளி பழத்தின் நன்மைகள்

அப்படி என்ன இந்த பப்பாளி பழத்துல சிறப்பு இருக்குன்னு பார்த்தீங்கன்னா எல்லா கனிரகங்களும் ஒன்னு வந்து சில குறிப்பிட்ட விட்டமின்களை கொடுக்கும். சில நேரங்களில் ஒரு நல்ல ஊட்ட உணவாக இருக்கும். சில கனிகள் வந்து நல்லா சுவையா இருக்கும். ஆனால் இந்த பப்பாளி பழம் எல்லாமே கொண்டது.

பப்பாளி பழத்தின் நன்மைகள் நல்லா சாப்பிடுவதற்கு சுவையா, நல்ல கனிந்த பப்பாளியின் சுவை வந்து மனதை வந்து மகிழ்விக்க கூடிய அளவில் ஒரு சுவை உள்ளது. அதே சமயத்துல ஒரு ஊட்ட உணவும் கூட. வெறுமனே நமக்கு வயிறு நல்லா பசியா இருக்கு நம்ம பப்பாளி பழத்தை மட்டும் சாப்பிட்டு பசியாறிட்டு நம்ம போக முடியும். அந்த அளவுக்கு நமக்கு வந்து ஊட்ட உணவாகவும் இருக்கும். 

கண் ஆரோக்கியம்

இத தாண்டி பப்பாளி பழத்தின் நன்மைகள் பார்த்தீங்கன்னா உடலுக்கு நல்லது தரக்கக்கூடிய பல சத்துக்கள் பப்பாளியில் இருக்கு. ரொம்ப குறிப்பா பார்த்தீங்கன்னா இன்றைக்கு வந்து கண்ணை பாதுகாக்க கூடிய உணவுகள்ல முதலிடம் கொடுக்கணும்னா அது பப்பாளிக்கு தான் கொடுக்கணும். கண்பார்வை நல்லா இருக்கணும், இளம் வயதிலேயே கண்ணாடி போடக்கூடாது. முதுமையிலும் வந்து முடிந்த வரைக்கும் கண் புரைகள் எல்லாம் வந்துற கூடாது, இப்படி எல்லாம் நினைச்சோம்னா பப்பாளி தான் உங்களுடைய முதல் தேர்வா இருக்கணும். அந்த அளவுக்கு கண்களுக்கு விட்டமின் ஏ சத்து வந்து நிறைய கொடுத்து கண்களை பாதுகாப்பாக வைப்பது வந்து இந்த பப்பாளி பழம் தான்.

சர்க்கரை நோயாளிக்கு நல்லது 

இதை தாண்டி பப்பாளி பழத்தின் நன்மைகள் வந்து பல நல்ல குணங்கள் இருக்கு. வெறும் கண்களுக்கு மட்டுமல்ல, சர்க்கரை நோயாளிகளுக்கு பல பழங்கள் சாப்பிட முடியாது. மாம்பழம் சாப்பிட கூடாது. சப்போட்டா சாப்பிடக்கூடாது. கட்டுப்பாடு இல்லன்னா வாழைப்பழம் கூட சாப்பிடக்கூடாது. நல்ல இனிப்பு சுவையுள்ள பல பழங்களை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கணும். ஆனா பப்பாளி பழத்தை குறைந்த அளவுல கண்டிப்பா சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். 

சர்க்கரை நோயாளிக்கு வந்து ஒரு சோர்வு எப்போவுமே இருந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே நிறைய உணவு கட்டுப்பாடு, இது தவிர மருந்துகள் சில நேரத்துல இன்சுலின் மாதிரி ஊசிகள். இவ்வளவு போட்டுட்டு சத்தான பழமும் சாப்பிட முடியலையே அப்படிங்கற ஏக்கம் வந்து பல சர்க்கரை நோயாளிகளுக்கு உண்டு. அந்த ஏக்கத்தை போக்கக்கூடியது வந்து பப்பாளிப்பழம். பப்பாளிப்பழத்தை வந்து சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவுல கொஞ்சம் துண்டுகள் வந்து தினசரி அவர்கள் உணவோடு சேர்த்து சாப்பிட்டோம்னா நல்ல ஒரு எனர்ஜி கிடைக்கும். பப்பாளி பழத்தின் நன்மைகள்உடல்ல ஆற்றல் கிடைக்கும். சோர்வு  இருக்காது, நரம்பு தளர்ச்சி வராது. 

பெண்களுக்கு சிறந்த பழம் 

அதை தாண்டி பப்பாளி பழத்தின் நன்மைகள் என்னன்னா பெண்களுக்கு மிகச்சிறந்த கனி வந்து பப்பாளி. பெண்களுக்கு சிறந்த கனி ரகங்கள் எடுத்தீங்கன்னா ரெண்டே பழம்தான். ஓன்றுபப்பாளி இன்னொன்னு மாதுளை. மாதுளை நம்ம முதல்லயே சொன்னா நிறைய இரும்புச் சத்தை கொடுக்கும், சோகை போக்கும். 

