உள்ளுணவு என்றால் என்ன? தமிழில் முழு விளக்கம்

Intuition Meaning in Tamil

எந்த ஒரு அடிப்படைக் கல்வியும் கூட முடிக்காதவர்கள் பல அற்புதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கிறார்கள். யோகிகள், ஞானிகள் கல்வி அறிவு இல்லாவிட்டாலும் கூட பல அற்புதமான தகவல்களை பேசுகிறார்கள்.

இலக்கிய அறிவே இல்லாத ஒருத்தர் அழகான பாடல்களை எழுதுகிறார். கலை இலக்கியங்களை படைக்கிறார்கள். இவையெல்லாம் எப்படி நிகழ்கிறது? அவர்கள் சரியாக அவர்களினுடைய உள்ளுணர்வை பயன்படுத்துகிறார்கள்.

என்னதான் எல்லோருக்கும் திறமை இருந்தாலும் ஒருவரினுடைய உள்ளுணர்வைக் கொண்டு வரக்கூடிய படைப்புகள் மிகவும் அற்புதமானதாகவும், எல்லோரையும் ஏற்கக்கூடிய ஆற்றல் உடையதாகவும் இருக்கிறது.

அப்படிப்பட்ட உள்ளுணர்வை பற்றித்தான் பார்க்கவிருக்கிறோம். இந்த உள்ளுணர்வு சிலருக்கு இயல்பாகவே அதிகமானதாக இருக்கும். சிலர் தவத்தின் முறையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் போது, அந்த அவர்களினுடைய உள்ளுணர்வானது அதிகமாக வளரும்.

ஒரு நன் விஷயமோ அல்லது கெடுதலோ நடக்கப் போவதை முன்கூட்டியே கூறுவது, வீட்டுக்கு யாரோ வரப்போவதாக கூறி அதே போல் வீட்டிற்கு உறவினர்கள் வருவது, ஒரு மனிதரை சந்திக்கும் போது நல்லவரா கெட்டவரா என்ற எண்ணத்தில் உதிப்பது, ஒரு வழிபாட்டுத் தலத்திற்குள் செல்லும்போது அங்கு நேர்மறையான சக்தியான ஆற்றலை உணர்வது.

ஒரு வீட்டிற்குள் செல்லும்போது நேர்மறையான அல்லது எதிர்மறையான ஆற்றல்களை உணர்வது, தேர்வு எழுதிவிட்டு அதன் விடையை சரி பார்க்கும் பொழுது நான் அப்போதே சரியாகத்தான் நினைத்தேன் ஆனால் மாற்றி எழுதி விட்டேன் என்று பலரும் புலம்புவார்கள் அப்படி அப்போதே நான் நினைத்தேன் என்ற எண்ணம் தான் உள்ளுணர்வு (Intuition)

இந்த உள்ளுணர்வானது நம்முடைய ஆழ்மனதிலிருந்து வெளிப்படக்கூடிய ஒரு உணர்வு நிலை. அவர்கள் நேர்மறையான எண்ணங்களை அதிகமாக வைக்கும் பொழுது அவர்களுடைய எண்ணம் போல் நல்லவற்றை ஏற்கக்கூடிய ஆற்றலுமாக மாறுகிறது. இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் பேசும் அறிவுறுத்தப்படும் உணர்வு நிலைதான் உள்ளுணர்வு.

நடக்கப் போகும் நல்லவற்றை மட்டும் அல்லாது எதிர்மறையான விஷயங்களையும் கூட இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் சில நேரங்களில் இந்த உணர்வு நிலையினை பெரிதாக கண்டுகொள்ளாமல், நடந்து முடிந்த பிறகு வருத்தப்படுவது தான் பெரும்பாலும் நடக்கிறது.

சிலர் மட்டுமே சரியாக இந்த உள்ளுணர்வினை பயன்படுத்தி பல வெற்றிகளை பெறுகிறார்கள். உள்ளுணர்வு எல்லோருக்கும் இருந்தாலும் அதனை புரிந்து கொள்ளும் சக்தி ஒவ்வொருவருக்கும் மாறுபடும். இந்த உள்ளுணர்வை சரியாக புரிந்து கொள்வதற்கு தவம் பக்க பலமாக இருக்கிறது.

நான் யார் என்ற கேள்விதான் ஞானத்தின் முதல் தேடலை உள்ளுணர்வு மூலம் தூண்டப்படும் கேள்விகளுக்கு செவி சாய்த்து தேடலை தொடங்கும் போது தான் ஞானம் பிறக்கிறது.

பொதுவிதமான சிந்தனைகளின் பிறப்பிடம் உள்ளுணர்வு தான். அப்படி உள்ளுணர்வை கொண்டு செய்யப்படும் அனைத்தும் பிரமிப்பை ஊட்டும். கவிதை, கலை, அறிவியல் கண்டுபிடிப்புகள் என்று சிறந்து விளங்குபவர்களும் இந்த உள்ளுணர்வை பயன்படுத்தி தான் வியக்க வைக்கிறார்கள்.

எங்கும் யாரிடமும் கற்காமல் பல அறிவார்ந்த கருத்துக்களை பேசும் ஞானிகளை கண்டறிப்பீர்கள். இந்த ஞான நிலையை எப்படி அவர்களுக்கு வந்திருக்கும் என்று சிந்தித்தது உண்டா? அவர்களின் உள் உணர்வை கையாளும் திறந்தான் இந்த ஞான நிலைக்கு காரணம். இந்த உள்ளுணர்வு தான் பிரபஞ்ச அறிவு. ஞான நிலை தான் உள்ளுணர்வு. அதை பெறவேண்டும் என வெளிப்புற தேடல்களை விட்டுவிட்டு அகத்தேடலுக்குள் ஆழ்ந்து பயணிக்க வேண்டும்.

பேச்சை குறைத்து மூச்சை கவனித்து மனம் அமைதி நிலையை அடையும் போது உள் உணர்வின் பேச்சை கேட்க முடியும். அகத்தின் உள்ளே பயணிக்க பயணிக்க மனம் அமைதி பெற உள்ளுணர்வை புரிந்து கொள்ளும் ஆற்றல் வந்துவிடும். உங்களின் கணிப்பு 100% நடக்கும். எதையும் முன்கூட்டியே அறிய முடியும்.

அந்த உள் உணர்வை சரியாக நல்வழியில் பயன்படுத்த நீங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். வஞ்சகம், சூழ்ச்சி, பொறாமை குணங்கள் அற்று அன்பின் மார்க்கமாக தவநிலைகளை மேற்கொள்ளும் போது நீங்கள் செய்யும் தொழில் சிறக்கும். உங்கள் தனித்திறன், கருத்துக்கள், சிந்தனைகள் தெளிவாகும்.

உலகம் போற்றும் ஞானம் பெற்று எண்ணிய நிலையினை அடைவீர்கள். உள்ளுணர்வை முறையாக பயன்படுத்தினால் அவரவர் என்னென்ன தேடல்களுக்குள் பயணிக்கிறீர்களோ அந்த பயணங்கள் கட்டாயமாக வெற்றிகரமாக இருப்பதோடு அது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகவும் இருக்கும். 

வாழ்க்கை என்பது என்ன? உயிரோடு இருப்பதா, மகிழ்ச்சியாக இருப்பதா எது வாழ்க்கை!!