பத்மாசனத்தின் பயன்கள் | Padmasana Benefits in Tamil

பத்மாசனம் பலன்கள் | Padmasana Benefits in Tamil

Padmasana Benefits in Tamil – வணக்கம் இன்றைக்கு பத்மாசனம் செய்வதால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளைப் பற்றி பார்க்கலாம். ஆசனங்களில் பத்மாசனம் முக்கியமான ஒன்றாகும். பத்மா என்ற தாமரை. தாமரை வடிவில் அமர்வதை பத்மாசனம் என்றும் கமலஹாசனம் என்றும் கூறுவர். இந்த ஆசனத்தை காலையிலும் மாலையிலும் வெறும் வயிற்றில் செய்வது நல்லது. இந்த ஆசனத்தை எப்படி செய்வது என்றும் அதன் (Padmasana Benefits in Tamil) பலன்கள் என்ன என்றும் பார்க்கலாம்.

"</p

Advertisement

பத்மாசனம் செய்முறை 

Padmasana Benefits in Tamil – வலது காலை இடது தொடையின் மீதும், இடது காலை வலது தொடையில் வைத்தும் விரிப்பில் நிமிர்ந்து உட்காரவும். குதிகால்களை அடிவயிற்றுக்கு அருகில் வைக்கவும். தளங்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும். முழங்கால்கள் தரையைத் தொட்டு நிமிர்ந்து உட்காரவும்.

வடகிழக்கு திசையில் அமர்வது நல்லது. கட்டை விரலின் நுனி ஆள்காட்டி விரலின் நுனியைத் தொட வேண்டும். உங்கள் கண்களை மூடிக்கொண்டு உங்கள் எண்ணங்களை ஒருமுகப்படுத்துங்கள். சாதாரணமாக சுவாசிக்கவும்.

Advertisement

பத்மாசனம் செய்வதற்கு முன், தொடை மீது ஒரே ஒரு காலை மட்டும் உட்கார வைத்து பயிற்சி செய்யலாம். இதை வலது அல்லது இடது காலாக மாற்றலாம். இந்த ஆசனத்தைச் செய்யத் தொடங்கும் போது, கால்களை மடக்கி உட்கார்ந்துகொள்வது சற்று கடினம்.

வலி மற்றும் சிரமத்துடன் ஆரம்ப கட்டத்தில் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆரம்பத்தில் எவ்வளவு நேரம் உட்கார முடியுமோ அவ்வளவு நேரம் உட்காரும் நேரத்தை படிப்படியாக அதிகரிக்கலாம். பழகிய பிறகு அரை மணி நேரம் கூட செய்யலாம். அப்படி இந்த பத்மாசனம் செய்வதால் ஏற்படும் எட்டு முக்கியமான பலன்களைப் பார்ப்போம்.

Advertisement

பத்மாசனம் நன்மைகள்

Padmasana Benefits in Tamil – பத்மாசனம் செய்யும் பொழுது முதுகுத்தண்டு வடம் நேராக இருப்பதால் முதுகெலும்பு மற்றும் இடுப்பு பகுதியை பலப்படுத்த உதவுகிறது படிப்படியாக இடுப்பு வலி குறைய உதவுகிறது. இடுப்பு வலி முதுகு வலி இருப்பவர்கள் தொடர்ந்து பத்மாசனம் செய்து வருவது நல்லது.

பெண்கள் பத்மாசனம் செய்யும் பொழுது இடுப்பு பகுதியில் உள்ள தசைகள் மற்றும் அடிவயிற்று பகுதியை வலுப்படுத்துகிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி உடல் சோர்வை குணப்படுத்துகிறது.

Advertisement

சிறுவர்கள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் மூளை செயல்பாடு அதிகரிக்கும். நரம்பு மண்டலம் பலமடைய உதவும். கவனிக்கும் திறன் நினைவாற்றல் திறனை அதிகரிக்கச் செய்யும்.

பத்மாசனம் செய்து வரும் பொழுது உடலில் காற்று நிலையை சமநிலைப்படுத்துவதால் நுரையீரல் மற்றும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கவும் உடலில் புத்துணர்வு பெறவும் உதவுகிறது. இதனால் வாதம் தொடர்பான நோய்களை குறைக்க பத்மாசனம் சிறந்தது.

Advertisement

பத்மாசனம் செரிமான மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது. இந்த ஆசனத்தை தினமும் செய்து வரும் பொழுது செரிமான சக்தி அதிகரித்து வயிற்றுப் பகுதியை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நன்கு பசியை தூண்டுகிறது.

ரத்த அழுத்தம் இருப்பவர்கள் தினமும் காலை மாலை இந்த ஆசனம் செய்யும் பொழுது உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

Advertisement

பத்மாசனம் செய்வதால் மூளை பகுதிக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மூளை செயல் திறன் அதிகரிக்கிறது. மன அழுத்தம் பதட்டம் கோபம் எதிர்மறை எண்ணங்கள் போன்றவை படிப்படியாக குறைந்து மன நிம்மதியை அதிகரிக்க உதவுகிறது. நேர்மறை எண்ணங்களையும் உடல் ஆற்றலையும் அதிகரிக்க செய்கிறது.

பத்மாசனம் செய்யும் பொழுது கணுக்கள் பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது .இதனால் கால்களை வலுவடையச் செய்கிறது. இன்னும் உடலுக்கு சிறந்த நன்மைகளை தரக்கூடியது பத்துமாசம்

Advertisement