எல்லாருக்குமே பிரியாணி ரொம்ப பிடிக்கும், இன்னைக்கு குக்கர்ல வெஜிடபுள் பிரியாணி எப்படி பண்றதுன்னு பார்க்கலாம்.
ஃபர்ஸ்ட் ஒரு குக்கர்ல ரெண்டு டேபிள் ஸ்பூன் நெய் எடுத்துக்கோங்க. நெய் சூடானதும் அதில் இரண்டு பிரியாணி இலை, ஒரு பட்டை, நாலு கிராம்பு, அப்புறமா நாலு ஏலக்காய் எடுத்துக்கோங்க. சேர்த்ததுக்கு அப்புறமா ஒரு பெரிய வெங்காயம் சேர்த்துக்கோங்க. தேவையான அளவு உப்பு சேர்த்து இந்த வெங்காயம் கொஞ்சம் பொன்னிறமாக வதக்கிக்கோங்க.
இப்ப இதுல மூணு பச்சை மிளகாய் சேர்த்துக்கோங்க. ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக்கோங்க. சேர்த்துட்டு அதோட பச்சை வாசனை போற வரைக்கும் அதை வதக்கிக்கோங்க.
இப்ப நம்ம மசாலா எல்லாம் சேர்த்தரல்லாம்.அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலா பவுட,ர் அப்புறம் ரெண்டு டீஸ்பூன் மல்லித்தூள், அப்புறமா ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு மிளகாய் தூள் சேர்த்துக்கோங்க.
இப்ப இது எல்லாத்தையும் நல்லா மிக்ஸ் பண்ணிக்கோங்க. இப்ப நம்ம தக்காளி சேர்த்துரலாம் ஒரு தக்காளி சேர்த்துக்கோங்க. சேர்த்துட்டு இது ஒரு ரெண்டு நிமிஷம் நல்லா வேக வச்சிருங்க இப்பதான் நல்லா மிக்ஸ் ஆயிடுச்சு.
இப்ப இதுல ரெண்டு கேரட் சேர்த்துக்கோங்க (கட் பண்ணியது). அப்புறம் இதுல ஒரு 10 12 பீன்ஸ் சேர்த்துக்கோங்க (கட் பண்ணியது). அப்புறம் ஒரு கால் காலிபிளவர் சேர்த்துக்கோங்க. ஒரு உருளைக்கிழங்கு (மீடியம் சைஸ் கட் பண்ணியது) சேர்த்துக்கோங்க. அப்புறம் இதுல கால் கப் ஃப்ரெஷ் பட்டாணி சேர்த்துக்கோங்க. சேர்த்துட்டு இதெல்லாம் ஒரு ரெண்டு நிமிஷம் நல்லா வேக வச்சிருங்க..
இப்போ இதுல ஒரு அரை கப் தயிர் சேர்த்துக்கோங்க. உங்களுக்கு தயிர் பிடிக்காதுன்னா நீங்க ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக்கோங்க. இப்ப இதுல நம்ம தண்ணி சேத்துரலாம். ரெண்டு கப் பாஸ்மதி அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்துக்கோங்க. இப்ப இதுல கொஞ்சம் கொத்தமல்லி இலையும், கொஞ்சம் புதினா இலையும் சேர்த்துக்கோங்க.
இப்ப நம்ம பாஸ்மதி அரிசியை சேர்த்தரலாம். ரெண்டு கப் பாஸ்மதி அரிசியை ஒரு மணி நேரம் தண்ணில ஊறவெச்சு எடுத்துக்கோங்க.இப்ப நாம சேர்த்துரலாம். கடைசியா இதுல உப்பு இருக்கான்னு செக் பண்ணி பார்த்துக்கோங்க. பிரியாணி பண்ணதுக்கு அப்புறமா நாம உப்பு சேர்க்க முடியாது.
குக்கரை மூடிட்டு ஒரு ஒரு விசிலுக்கு விட்டுருங்க. பாஸ்மதி அரிசி சீக்கிரமா வெந்துரும். அதனால இதுல ஆவி வந்ததுக்கு அப்புறமா இந்த விசிலை சேர்த்துட்டு ஒரு ஒரு விசிலுக்கு விட்டுருங்க.
அதுக்கப்புறமா அடுப்பை ஆஃப் பண்ணிட்டு ஒரு 15 நிமிஷத்துக்கு அதை ஓபன் பண்ணாம அது அப்படியே இருக்கட்டும் அந்த ஹீட்லயே. இப்போ ஒரு விசில் வந்து அதுக்கப்புறம் 15 நிமிஷ அப்புறம் ஓபன் பண்ணி பார்க்கவும். வெஜிடபிள் பிரியாணி நல்லா ரெடி ஆயிடுச்சு நல்ல வாசனையா ரொம்ப நல்லா டேஸ்டா இருக்கு கண்டிப்பா இந்த ரெசிபி வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.
Chicken Kulambu Seivathu Eppadi | Very simple & Tasty