அதே போன்று மாதிரி பப்பாளி அவர்களுடைய கருப்பையை வலுப்படுத்தும். மாதவிடாய் துவங்கிய நாட்களில் இருந்து 10, 12 வயதுல இப்ப எல்லாம் வந்து பெண்கள் பூப்படைய ஆரம்பிச்சுடுறாங்க. அதுவும் குறிப்பா நகர் புறத்தில் நிறைய வந்து இந்த மாதிரி மில்க் சாக்லேட், நிறைய கோழி பிராய்லர் கோழி எல்லாம் சாப்பிடக்கூடிய குழந்தைகள் வந்து இளம் வயதிலேயே பத்து வயதிலேயே பூப்படையக் கூடிய தன்மை வந்துடுது.

அப்போ அந்த பூப்படையா கூட அவங்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பு வந்தா கூட உடலினுடைய உள் உறுப்புகள் அதாவது இந்த சூதக உள்ள பொருள் சொல்லக்கூடிய கருப்பை, சினைப்பை எல்லாம் நல்ல வளர்ச்சி அடைந்து நல்ல திறனோடு இருக்காது. அந்த மாதிரி குழந்தைகளுக்கு வந்து சின்ன குழந்தைகள்ல வந்து அந்த மாதவிடாய் வரும்போது. அதிக ரத்தப்போக்கு, சீரற்ற நிலையில 10 நாளைக்கு ஒரு 15 நாளைக்கு ஒருமுறை பீரியட் வர்றது, இந்த மாதிரி பல பிரச்சினைகள் இருக்கும்.

ஒரு சில குழந்தைகள் பாத்தீங்கன்னா ரொம்ப குண்டா இருப்பாங்க அவங்களுக்கு மாதவிடாய் சரியா வராது. அவர்களுக்கு 24, 28 நாளைக்கு ஒருதடவ வர வேண்டிய மாதவிடாய் 60 நாள் 70 நாள் ஆனாலும் மாதவிடாய் வராது. சினைப்பை நீர்க்கட்டிகள் நிறைய இருக்குன்னு சொல்லுவாங்க. உங்களுடைய சினைப்பை நிறைய நீர் கட்டிகள் இருக்கு அது வந்து இந்த பூப்பு சுழற்சியை வந்து இடையூறாக இருக்கு அப்படின்னு சொல்லி சொல்லுவாங்க.

பப்பாளி பழத்தின் நன்மைகள் இந்த மாதிரி சரியாக மாதவிடாய் வராத பெண் குழந்தைகளுக்கு பப்பாளி வந்து மிகச்சிறந்த ஒரு உணவு. தினசரி வந்து ஒரு 10, 15 துண்டுகள் வந்து குழந்தை பருவத்திலிருந்து, அதுவும் குறிப்பா ஒரு மாதவிடாய் வரும்னு எதிர்பார்க்கிற தேதியிலிருந்து ஒரு பத்து தினங்களுக்கு முன்னரே தொடர்ந்து வந்து பப்பாளி நல்லா சாப்பிட்டு வந்தாங்கன்னா, அவர்கள் கருப்பை நல்ல வலுவடையும். இந்த சினைப்பையில் இருக்கக்கூடிய நீர்க்கட்டிகள் போய் சரியா 28 நாளைக்கு ஒருக்க மாதவிடாய் வரக்கூடிய தன்மை இருக்கும்.

கருப்பை வந்து இந்த சினைப்பை வந்து நல்ல சீராக்கி இந்த மாதவிடாய் சுழற்சியை சரியாக கொண்டு வரலைன்னா வருங்காலத்தில் அந்த பெண் குழந்தை நல்ல வளர்ந்து ஆளாகி திருமணத்திற்கு அப்புறம் வந்து குழந்தை பேரின்மை வருவதை கூட அவர்கள் வந்து இந்த பப்பாளி பழத்தை தொடர்ந்து சாப்பிடுவது மூலமா தவிர்க்க முடியும். அதுல கொஞ்சம் அலட்சியமாக இருந்துட்டு, எப்ப வேணாலும் பீரியட் வரட்டும், வர்ற நேரத்துல பாத்துக்கலாம் அப்படிங்கற மாதிரி அலட்சியமா இருக்கக்கூடிய பெண் குழந்தைகளுக்கு, பிற்காலத்தில் அவர்களுக்கு குழந்தை பேரு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக உடல் பிரச்சனையாக, மனப்பிரச்சனையாக மாறிப்போகிறது.

மேலும் அறிய

இதையும் படிக்கலாமே!! 👇👇

தினசரி பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இவ்ளோ இருக்கா 2024

நிலவேம்பு கசாயம் நன்மைகள் இந்த பதிவை பார்க்காம இத குடிக்காதீங்க 2024

வெந்தயம் நன்மைகள் தினசரி இத சாப்பிடும்போது உடலில் நிகழும் அதிசயம் 2024