School Holiday: கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது! முழு விவரங்கள் உள்ளே!

School Holiday: சென்னையைத் தொடர்ந்து தமிழகத்தின் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது. இதனால், கடந்த சில நாட்களாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

நாளை கனமழை பெய்யும் என்றும், நாளை மறுநாள், குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை போன்ற தமிழக பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக தமிழக அரசு பல்வேறு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரியில் நாளை கனமழை பெய்யும் என்பதால், காரைக்கால் மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே விடுமுறை அளித்துள்ளார்.

மேலும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாணவர்கள் கவனிக்க.. அரையாண்டு தேர்வு விடுமுறைகள் குறித்த புதிய அறிவிப்பு!