Myna Bird in Tamil : நம்மில் பலருக்கும் தெரிந்திடாத மைனா பறவையின் பல தகவல்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். நம் எல்லாருக்கும் ரொம்ப பழக்கமா தெரிந்த பறவை தான் மைனா.
எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் பார்க்கலாம். இதோட சத்தத்தை கேக்கலாம். கிழக்கு ஆசிய நாடுகள்தான் அதுவும் இந்தியா, இலங்கை நாடுகள் தான் இந்த மைனாவுக்கு தாய் பூமி.
தாய் ஒரு காலத்தில் இங்கிருந்து அமெரிக்கா நாடுகளுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன.
தமிழ், சிங்களம், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் இது மைனா என்றே அழைக்கபடுகிறது. இந்த பதிவில் மைனாக்கள் பற்றிய ஆச்சர்ய தகவல்கள் பற்றி பார்க்கலாம்.
Myna Bird in Tamil (Amazing information)
இந்தியாவில் இருக்ககூடிய மைனாக்கள் அனைத்துமே பொதுவா உச்சந்தலை முதல் கழுத்து பகுதி வர கருமையாகவும், உடல் பகுதி பழுப்பு கலந்த மண் நிறத்திலும் காணப்படும்.
அவற்றின் அழகும், கண்களில் ஓரங்களும் கால்களும் மஞ்சள் நிறத்தில் இருக்குதும், அழகுல இருந்து ஆரம்பிக்கும் மஞ்சள் நிறம் அப்படியே நீண்டு வந்து கண்களையும் சுத்திப்படாந்திருக்கும். இந்த மஞ்சள் நிற அலங்காரம் தான் மைனாக்களின் தோற்றத்தை மெருகேற்றுகிறது.
உறுதியான கால்களும், வலுவான சிறகுகளும் இந்த மைனா பறவைக்கு இருக்கு.
வளர்ந்த மைனா ஒன்று 25 சென்டிமீட்டர் நீளம் இருக்கும், புறத்தோற்றத்தை வைத்து பார்க்கும் போது மைனாக்கள் ஏழு வகை இனங்கள் இருப்பதாக கண்டுபிடித்து இருக்கிறார்கள்.
அதுல ரொம்ப பிரபலமானவை நம் நாட்டு மைனாக்கள் தான். மைனாக்கள் பொந்துகளில் தங்களுடைய கூடுகளை அமைத்துக்கொள்கிறது. மற்ற பறவைகளைப் போல மரக் கிளைகளிலோ அவற்றுக்கு கூடு கட்டவே தெரியாது.
Myna Bird in Tamil மைனாக்கள் கூடு
Myna Bird in Tamil பனை, தென்னை, மரப்போந்துகள், செங்குத்தான மண்மேடுகள் உள்ள பொந்துகள் இவற்றில் தான் இந்த மைனாக்கள் கூடு கட்டுகிறது.
பழைய காகிதம், வைக்கோல், துணி இவற்றை பொந்துக்குள்ள கொண்டு போயி மெத்தை போன்று அமைத்து அதுல முட்டையிட்டு அடை காக்கும்.
மைனா பறவைகள் எப்பவுமே கூட்டமா வாழும் இயல்பு படைத்தது. காலையில கூட்டமாக மரங்களில் இருந்து வெளியேறி மாலையிலும் கூட்டமாகவே கூடு வந்து சேரும்.
உணவு உண்பதும், மரக்கிளைகளில் ஓய்வெடுப்பதும், நீர் தேக்கங்களில் குளிப்பதும் கூட்டமாக தான் இருக்கும்.
விடியல் பொழுதிலும், சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திலும் இது கூட்டமா மரங்கள்ல கூடி கிழிச்சு கீச்சுன்னு சத்தம் எழுப்பி கொண்டே இருக்கும். சுமார் 20 அங்கத்தவர்கள் வரை உள்ளடக்கிய கூட்டமா வாழும்.
மைனாக்கால் இனப்பெருக்க காலத்தில் ஜோடி சேர்ந்து மற்ற மைனாக்காலில் இருந்து ஒதுங்கி இருக்கும். இரண்டும் சேர்ந்து தமக்கான கூட்டை தெரிவு செய்து கொள்ளும். அதுக்கப்புறம் அதுல முட்டையிட்டு அடை காக்கும்.
