காலிஃப்ளவர் (Cauliflower) அப்படின்னு சொல்லக்கூடிய முக்கியமான ஒரு காய். இந்த காலிபிளவரை தொடர்ச்சியா அன்றாட உணவுல சேர்த்துட்டே வரும்போது எந்தெந்த நோய்கள் எல்லாம் ஏற்படாமல் தடுக்க முடியும். குறிப்பாக இந்த காலிஃப்ளவர்ல மட்டுமே என்னென்ன ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றத பத்தி தெளிவா பார்க்கலாம்.
காலிபிளவர் நன்மைகள்
முதல்ல காளிபிளவர் அப்படின்னு பார்த்தீங்கன்னா வைட்டமின் சி ஊட்டச்சத்தை அதிகமா இருக்கக்கூடிய முக்கியமான ஒரு காய்கறி. பொதுவா வைட்டமின் சி அப்படினாலே நிறைய பேருக்கு மைண்ட்ல வரக்கூடிய ஒரு விஷயம் என்னன்னா புளிப்பா இருக்கக்கூடிய உணவுகள் அதாவது ஆரஞ்சு பழம், சாத்துக்குடி அப்படி இல்லன்னா எலுமிச்சம் பழம் தான் வைட்டமின் சி அதிகமா இருக்குன்னு நினைப்பிங்கல்லையா.
ஆனா காலிஃப்ளவரிலும் பார்த்தீங்கன்னா ஒரு நாளுக்கு தேவையான 58% வைட்டமின் சி ஊட்டச்சத்து ஒரு கப் மூலமாவே இந்த காலிஃப்ளவர்ல நமக்கு கிடைக்கும். ஒரு கப் அளவு மதிய உணவுல நீங்க சேர்த்தீங்க அப்படின்னாலே கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு தேவையான பாதியை விட அதிகமாவே வைட்டமின் சி ஊட்டச்சத்து உங்க உடலுக்கு போய் சேர்ந்துடும். வைட்டமின் சி அப்படின்றது நம்ம உடம்புல நோய் எதிர்ப்பு தன்மையை நல்லா அதிகமாக கூடிய முக்கியமான ஒரு ஊட்டச்சத்து.
உடல் பருமனா இருந்து உடல் எடையை கம்மி பண்றதுக்கு நீங்க ஏதாவது டயட் ஃபாலோ பண்றீங்க அப்படின்னா கண்டிப்பா இந்த காலிஃப்ளவரையும் அன்றாட உணவுல கட்டாயம் சேர்த்துட்டே வாங்க. ஏன்னு கேட்டா நார் சத்து அதிகமுள்ள ஒரு உணவு. பொதுவா நார்ச்சத்து அப்படிங்கறது செரிமானத்தை சீராவைக்கும். செரிமானம் சீரா இருந்தாலும் உடல் எடை சீக்கிரமே ஆரோக்கியமான முறையில் கம்மி பண்ண முடியும்.
நீர் சத்து அதிகம் உள்ள முக்கியமான ஒருகாய் இது. நீர் சத்து அப்படின்னாலே நிறைய பேர் வந்து என்னன்னு சொல்லுவோம். இப்ப தர்பூசணி பழம். முலாம்பழம் இதில் எல்லாம் நீர் சத்து அதிகமா இருக்கு பார்த்தாலே தெரியும் இல்லையா.
காலிஃப்ளவர்ளையும் பார்த்தீங்கன்னா கிட்டத்தட்ட 92 சதவீதம் நீர் சத்துதான் இந்த காயில் அடங்கியிருக்கும். இப்ப நார் சத்து எப்படி நம்ம உடல் எடையை கம்மி பண்றதுக்கு கண்டிப்பா நம்ம எடுக்கணுமோ, அதே மாதிரி நீர் சத்து அதிகமா இருக்கக்கூடிய உணவுகளை உடல் பருமனா இருக்குறவங்க கண்டிப்பா ன்றாட உணவுல கட்டாயம் சேர்க்கணும். இந்த நீர் சத்து 92 சதவீதம் நீர் சத்து அதிகமாக இருக்கக்கூடிய காலிபிளவரும் பாத்தீங்கன்னா உடல் எடையை சீக்கிரமே கம்மி பண்றதுக்கு ரொம்பவே உதவியா இருக்கும்.
நார் சத்து, நீர் சத்து மட்டும் கிடையாது புரத ஊட்டசத்து இன்னும் நம்ம உடலுக்கு தேவையான அத்தனை ஊட்டசத்துக்களும் இதில் அதிக அளவில் இருக்கு.
நம்ம உடம்பில் இருக்கக் கூடிய கெட்ட கொழுப்போட அளவை கம்மி பண்ணும். கெட்ட கழிவுகள் எல்லாத்தையும் வெளியேற்றம் செய்து பசி உணர்வையும் கட்டுப்பாட்டில் வைக்கும். அதனால பாத்தீங்கன்னா தேவையில்லாம அடிக்கடி சாப்பிடணும் அப்படின்ற ஜங்க் ஃபுட் எல்லாம் சாப்பிட அந்த ஒரு உணர்வையும் இது கம்மி பண்ணிடும்.
உடல் பருவனா இருக்குறவங்க காலிபிளவர் சூப் மாதிரி எடுத்துக்கலாம். அப்படி இல்லன்னா காலிபிளவர் கூட்டு மாதிரி, இல்ல குழம்புல சேர்க்கலாம், இல்ல பொரியல் மாதிரி ஏதோ ஒரு வகையில் காளிபிளவரையும் அன்றாட உணவுல சேர்த்துட்டே வரும்போது உங்க உடம்பில் இருக்கக்கூடிய கழிவுகளையும் வெளியேற்றம் செய்யும். உடல் பருமனா இருக்குறவங்களுக்கு உடல் எடையை எப்பவுமே பராமரிப்பதற்கு ரொம்பவே உதவியா இருக்கும்.
நார் சத்து அதிகமா இருக்குன்னு சொன்னேன் இல்லையா இந்த நார் சத்து பார்த்தீங்கன்னா பொதுவாவே செரிமானத்தை சீரா வைத்து செரிமானம் சம்பந்தப்பட்ட அஜீரண பிரச்சனையை ஏற்படக்கூடிய வாய்ப்பு கம்மி பண்றது மட்டும் கிடையாது, மல சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கும். கான்ஸ்டிபேஷன் வராம பாத்துக்கறதுல காலிபிளவர் அப்படின்றது ரொம்ப முக்கியமான ஒரு காய்கறி.
தொடர்ச்சியான மன்றாடு உணவுல இந்த காலிபிளவர் சேர்த்துட்டே வருவதால் புற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்பா ரொம்பவே கம்மி பண்ணும். பொதுவா ஆண்ட்டி ஆக்சிடென்ட் சத்து அதிகமா இருக்கக்கூடிய உணவுகள் நம்ம எடுக்கும்போது புற்றுநோய் செல்லோட வளர்ச்சி தூண்டக்கூடிய ப்ரீ ரேடிகல்ஸ் எல்லாம் அந்த உணவு எதிர்த்து போராடும். இதனால் பார்த்தீங்கன்னா புற்றுநோய் செல்லை வளராமல் தடுத்து ஆரோக்கியமாக வாழ்றதுக்கு ரொம்பவே உதவியா இருக்கும்.
கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Benefits in Tamil | Puthiyathagaval