Vinayagar Chaturthi Kozhukattai Recipe in Tamil இன்னைக்கு நம்ம என்ன ரெசிபி பார்க்க போறோம்னா விநாயகர் சதுர்த்தி மோதகம் ரெசிபி தான் பார்க்க போறோம். இந்த மோதக ரெசிபியை வந்து தமிழ்நாட்டுல நம்ம என்ன சொல்லுவோம்னா இனிப்பு கொழுக்கட்டை இல்லைன்னா பூரண கொழுக்கட்டைன்னு சொல்லுவோம். இது வந்து மோஸ்ட்லி விநாயகர் சதுர்த்திக்கு எல்லாருமே வீட்ல செய்வாங்க. வாங்க எப்படி செய்றதுன்றதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 2 டீஸ்பூன் நெய்
- 2 கப் துருவுன தேங்காய்
- 1 கப் வெல்லம்
- 1 டீஸ்பூன் ஏலக்காய் பவுடர்
- 2 கப் அரிசி மாவு
Pooranam Kozhukattai Recipe in Tamil செய்முறை
ஃபர்ஸ்ட் ஒரு கடாயில ரெண்டு டீஸ்பூன் நெய் ஆட் பண்ணிக்கோங்க. அதுக்கப்புறம் ரெண்டு கப் துருவுன தேங்காய் ஆட் பண்ணிக்கோங்க இதை ஒரு அஞ்சு நிமிஷம் நல்லா ரோஸ்ட் பண்ணிக்கோங்க.
அதுக்கப்புறம் ஒரு கப் வெல்லம் ஆட் பண்ணிக்கோங்க. வெல்லத்தை வந்து நீங்க தண்ணில உருக்கியும் ஆட் பண்ணலாம். இல்ல நார்மலா பொடி பண்ணியும் ஆட் பண்ணலாம். எப்படினாலும் ரெடி பண்ணிக்கலாம். இப்ப வந்து ஒரு டீஸ்பூன் அளவுக்கு ஏலக்காய் பவுடர் ஆட் பண்ணிக்கோங்க. இப்ப வந்து இந்த வெல்லம் வந்து நல்லா மெல்ட் ஆகுற வரைக்கும் நல்லா ரெடி பண்ணிக்கலாம். அது நல்லா மெல்ட் ஆன உடனே தனியா எடுத்து வச்சிருங்க.
அதுக்கப்புறம் இன்னொரு கடாயில ஒரு டீஸ்பூன் நெய் ஆட் பண்ணிக்கோங்க. ரெண்டு கப் தண்ணி ஆட் பண்ணிக்கோங்க. தண்ணி நல்லா கொதிச்சு வந்த பின்னாடி ரெண்டு கப் அளவுக்கு அரிசி மாவு ஆட் பண்ணிக்கோங்க. இதை நல்லா கிண்டி விட்டுக்கோங்க.
நம்ம இந்த ரெசிபில வந்து நெய் ஆட் பண்ணிட்டு தண்ணிய கொதிக்க வச்சு மாவு போடுறதுனால கொழுக்கட்டை வந்து நம்மளுக்கு ரொம்பவே சாஃப்டா இருக்கும். இதான் மோதகத்தோட ஸ்பெஷாலிட்டி தண்ணி கொதிக்கும் போதே உப்பு ஆட் பண்ணிக்கோங்க.
இதை நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுட்டு ஒரு அஞ்சு நிமிஷம் அப்படியே மூடி வச்சிருங்க. இதை வந்து பைவ் மினிட்ஸ் நல்லா மூடி வைக்கிறதுனால அதுல இருக்க ஆவிப்பட்டு மாவு வந்து இன்னும் கொஞ்சம் நல்லா சாஃப்டா இருக்கும். நம்மளுக்கு வந்து பிசையறதுக்கும் நல்லா சாஃப்டா இருக்கும். இதை நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுக்கோங்க.