பெண் பறவை அடை காக்க, ஆண் பறவை துணையாய் இருக்கும். எந்த ஒரு பறவையும் கூட்டை அண்ட விடாது. காகங்களையும், பாம்புகளையும் மூர்க்கமாக தாக்கி துரத்தி விடும். அப்படியான வலிமை மிக்க துணிவு இந்த பறவைக்கு இருக்கு.
குஞ்சுகள் பிறந்ததும் இரண்டு பறவைகளும் சேர்ந்து குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கும்.
மைனாக்கள் புழுக்கள், பூச்சிகள், பழங்கள், சிறு தானிய வகைகள் அப்படின்னு எல்லாத்தையும் சாப்பிடும். இந்த பறவையை அனைத்துண்ணி வகைகளிலும் சேர்க்கலாம்.
பூச்சி புழுக்களை விரும்பி உண்பதால் இது விவசாயிகளின் தோழன் என்று சொல்றாங்க.
குஞ்சு மைனாக்கள் சுயமாக பறக்கும் காலத்தை அடையும் வரையிலும் கூட்டுக்குள்ளயே இருக்கும். பெற்றோரின் பராமரிப்பு அதற்கு மிக மிக அவசியமாம்.
பறக்கும் வலிமையை பெற்றுவிட்டால் அதற்கு ஒரு வழியாகவே எல்லா மைனாக்களும் சேர்ந்து கொண்டாடுமாம். குஞ்சு மைனாக்கள் தாமாக வெளியில் வந்து வெளியில வந்து பறக்கணுமாம். அப்படி பறக்கலினா பெற்றோர்கள் வந்து அந்த குஞ்சுகளை எடுத்து வெளிய போற்றுவாங்களாம்.
சுற்றி உள்ள மற்ற மைனாக்கள் எல்லாம் சேர்ந்து சத்தம் போட்டு ஆரவாரம் செய்யுமாம். குஞ்சு மைனா பறக்கறதுக்கு உற்சாகமூட்டுமாம். இது பாக்குறதுக்கு ஒரு கண்கொள்ளா காட்சியாக இருக்குமாம்.
புறா, காகம், சிட்டுக்குருவி போல மைனாக்களும் மனிதர்கள் வாழும் பகுதிகளில் தான் ஓரளவுக்கு வாழும், காரணம் அப்பத்தான் அதுக்கு இலகுவாக உணவும் பாதுகாப்பு கிடைக்கும் என்று நினைக்கும்.
நன்கு பறந்து திரியமுடியுமாக இருந்தாலும் இது எல்லா திசைகளிலும் சுற்றி திரிவதில்லை. தான் பிறந்த இடத்திலிருந்து ஓரிரண்டு கிலோ மீட்டர் தூரம் வைக்குமே இது பறந்து செல்கிறது.
அந்த பரப்புக்குள்ள இருக்குற வீட்டு முற்றங்களுக்கும், கொல்லப்புறங்களுக்கும் இது அடிக்கடி வந்து போகும். அப்படி அடிக்கடி வந்து போறதுனால அந்த வீட்ல இருக்குறவங்களும் இது நல்ல நியாபகம் வச்சிக்கும். அடையாளம் தெரிந்து அவங்ககிட்ட பழக ஆரம்பிக்கும்.
Myna Bird in Tamil பாசமா பழகும்
அப்படி பழகுறப்ப நம்ம அதுக்கு உணவும், நீரும் கொடுத்து அன்பு நடத்தினோம்னா நம்பிக்கையோடு நம்ம பக்கத்துல வந்து உலாவும். உங்க வீட்டுக்கு பக்கத்துல மிச்சமா இருக்குற உணவுகளை ஒரு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் வைத்துவிடுங்கள் உங்களோட மைனா ரொம்ப பாசமா பழகும்.
மைனாக்களுக்கு கிளிய போல பேசறதுக்கு சொல்லிக் கொடுத்தோம்னா அது அப்படியே ஞாபகத்தில் வைத்து அது பேசுமாம். செல்லபிராணியாக வீடுகளிலும் வளர்ப்பதுண்டு.
