இந்த நிலையை அடந்தவர்கள் நினைத்ததை எல்லாம் பெறமுடியும் amazing info jeeva samadhi meaning in tamil

ஜீவன் ஆதி நிலையை அடைவதே ஜீவசமாதி நிலையாகும். ஆவிகள் என்னவாக இருந்தோம் ஆத்மாவாக எல்லோரும் அறிந்தது தான் ஆத்மா அழிவற்றது. மரணம் வேறு மகா சமாதி நிலை வேறு. எல்லோருக்கும் ஏற்படுவது மரணம்.

ஜீவசமாதி நிலையை எல்லோரும் அடைய முடியாது. யார் ஒருவரால் உடலையும் மனதையும் தான் என்ன படி ஆட்டுவிக்கும் அட்டமாசத்து என்ற வித்தையை செயல்படுத்த வல்லவரோ, தவத்தால் ஞான நிலையை தான் ஆத்மாவிற்கு ஏற்படுத்தினாரோ அவரை சித்தர் அவரை ஞானி.

லட்சக்கணக்கான சிந்தனைகளை மருத்துவ குறிப்புகளை அள்ளித் தந்த சித்தர்களும், ஞானிகளும் வாழ்ந்த நாடு இது. இன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சித்தர்கள் என்றும், வேடன் போடும் கார்ப்பரேட் சாமியார்களையும் நம்புவது மக்களின் அறியாமை. சரி வாருங்கள் ஜீவசமாதிக்கு எங்கிருந்து வருகிறது இப்படி அமானுஷ்யமான சக்திகள் என்று பார்ப்போம்.

சாதாரணமாக மரணம் அடையாமல் தன் ஆத்மா சமாதி நிலையை அடையப் போவதை நேரம், காலத்தை முன்னரே கூறிவிட்டு துல்லியமாக அதே நேரத்தில் அதே போல் சமாதி நிலையை தியானத்தில் இருந்தவரே மக்கள் முன்னிலையில் அல்லது சீடர்கள் முன்னிலையில் ஆவது நடப்பது மட்டுமே மகா சமாதி நிலை.

பல வருடங்களாக தவநிலையை பின்பற்றும்போது எளிதில் இந்த பிரபஞ்ச ஆற்றலோடு அவர்களின் உடல் இணையும். அப்படி பிரபஞ்ச ஆற்றலை உள்வாங்கி மகா சக்தியாக உடல் மாறிவிடும். அதனால்தான் சாதாரணமான உடலை போல ஜீவசமாதி அடைந்தவர்களின் உடல் அழுகிப்போகாது.

தவநிலையில் மகா சமாதி நிலையை அடைந்த ஒருவரின் உடல் பிரபஞ்ச சக்தியோடு தொடர்பிலேயே இருக்கும். அது அந்த சுற்று வட்டாரம் வரை பரவி வெளியாகிக் கொண்டே இருக்கும். அந்த உடல் அங்கே இருக்கும் பொழுது அந்த பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்பிலேயே இருக்கும்.

நீங்கள் அந்த இடத்திற்கு சென்று நின்றாலே உங்கள் உடலில் அந்த ஆற்றலை நிலையை உணர முடியும். சித்தர்கள் ஜீவ சமாதி, தர்கா போன்ற இடங்களில் இந்த பிரபஞ்ச ஆற்றலை உணர முடியும்.

இந்த ஜீவசமாதி வழிபாடு பரவலாக எல்லா மதங்களிலும் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. எல்லா மத ஜீவ சமாதிகளுக்கும் அதே சக்தி உண்டு என்பதை மறுக்க முடியாது.

தவத்தில் உச்சநிலையை அடைய முடியாத சாதாரணமான மக்கள் கூட இந்த ஆற்றலை உணர முடியும். அப்படித்தான் இந்த ஜீவசமாதி வழிபாடு உருவானது. அந்த பிரபஞ்ச ஆற்றலோடு நாம் இருக்கையில் நம் உடலும் பிரபஞ்சத்தோடு இணைகிறது மனம் தெளிவாகிறது நினைப்பது பிரபஞ்சத்தில் கலக்கிறது. எனவே நினைத்த காரியம் எளிதில் கைகூடுகிறது.

தொடர்ந்து ஜீவசமாதி பிரபஞ்ச ஆற்றலோடு இணைப்பில் இருப்பதால் அதன் ஆற்றல் அதிகரித்துக் கொண்டே இருக்கும். நீங்கள் நல்ல எண்ணங்களோடு சக மனிதர்களை நேசித்து பரிசுத்தமான மனிதராக மாறினாள், உங்கள் ஆத்மாவும் நல்ல நிலையை அடையும். நினைத்ததை பெற முடியும்.

வஞ்சகம், சூழ்ச்சி பொறாமை அடுத்தவர்களை கெடுக்கும் எண்ணம் ஏமாற்றுவது லஞ்சம் வாங்குவது இப்படி செய்துவிட்டு எத்தனை வழிபாடுகள் செய்தாலும் கர்மா அதன் வேலையைச் செய்யும் ஜீவசமாதியை வழிபடும் போது அதன் அருகில் அமர்ந்து தவம் செய்யும் போது அந்த பிரபஞ்ச ஆற்றலை நீங்கள் எளிதில் பெறலாம். அவர்களோடு அந்த பிரபஞ்ச ஆற்றல் தொடர்பில் இருப்பதே ஜீவ சமாதியில் பல அற்புதங்களுக்கு காரணமாக அமைகிறது. எண்ணங்களால் உயருங்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்வுடன் வாழுங்கள் பிரபஞ்ச சக்திக்கு நன்றி.