பல்வலி குணமாக வீட்டு வைத்தியம்! இரண்டு நிமிஷத்துல தீர்வு

பல்வலி, ஈறு வலி, ஈரு வீக்கம், ரத்தக் கசிவு, சொத்தை பற்களுக்கு இரண்டு நிமிஷத்துல தீர்வு தரக்கூடிய ஒரு சிம்பிளான ஹோம் ரெமிடி தான் பார்க்க போறோம்.

கை வலி, கால் வலி, மூட்டு வலி, உடல் வலி இந்த மாதிரி வலிகளை கூட பொறுத்துக்கலாம். ஆனா இந்த பல் வலி வந்துருச்சுன்னா உயிர் போற அளவுக்கு வலியை கொடுக்கும்.

பல்வலி குணமாக வீட்டு வைத்தியம்! இரண்டு நிமிஷத்துல தீர்வு | pal vali kunamaga veettu vaithiyam tamil

இந்த பல்வலி, ஈறு வலி, வீக்கம் இந்த மாதிரி தொந்தரவுகள் ஏற்பட்டுச்சுனா கூடவே தலைவலியும் வந்துரும். இது மரண அவஸ்தைய கொடுக்கும். சரியா பேச முடியாது. சரியா சாப்பிட கூட முடியாது.

பற்களில் கிருமிகள் தாக்கம் அதிகமா இருந்துச்சுன்னா, சொத்தைப்பற்கள் இருந்துச்சுனா, சரியா பற்களை பராமரிக்காமல் இருந்தோம்னா பற்களில் பாதிப்பு ஏற்பட்டு வலியை கொடுக்கும்.

எப்பவுமே பற்களை காலையில சுத்தம் செய்கிற மாதிரி, இரவு படுக்க போறதுக்கு முன்னாடி ஒருவாட்டி சுத்தம் செஞ்சுட்டு படுத்து தூங்குங்க. இந்த மாதிரி செய்யும்போது கிருமிகள் தாக்கம் உங்களுக்கு இருக்காது.

அதே மாதிரி டூத் பேஸ்ட் எல்லாம் யூஸ் பண்றதை விட இயற்கை பற்பொடி பயன்படுத்திடுவாங்க. இயற்கை பற்படி பயன்படுத்தினீங்கன்னா பற்களோட வேர்களுக்கு பலத்தை கொடுக்கும். ஈறு வலி, வீக்கம், இரத்தக் கசிவு பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும். 

செய்முறை 1 

டிராவல் டைம்ல ஆபீஸ் டைம்ல நம்ம எந்த ஒரு பொருட்களையும் தேடி அலையத் தேவையில்லை. சிம்பிளான பாயிண்ட் ஞாபகம் வச்சுக்கிட்டாலே போதும். ஒரு ரெண்டுல இருந்து அஞ்சு நிமிஷத்துக்குள்ள நல்ல ரிசல்ட் கிடைத்திடும்.

இப்ப நம்ம பாக்க போற ரெமடிக்கு ஒரே ஒரு பொருள் தான் பயன்படுத்த போறோம். அது என்னன்னு பார்த்தீங்கன்னா சின்ன வெங்காயம். ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்தது. சகல நோய்களையும் இந்த சின்ன வெங்காயம் துரத்தி அடிக்கும்.

ஒரே ஒரு சின்ன வெங்காயம் எடுத்துக்கோங்க. இதை சின்ன சின்ன சிலைசா கட் பண்ணி எடுத்துக்கோங்க. ஒரு சின்ன துண்டு அளவுக்கு இந்த சின்ன வெங்காயம் எடுத்துட்டு உங்களுக்கு எங்க பல் வலி இருக்கோ அந்த இடத்தில் வைத்து பல்ல லைட்டா கடிச்சுக்கோங்க.

அதே மாதிரி ஈறு  வீக்கம், ஈறு வலி, இரத்த கசிவு ஏற்பட்டுச்சுனா கூட ஈறுகளில் ஒரு ரெண்டு நிமிஷம் சின்ன வெங்காயத்தை தேய்ங்க உடனே உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு நீங்க ரெண்டு வேலை கூட செஞ்சுட்டு வரலாம். சொத்தைப்பல் இருந்துச்சுன்னா கூட அந்த இடத்தில இந்த வெங்காயத் துண்ட ஒரு அஞ்சு நிமிஷம் வைங்க கிருமிகள் செத்து வெளியேறிடும்.

இதே சின்ன வெங்காயத்தில் நான் இன்னொரு மெத்தடும் சொல்ற உங்களுக்கு எதுக்கு ஈசியாக ஃபாலோ பண்ணுங்க.

செய்முறை 2

ஒரு ரெண்டு சின்ன வெங்காயம் எடுத்துட்டு ஒரு காட்டன் துணியில மூட்டை மாதிரி கட்டிக்கோங்க. இது ஒரு சின்ன உரலில் போட்டு நல்லா தட்டி எடுத்துக்கோங்க. கொஞ்சமா தண்ணி ஊத்திட்டு நல்லா தட்டி எடுத்துக்கோங்க. 

இதுல உங்களுக்கு சாறு கிடைக்கணும். ரொம்ப தண்ணி ஊத்த கூடாது. அதுக்கப்பறம் ஒரு சின்ன பவுலில் இருந்து இந்த சாறு எடுத்துக்கோங்க. ஒரு காட்டன் பஞ்சை எடுத்து இந்த சாற்ற தொட்டு உங்களுக்கு எங்க பல் வலி இருக்கோ அங்க வச்சுட்டு ரெண்டு நிமிஷம் நீங்க லைட்டா பல்ல கடிச்சுக்கோங்க. கண்டிப்பா ஒரு ரெண்டு நிமிஷத்திலே உங்களுக்கு நல்ல ரிலீஃப் கிடைக்கும்.

இந்த சின்ன வெங்காயம் சாறு பார்த்தீங்கன்னா வேர்களை பலப்படுத்தும். பற்கள் இருக்குற கிருமிகளை அழித்து வெளியேற்றும். அதே மாதிரி ஈறுகளையும் பலப்படுத்தி ரத்தக் கசிவு, ஈறு வீக்கம், ஈறு வலி இந்த மாதிரி பிரச்சனைகளையும் சரி செய்யும். ஒட்டுமொத்த பல் சார்ந்த பிரச்சினைகளுக்கும் இந்த சின்ன வெங்காயம் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். 

Poongar Rice Benefits in Tamil : பெண்களுக்கு உரிய ஒரு அரிசி ”பூங்கார் அரிசி” வியக்க வைக்கும் அதன் ஆரோக்கிய நன்மைகள்