Ettukudi Murugan | எட்டுக்குடி முருகன்
Ettukudi Murugan Temple – நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டுக்குடி முருகன் கோவில். வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில் (Ettukudi Murugan) தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் எட்டுக்குடி என்ற ஊரில் இந்த கோவில் அமைந்துள்ளது.
நாகப்பட்டினம் அருகில் உள்ள ஊரில் இறைத்தன்மை கொண்ட சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். அந்த சிற்பி ஒரு அற்புதமான முருகன் சிலையை செதுக்கிறான். அப்போது ஆட்சியில் இருந்த சோழ மன்னர் ஒருவர் திருப்பி வழித்த சிலையில் சொக்கிப் போனார்.
இதுபோன்ற தெய்வீகமான வேறு சிலைகளை அச்சிறுப்பி செதுக்க கூடாது என்ற எண்ணத்தில் அந்த சிற்பியின் கட்டை விரலை வெட்டுமாறு மன்னர் உத்தரவிட்டார்.
இதனால் வேதனை அடைந்த சிற்பி பக்கத்து ஊருக்கு வந்தார். அந்த ஊரில் தனது விடாமுயற்சியால் மற்றொரு அற்புதமான முருகன் சிலையை வடித்தார். தெய்வீகமான அந்த சிலையில் இருந்து ஒளி வீச தொடங்கியது.
சிற்பம் முழுவதுமாக முடிவதற்குள் அச்சிலைக்கு உயிர் வந்து சிலையில் முருகன் அமர்ந்திருக்கும் மயில் பறக்கத் தொடங்கியது. அதை கண்ட மன்னர் அந்த மயிலை எட்டிப்பிடி என உத்தரவிட்டார். அதன் பிறகு அந்த மயில் அங்கேயே சிலையாக நின்று விட்டது. காலப்போக்கில் இந்த ஊரின் பெயரும் எட்டிப்பிடி என்பது எட்டுக்குடி என மாறிவிட்டது.
இத்தளத்தில் சிவபெருமான் சௌந்தரநாயகர் எனும் திருநாமத்துடனும், அம்பிகை ஆனந்தவல்லி என்னும் திருநாமத்துடனும் காட்சி தருகின்றனர். வான்மீகர் சித்தர் சமாதி கோவிலில் உள்ளது. இக்கோவிலின் தல விருட்சம் வன்னி மரம். தீர்த்தம் சரவணப் பொய்கை தீர்த்தம். அருணகிரிநாதரை ஸ்தலம் முருகனை தமது திருப்புகளில் பாடியுள்ளார்.
இந்த முருகன் கோயில் சிறப்பு என்னவென்றால் பார்க்கும் விதத்திற்கு ஏற்ப முருகன் விக்ரகம் நமக்கு காட்சி தருவதாகும். குழந்தையாக பார்த்தால் குழந்தை வடிவிலும், இளைஞனாக பார்த்தால் இளைஞன் போலவும், முதியோராக பார்த்தால் முதியூர் தோட்டத்திலும் முருகன் காட்சியளிக்கிறார்.
கோவில் பிரகாரத்தில் முருகனின் நவ தளபதிகளுக்கும் சிலைகள் இருக்கிறது. தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், ஐயப்பன், மகாலட்சுமி, சௌந்தரராஜ பெருமாள், நவகிரகங்கள் ஆகியோருக்கும் இங்கு சிலைகள் இருக்கின்றன. சித்ரா பௌர்ணமி தினத்தன்று இங்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
வான்மீகர் என்கிற சித்தர் சமாதி அடைந்த தளமாக இக்கோவில் இருக்கிறது. இக்கோவிலில் சஷ்டி விரதத்தையும், கௌரி விரதத்தையும் மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
தீபாவளி அன்று கடைபிடிக்கப்படும் கேதார கௌரி விரதம் தோன்றிய தளம் இது என கூறப்படுகிறது. இங்கு முருகன் அம்பாறையில் இருந்து அம்பு எடுக்கும் கோலத்தில் காட்சியளிக்கிறார்.
பயந்த சுபாவம் உள்ள குழந்தைகள் இந்து முருகனை தரிசிப்பதாலும், இந்த முருகனின் வரலாற்றை குழந்தைகளுக்கு சொல்வதாலும் அவர்கள் பயம் நீங்கி படைப்பாற்றல் மிக்கவர்களாக திகழ்வார்கள் என்பது பக்தர்கள் கருத்தாகும். நீங்களும் இந்த கோவிலுக்கு வந்து இறைவனின் அருளை பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தைதான்..!