Chicken Kulambu Seivathu Eppadi | Very simple & Tasty

நம்ம இன்னைக்கு ரொம்ப டேஸ்டியான ஸ்பெஷலான சிக்கன் குழம்பு எப்படி பண்றதுன்னு பாக்க போறோம். இது செய்றது ரொம்ப ஈசி சமைக்கவே தெரியாதவங்க கூட ரொம்ப சிம்பிளா வீட்ல செய்ய முடியும்.

சிக்கன்லாம் அவ்வளவு சாப்டா வெந்து இருக்கும். கரெக்டான பக்குவத்தில் இருக்கும். நீங்க ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டா எந்த அளவுக்கு சுவையா இருக்குமோ அவ்வளவுக்கு சுவையாக இருக்கும்.

சப்பாத்தி, தோசை, சாதம், இட்லி இதெல்லாம் வைத்து சாப்பிடுவதற்கு பக்காவான காம்பினேஷனா இருக்கும்.இப்ப வாங்க இந்த ஈஸியான டேஸ்டியான சிக்கன் கிரேவி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம். 

Chicken Kulambu Seivathu Eppadi

முதல்ல இந்த ரெசிபிபண்றதுக்கு குக்கர சூடு பண்ணிக்கோங்க அதுல  இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் சேர்த்துக்கோங்க.

இதுல ஒரு டீஸ்பூன் சீரகம், ரெண்டு பட்ட, ரெண்டு ஏலக்காய், ரெண்டு மூணு கிராம்பு, ஒரு வரமிளகாய் இதெல்லாம் சேர்த்ததுக்கு அப்புறமா ரெண்டு பெரிய சைஸ் வெங்காயத்தை பொடியா அரிஞ்சுட்டு சேர்த்துக்கோங்க,

தேவையான அளவு உப்பு சேர்த்துட்டு இத நல்லா வதக்கிக்கோங்க, வெங்காயம் எந்த அளவுக்கு பொடியா நறுக்க முடியுமோ அந்த அளவுக்கு கட் பண்ணி வச்சுக்கோங்க. அப்பதான் வந்து கிரேவி டெக்சர் நல்ல வரும். லோ ஃப்லேம்லயே வச்சுட்டு இது நல்லா வதக்கிக்கோங்க. இப்ப பாருங்க வெங்காயம் முழுமையா வதங்கிருச்சு.

வெங்காயம் நல்லா வதங்கினதுக்கு அப்புறமா, ரெண்டு பெரிய சைஸ் பச்சை மிளகாய் பொடியா கட் பண்ணி அதை சேர்த்துக்கோங்க. உங்களுக்கு பச்சை மிளகாய் சேர்க்க விருப்பம் இல்லனா நீங்க ஸ்கிப் பண்ணிடலாம்.

அடுத்து இதுல ஒரு பெரிய சைஸ் தக்காளியை பொடியா அரிஞ்சுட்டு சேர்த்துக்கோங்க. தக்காளி நல்ல தொக்கு பதத்துக்கு வர வரைக்கும் நல்லா இதை வதக்கிக்கோங்க. லோ ஃபிளேம்லயே வச்சுட்டு வதக்குங்க. இப்ப தக்காளி முழுமையா வதங்கினத்துக்கு அப்புறமா இதுல இஞ்சி பூண்டு விழுது வந்து சேக்கணும் .

ஒன்ற டேபிள் ஸ்பூன் அளவு இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கோங்க. சேர்த்திட்டு இதோட பச்சை வாசனை போறது வரைக்கும் நல்லா இதை வதக்கிக்கோங்க. தக்காளி சேர்த்ததுக்கு அப்புறம் நம்ம இஞ்சி பூண்டு விழுது சேர்க்கறதுனால அந்த இஞ்சி பூண்டு விழுது போய் கடாயில வந்து நல்ல ஒட்டாது. இப்ப இஞ்சி பூண்டு பேஸ்ட் ஓட பச்சை வாசனை போயிடும்.

இப்போ இதுல மசாலாஸ் வந்து சேர்க்கணும். மிளகாத்தூள் இதெல்லாம் வைத்திருப்போம்ல அது வந்து சேர்க்கனும்.