நல்லா இப்ப வந்து மாவு வந்து எல்லாத்தையும் சேர்த்து பிசைஞ்சு செஞ்சுக்கோங்க. அது நல்லா எல்லாம் கம்பைன் ஆகி வரணும். கையில வந்து எண்ணெய் அப்ளை பண்ணிக்கோங்க கையில வந்து மாவு ஒட்டாம இருக்கறதுக்கு.
இப்ப வந்து கொஞ்சம் கொஞ்சமா மாவு உருட்டிக்கோங்க மாவு வந்து உருட்டும்போதே விரிசல் இல்லாம உருட்டிக்கோங்க. அதை உருட்டுன பின்னாடி பிரஸ் பண்ணிக்கோங்க. உருட்டிட்டு சைடுல பிரஸ் பண்ணிக்கிட்டே வாங்க.
ஒரு கப் ஷேப்புக்கு வரும் அந்த கப் ஷேப்குள்ள நம்ம பூரணம் ரெடி பண்ணி இருக்கோம்ல அதை உள்ளுக்கு வச்சுக்கலாம். நீங்க உள்ளுக்கு வைக்கும்போது பூரணம் வந்து ரொம்ப நிறைய வச்சிராதீங்க. ரொம்ப நிறைய வச்சோம்னா அது வந்து மடிச்சிட்டு அதை வந்து ரெடி பண்ண முடியாது. அது கொஞ்சம் கஷ்டமா இருக்கும். சோ வந்து தேவையான அளவுக்கு மட்டும் பூரணம் உள்ளுக்கு வைங்க. நிறைய வச்சிராதீங்க.
பூரணத்தை உள்ளுக்கு வச்சிட்டு சைடுல வந்து மடிச்சுக்கோங்க. சுத்தி நம்ம மடிச்சிருக்கோம்ல அது எல்லாத்தையுமே சேர்த்து கம்பைனா கொண்டு வாங்க கொண்டு வந்துட்டு மெதுவா மேல வந்து இழுத்து விடுங்க இப்ப பார்த்தோம்னா நம்மளுக்கு மோதகம் ரெடி ஆயிடுச்சு. இதே மாதிரி எல்லா மாவையும் ரெடி பண்ணி எடுத்துக்கோங்க.
அப்படி வந்து உங்களுக்கு மோதகம் வந்து கையில செய்ய தெரியலைன்னா நீங்க அச்சு வச்சு கூட எடுத்துக்கலாம். நீங்க ஏதாவது மோல்டு வச்சிருந்தீங்கன்னா அதுல கூட ரெடி பண்ணிக்கலாம். ரொம்ப ஈஸியா வந்துரும்.
நீட்டா இந்த மோதகம் டிசைன் வந்து சீக்கிரமாவே செஞ்சிரலாம். அப்படி உங்களுக்கு டைம் அதிகமா எடுக்குற மாதிரி தோணுச்சுன்னா நீங்க மோல்டு யூஸ் பண்ணிக்கலாம்.இப்ப வந்து இதை வேக வைக்கிறதுக்கு இட்லி பிளேட் இல்லைன்னா, ஸ்டீமர் பிளேட் எடுத்துக்கோங்க அதுல வந்து இந்த மோதகத்தை பிளேஸ் பண்ணிக்கோங்க.
இப்ப வந்து ஸ்டீமர்ல வச்சிரலாம். இதை நல்லா மூடி வச்சுக்கோங்க. ஒரு 10 நிமிஷம் வெந்தா போதும் ஏன்னா ஆல்ரெடி மாவு வெந்துருச்சு 10 நிமிஷம் கழிச்சு எடுத்துக்கலாம். அவ்வளவுதான் ரொம்பவே ஈஸியான சிம்பிளான விநாயகர் சதுர்த்தி Kozhukattai Recipe in Tamil மோதகம் ரெடி.
இந்த மோதகத்துல நீங்க பூரணத்துல வந்து பாசிப்பருப்பு இல்லைன்னா வந்து பொட்டுக்கடலை மாவு இதெல்லாம் கூட ஆட் பண்ணா கூட நல்லா இருக்கும்.
Gulab Jamun Recipe in Tamil : விரிசல் இல்லாத பிரட் குலாப் ஜாமுன்! சிம்பிள் ரெசிபி