Quick and Easy Palkova Seivathu Eppadi: Step-by-Step Instructions in Tamil

இன்னிக்கு ஒரு ஸ்வீட் ரெசிபி தான் பார்க்க போறோம் பால்கோவா. பால்கோவா (Palkova Recipe) வீட்ல எப்படி செய்யறது அப்படிங்கறது பார்க்கலாம் வாங்க. ரொம்ப ஈசியா நிறைய பொருள் எல்லாம் எதுவுமே தேவையில்லை. ரெண்டே தான் ரெண்டே பொருள் தான் ஒரு லிட்டர் பால், கால் கிலோ சீனி. 

அதாவது ஒரு லிட்டர் பாலுக்கு 250 கிராம் சுகர் இவ்வளவுதான். நீலகிரி மில்க் வாங்கிக்கலாம். இது இல்லன்னா நீங்க வந்து ஆவின் பாலை வாங்கிக்கலாம்.

Palkova Seivathu Eppadi

ஆவின்ல ஃபுல் க்ரீம் மில்க் சொல்லி கேட்டு வாங்கிக்கோங்க. அதுல செஞ்சா கொஞ்சம் நல்லா இருக்கும், டேஸ்ட் நல்லா இருக்கும் அது. இல்லன்னா இந்த மாதிரி பால் உங்களுக்கு கிடைக்கலைன்னா உங்களுக்கு நார்மலா எந்த பால் கிடைக்குதோ அந்த பாலையும் நீங்க செஞ்சுக்கோங்க. இது இல்லன்னா என்ன பண்றது அப்படின்னு நினைக்க வேண்டாம்.

இப்ப பால கட் பண்ணி ஊத்திக்கோங்க. நான்ஸ்டிக் பாத்திரம் எடுத்துகிட்டா நல்லா இருக்கும். அது இல்லன்னா நீங்க வந்து அடி கனமான பாத்திரம் பார்த்து எடுத்துக்கோங்க. பால் நல்லா பொங்கி வரணும். பால்கோவா செய்யும் போது கூடவே பக்கத்துல தான் நிக்கணும் விட்டுட்டு போகக்கூடாது. பால் வந்து படபடன்னு பொங்கி வெளியே வந்துடும் அதனால வந்து கூடவே நின்னு கிண்டி விட்டுகிட்டே இருக்கணும்.

பஸ்ட் பால் நல்லா பொங்கட்டும் பால் இப்ப பொங்கி வருது. கிண்டி விட்டுகிட்டே இருக்கணும். அகலமான பாத்திரம் எடுத்தால்தான் கொஞ்சம் சீக்கிரமா வேலை முடியும். 

குட்டியோண்டு பாத்திரம் எடுத்திங்கனா ரொம்ப நேரம் கிண்டிகிட்டே இருக்க வேண்டியது இருக்கும். இது எப்படி ஒரு மணி நேரம் ஆகும். நீங்க சின்ன பாத்திரமா எடுத்தீங்கன்னா இரண்டு மணி நேரம் வரைக்கும் இழுத்துடும். அடிபிடிச்சிடாம கிண்டி விட்டுக்கோங்க அப்பப்ப. போட்ட இந்த மாதிரி ஆடை கட்டுதல் அதெல்லாம் எடுத்து விட்டுட்டே இருங்க.

பொங்க விட்டுறாதீங்க வெளியே. பால் வந்து நல்லா திக் ஆகணும் அதுவரைக்கும் கொதிக்கணும். ஒரு லிட்டர் பால் ஊத்திருக்கோம்ல இது கால் லிட்டர் பால சுண்டி வரணும். அதுவரைக்கும் நம்ம நல்லா காய்ச்சணும். ரொம்ப ஈஸி தான் பிகினர்ஸ் கூட செஞ்சிரலாம் கஷ்டமே இல்ல.

இப்ப அரை மணி நேரம் ஆயிடுச்சு பாதி அளவுக்கு வந்திருக்கிறது. பாலு என்ன சுண்டி வரணும் ஆட நல்ல கட்டிட்டு இருக்குது பாருங்க. அதெல்லாம் எடுத்து விட்ருங்க அப்பப்ப. நீங்க ரெண்டு லிட்டர் சேர்க்கிறீங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரி சீனி அளவு கூட்டிக்கோங்க.

நான் இப்ப 1/4 கிலோ சேர்த்த நீங்க அதுக்கு ஏத்த மாதிரி கூட சேர்த்துக்கோங்க. உங்களுக்கு இனிப்பு ஜாஸ்தியா இருக்குன்னு நினைச்சீங்கன்னா. நீங்க கொஞ்சம் கூட கம்மி பண்ணிக்கலாம் சுகர். உங்களுக்கு ஃபுல் கிரீம் மில்க் கிடைக்கலைன்னா, ஒரு அஞ்சு ஸ்பூன் கன்டென்ஸ் மில்க் சேர்த்துக்கோங்க. அது கூட நல்லா திக்னஸ் கொடுக்கும் பாலுக்கு.

முக்கா மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு நல்லா திக் ஆயிடுச்சு நல்ல திரண்டு வருது பாருங்க. நல்லா ஆடை எல்லாம் ஒன்றாக சேர்ந்து நல்லா திரண்டு வருதுல்ல. இப்போ சுகர் சேர்த்துக்கலாம். சுகர் சேர்த்த உடனே திரும்ப தண்ணி விட்டுட்டு வரும். பாருங்க நல்லா தண்ணி அடிச்சு பாருங்க. திரும்பவும் இன்னொரு அஞ்சு நிமிஷம் நல்லா கொதிக்கட்டும்.

ஒரு பின்ச் ஏலக்காய் தூள் சுகர் சேர்த்த உடனே மேல தெறிக்கும் பாத்துக்கோங்க. இதுல ஒரு ஸ்பூன் நெய் சேத்துகிறேன். திரும்ப கிண்டி விட்டுக்கோங்க. ஒரு லிட்டர் பால் ரெடி பண்றதுக்கு ஒன் ஹவர் ஆகும். பாருங்க இந்த மாதிரி சட்டியில் ஒட்டாம வரணும். இப்ப இத ஆப் பண்ணிக்கிறேன். 

ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு பார்த்தேன் என்றால் கரெக்ட்டா இருக்கும். இப்ப நமக்கு பால்கோவா ரெடி. நல்ல கிரீமியா சாப்ட்டா இருக்கும் சாப்பிடறதுக்கு. நீங்களும் செஞ்சு பாருங்க 

Quick and Tasty Vegetable Biryani Seivathu Eppadi for Beginners in Tamil

Scroll to Top