ஒன்றரை டேபிள் ஸ்பூன் அளவு மிளகாய்த்தூள், ரெண்டு டேபிள் ஸ்பூன் அளவு மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் இது எல்லாத்தையும் சேர்த்துட்டு நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க.

இப்ப இந்த மசாலாவுடன் பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா வதக்கிக்கோங்க. லோ பிளேம்லேயே வச்சிட்டு வதக்கிட்டு இதுல தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கோங்க. 

தண்ணி சேர்த்துட்டு இது நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க. தண்ணி சேர்த்து நல்லா கலந்ததுக்கு அப்புறமா லோ பிளேம்ல வச்சு ஒரு நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க. இந்த கிரேவி வந்து ஒரு திக்கான கன்சிஸ்டெண்சிக்கு வரும். அதுக்கு அப்புறமா நம்ம வாஷ் பண்ணி வச்சிருக்க சிக்கன் இது கூட சேர்க்கலாம்.

இப்ப வந்து இந்த ஸ்டேஜ்ல நம்ம வாஷ் பண்ணி வச்சிருக்க சிக்கன் வந்து சேர்க்கணும். அரை கிலோ அளவு சிக்கன் சேர்த்துட்டு இதை நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க. 

ஒரு ஒரு நிமிஷத்துக்கு இதை வேக வச்சுக்கோங்க. ஒரு நிமிஷத்துக்கு அப்புறமா தேவையான அளவு தண்ணி சேர்த்துக்கோங்க. உங்க கிரேவியோட கன்சிஸ்டன்ஸி அட்ஜஸ்ட் பண்ணி நீங்க வந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கோங்க.

கிரேவி கெட்டியா வர்றதுக்காக ஒரு சின்ன பவுலில் ஒரு கால் டீஸ்பூன் அளவு கடலைமாவு எடுத்துக்கோங்க. இது கூட கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கோங்க. ஒரு கால் கப் அளவு தண்ணீர் சேர்த்துட்டு நல்ல இதை கட்டிகள் இல்லாம கலந்துக்கோங்க. கொஞ்சம் கூட கட்டிகள் இருக்க கூடாது. நல்ல இதை மிக்ஸ் பண்ணிக்கோங்க.

கிரேவி டெக்சர் வந்து திக்கா வருது மட்டும் இல்லாம ரெஸ்டாரண்ட்ல கிடைக்கிற டேஸ்டும் நம்மளுக்கு வந்து கிடைக்கும். ரெஸ்டாரன்ட் எல்லாம் இந்த மாதிரி சேர்ப்பாங்க. அப்ப அந்த டேஸ்ட் நமக்கு வந்து கிடைக்கும். சேத்ததுக்கு அப்புறமா இது நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க. நல்லா இதை கலந்ததுக்கு அப்புறமா குக்கர் மூடி போட்டு மூடிட்டு லோ ஃபிளேம்ல வச்சு ஒரு விசில் வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க.

லோ ஃபிளேம்ல வச்சுக்கோங்க அப்படி இல்லன்னா மீடியம் ஃபிளேம்ல வச்சுக்கலாம். பிரஷர் தானா ரிலீசானதுக்கு அப்புறமா நம்ம குக்கர் ஓபன் பண்ணி பார்க்கலாம். கடைசியா கொஞ்சமா கொத்தமல்லி இலைகள் சேர்த்துட்டு மிக்ஸ் பண்ணிட்டு நீங்க செர்வ் பண்ணலாம். நீங்க சாதத்துக்கு வச்சு சாப்பிடுறீங்கன்னா இதே கன்சிஸ்டன்சில ரொம்பவே டேஸ்டா இருக்கும். சப்பாத்தி, இட்லி, தோசைக்கு  சாப்பிடறதா இருந்தா இதை கொஞ்சம் கொதிக்கவிட்டு நல்ல திக்கா ஆகிருங்க. அதுக்கு அப்புறமா நீங்க இதை செர்வ் பண்ணுங்க.

Scroll to Top