மைனாக்கள் தங்களுக்குள்ள செய்திகளை பரிமாறிக்கொள்ள சத்தங்களை எழுப்பும். மைனாக்கள் தங்களுக்குள் மூணுல இருந்து 13 வகையான இசை வடிவங்களில் பேசிக்கொள்ளுமாம். மனித குரலை உலகிலேயே மிக நெருக்கமாக திருப்பி தரவல்ல பறவைங்குற ஒரு நல்ல பேரு இந்த மைனாவுக்கு இருக்கு.
1862 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுல நெல்போர் நகர்ல பூச்சிகளை கட்டுப்படுத்த நோக்கத்தோட இந்த மைனாவ அறிமுகப்படுத்தி இருக்காங்க. ஆரம்பத்துல அதன் நோக்கம் வெற்றிகரமாக நடைபெற்றாலும், போக போக வேறுவகையில அந்த நாட்டுக்கு பெரிய தலை இடியா மாறிப்போச்சாம்.
மைனாக்களுடைய எண்ணிக்கை அவ்வளவு வேகத்தில் வளர்ந்து அங்குள்ள தேசிய பறவை இனங்களை எல்லாம் ஒடுக்கிடுச்சாம். குறுகிய காலதத்தில் பன்மடங்கு பெருகி ஆக்கிரமிப்பு நடக்கும் அழிவு சக்திகளில் மிக முக்கிய இடத்தை இந்த மைனாக்கள் பெற்றுவிட்டது என்று சொல்றாங்க.
மரப்பொந்துகளை ஆக்கிரமித்து, மண்ணின் சொந்த பறவைகளையும் விரட்டி அடித்து அக்கிரமம் செய்ய தான் இந்த மைனா. ஒரு மைனாவுக்கு முட்டையிட்டு குஞ்சு பொரிக்க ஒரு பொந்து மட்டுமே தேவை என்ற போதும், சுற்றுபுறத்தில் உள்ள மற்ற பொந்துகளையும் ஆக்கிரமித்துக் கொள்கிறதாம்.
அதுக்கப்புறம் இது போத்ததுன்னு மரக்கிளைகளில் கூடு கட்டி குஞ்சு வச்சிருக்குற பறவைகளோட குஞ்சுகளை போய் கீழ தள்ளி விட்டும் கொன்று விடுதாம். இப்படி மைனாவின் புத்திசாலி தனத்திற்கும், மூர்க்க தனத்திற்கும் ஈடு கொடுக்க முடியாமல் மண்ணின் சொந்த பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களோட இருப்பிடத்தை விட்டு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாம்.
உலகத்தில் உள்ள மிக மோசமான ஆக்கிரமிப்பு இனங்களில் முதல் 100 இடங்களில் இந்த மைனாவும் இருக்கு. ஆஸ்திரேலியாவின் தலைநகர்ல 1970இல் அறிமுகப்படுத்தப்பட்ட மைனாக்களையோட எண்ணிக்கை 110 ஆம். 2006 கணக்கு எடுத்து பார்த்தால் 93000 மைனாக்கள் இருக்காம்.
மைனாக்களின் Myna Bird in Tamil எண்ணிக்கையை கட்டுப்படுத்துற முயற்சியில 2300 க்கும் மேற்பட்டவர்கள் அங்கு பொரி வைத்து மைனாக்கில் பிடிக்கிறதுக்கு அமர்த்தபட்டாங்களாம். ஆனா இந்த பறவைகள் ரொம்ப புத்தி கூர்மையா இருக்குதாம், இந்த பறவையை புடிக்க வைக்கப்படும் பொரிகளில் மிகச் சரியாக மாட்டாமல் தப்பித்து ஓடிவிடுதாம், அப்படியே தவறி ஒன்னு ரெண்டு மாட்டினாலும் உடனடியா மற்ற மைனாக்களுக்கு எச்சரித்து மத்தவங்க வந்து மாட்டாத அளவுக்கு பண்ணிவிடுதாம்.
இத எப்படி புடிக்கிறது எப்படி கட்டுப்படுத்துவது என்று ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்காங்களாம்.