நிலவேம்பு கசாயம் நன்மைகள் இந்த பதிவை பார்க்காம இத குடிக்காதீங்க 2024

நிலவேம்பு கசாயம் நன்மைகள்

இந்த பதிவில் டெங்கு காய்ச்சலுக்கு பரவலா பயன்படுத்தப்படக்கூடிய நிலவேம்பு கசாயத்தை பற்றி தான் பார்க்க போறோம். நிலவேம்பு கசாயம் என்றால் என்ன? அது எப்படி வந்து சரியான முறையில் தயாரிக்கணும்? எந்த அளவு டோஸ் எவ்வளவு வந்து கொடுக்கணும். குழந்தைகளுக்கு எவ்ளோ? பெரியவங்களுக்கு எவ்ளோ நிலவேம்பு கசாயம் நன்மைகள் என்னென்ன அது மாதிரி பல்வேறு தகவல்கள் வந்து பார்க்கலாம்.

முதல்ல நிலவேம்பு கசாயம் அப்படி என்றது என்ன என்பதை பார்க்கலாம்.நீங்க கடையில நிலவேம்பு கசாயபோடின்னு சொல்லி நீங்க பவுடர் வாங்கறது வந்து அதுல நிலவேம்பு இருக்கும், அது கூட மற்ற சில மூலிகைகளும் சேர்த்து தான் வந்து அதை காய வைத்து அரைத்திருப்பாங்க. 

நிலவேம்பு கசாயம் என்பது நிலவேம்பு மட்டும் கிடையாது. அது கூட சில மூலிகைகள் சேர்ந்து இருக்கக்கூடிய ஒரு மருந்து. நிலவேம்பு கசாயம் நன்மைகள் இந்த நிலவேம்பு கசாயத்துக்கு பாத்தீங்க அப்படின்னா வைரஸ் எதிர்ப்பு (Anti- Viral), ஆன்டி பைரிடிக் ( Anti – Pyretic), அழற்சி எதிர்ப்பு (Anti Inflammatory) இருக்கு.

ஆன்டிவைரல் அப்படின்னா வைரஸ் கிருமிகளை எதிர்க்கக்கூடிய பண்பு இருக்கு அப்படின்றது அர்த்தம். ஆன்டி பைரிடிக் என்பது காய்ச்சலை குறைக்கக்கூடிய தன்மை இருக்கு அப்படின்னு அர்த்தம். Anti Inflammatory அழற்சி எதிர்ப்பு பண்பு இருக்கு. 

இத வந்து நீங்க சரியான முறையில் தயாரித்து சரியான டோஸ்ல குடிச்சா மட்டும்தான் அதனுடைய எஃபெக்ட் கிடைக்கும். சரியான முறையில் தயாரிப்பது எப்படின்னா நீங்க வந்து கடையில் போய்விட்டு நீங்க பவுடர் வாங்குறீங்க, அந்த பவுடரை வந்து ஒரு ஸ்பூன் அதாவது 5 கிராம் டீ ஸ்பூன் அளவுக்கு 5 கிராம் எடுத்துக்கணும், அத 250 மில்லி தண்ணீரில் வந்து கொதிக்க வைக்கணும் அதாவது ஒரு பாத்திரம் எடுத்துக்கோங்க. அதுல ஒரு கிளாஸ் அதாவது 250 எம்எல் தண்ணி வந்து கொதிக்க வச்சிட்டு அதுல 5 கிராம் அளவுக்கு நிலவேம்பு பொடியை வந்து போட்டு நல்லா கொதிக்க விடணும்.

அந்த தண்ணி 60 ml அதாவது 60ml குறையற வரைக்கும் கொதிக்கணும். அதுக்கு அப்புறமா அதை பில்டர் பண்ணிட்டு அந்த கசாயத்தை வந்து நீங்க மூணு மணி நேரத்துக்குள்ள குடிக்கணும். இது மாதிரி தயாரிச்சு குடிச்சா மட்டும் தான் நான் ஏற்கனவே சொன்ன பயன்கள் எல்லாமே உங்களுக்கு கிடைக்கும்.

இதுவும் வந்து பாத்தீங்கன்னா அஞ்சு வயசுல இருந்து 12 வயசுக்குள்ள இருக்குறவங்களுக்கு பத்து மில்லி, 12 வயசுல இருந்து 18 வயதிற்குள் இருக்கிறவங்களுக்கு 30 மில்லி, 18 வயசுக்கு மேல பெரியவங்களுக்கு வந்து 60 மில்லி இதை வந்து காலையில நைட்ன்னு சொல்லி ரெண்டு வேளை சாப்பிட்டதுக்கு அப்புறமா குடிக்கணும்.

நிறைய பேர் நினைப்பீங்க நிலவேம்பு கசாயம் நன்மைகள் வெறும் வயித்துல குடிச்சாதான் நல்லதுன்னு, அனால் வழிகாட்டுதலில் சப்பிட்ட அப்புறம் தான் வந்து குடிக்க சொல்லி இருக்காங்க.

உங்களுக்கு வந்து டெங்கு சோரம் இருக்கு அப்படின்னா ஏழு நாளைக்கு குடிக்கணும். காலையில, நைட் அப்படின்னு சொல்லிட்டு ஏழு நாளைக்கு நீங்க குடிக்கணும். ஆரம்பிச்ச நாளிலிருந்து நீங்க வந்து பாரசிட்டமால் கூட இந்த நிலவேம்பு கசாயமும் வந்து குடிக்கலாம்.

வீட்ல வந்து யாருக்காவது டெங்கு பீவர் இருக்கு மத்தவங்களுக்கு வந்து பீவர் வரக்கூடாது அப்படின்னு நினைக்கிறீங்கனா மூணு நாளைக்கு காலையில், நைட் இரண்டு வேலை வந்து நீங்க குடிக்கலாம். 

இதையும் படிக்கலாமே!! 👇👇

பனங்கிழங்கு சாப்பிடுவதால் நன்மைகள் இதுல இவ்ளோ இருக்கா கட்டாயம் இத பாருங்க 2024..!

வெந்தயம் நன்மைகள் தினசரி இத சாப்பிடும்போது உடலில் நிகழும் அதிசயம் 2024

சீரக தண்ணீர் பயன்கள் அடேங்கப்பா இதுல இவ்ளோ இருக்கா 2024..!