முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிடலாம் | Foods for Long and Thick Hair in Tamil | Puthiyathagaval

முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிடலாம் என்னென்ன சத்துக்கள் வேணும் அந்த சத்துக்கள் எல்லாம் அதிகமா இருக்கக்கூடிய பத்து உணவு பொருட்கள் பத்தி பாக்க போறோம்.

தலைமுடி வளர்ச்சிக்கு புரதசத்து வந்து ரொம்ப ரொம்ப அவசியமானது. அது கூட இரும்பு சத்து, துத்தநாகம், செலினியம், பயோடின், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ வைட்டமின் இ  இது மாதிரி தாதுஉப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் வந்து தேவையானது.

மற்ற வைட்டமின்களும் வந்து தலைமுடியோட வளர்ச்சிக்கு அவசியமா இருந்தாலும்  ஏற்கனவே சொன்னது தான் வந்து ரொம்ப ரொம்ப முக்கியமானது.

இந்த ஊட்டச்சத்துக்கள் எல்லாம் இருக்கக்கூடிய உணவுகள் வந்து நாம ரெண்டா வந்து பிரிக்கலாம். ஓன்று அசைவ உணவுகள் இரண்டாவது சைவ உணவுகள்.

முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிடலாம்

முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிடலாம் | Mudi Valara Food Tips in Tamil 

அசைவ உணவுகளை பாத்தீங்க அப்படின்னா பெஸ்ட் வந்து முட்டை. ஏன்னா முட்டைல பாத்தீங்கன்னா புரத சத்து இருக்கு. செலினியம், பயோடின் எல்லாமே இருக்கு. 

பொதுவா நீங்க வந்து எந்த உணவு பொருள் சாப்பிட்டாலும் அதுல இருக்குற புரத சத்துல ஒரு பகுதிதான் வந்து உங்க உடம்பில் ஒட்டும். ஆனா முட்டையை பொறுத்தவரைக்கும் அதுல இருக்குற பொருள் சத்து முழுசா வந்து நம்ம உடம்புல ஓட்டும். அதாவது ஒரு முட்டை சாப்பிடும் போது நமக்கு வந்து ஆறு கிராம் புரோட்டீன் கிடைக்கும். 

ஆனா இந்த மீன், சிக்கன், மட்டன் மாதிரியான அசைவ உணவுகளை பாத்தீங்கன்னா 80% தான் வந்து புரத சத்து வந்து ஒட்டும். இதே வந்து நீங்க பயர் வகைகள், தானியங்கள் எல்லாம் எடுத்துட்டீங்கன்னா 50 லிருந்து 70% தான் நம்ம உடம்புல ஒட்டும். தலைமுடி வந்து நல்லா வளரணும் அப்படின்னா டெய்லி ஒன்னு இல்ல ரெண்டு முட்டை வந்து சாப்பிடுங்க. 

அடுத்ததா அந்த மத்தி மாதிரியான மீன் வகைகள் வந்து ரெகுலரா எடுத்துக்கோங்க. அதுல பாத்தீங்கன்னா புரதசத்தோட ஒமேகா 3, கொழுப்பு அமிலங்கள் வந்து நிறைய இருக்கு.

அதுக்கப்புறம் மட்டன் ஆடு, கோழியோட ஈரல், கல்லீரல், மண்ணீரல் இதெல்லாம் வந்து நிறைய சாப்பிடலாம். இதெல்லாம் பார்த்தீங்கன்னா இரும்பு சத்து நிறைய கிடைக்கும். இரும்பு சத்து வந்து நம்ம தலை முடியோட ஹேர் பாலிக்கல் வந்து நல்ல டெவலப் ஆக்குறது ஹெல்ப் பண்ணும்.

அடுத்ததா சைவ உணவுகளுக்கு வந்தோம் அப்படின்னா நீங்க வந்து டெய்லி சாப்பிட வேண்டியது ஒரு கப் கீரை. கீரை பொறுத்தவரைக்கும் அகத்திக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை நீங்க எந்த வகையான கீரை சாப்பிடலாம்.

ஆனா டெய்லி வந்து ஒரு கப் அளவுக்கு கீரை சாப்பிடுங்க. கீரையில் பார்த்தீங்கன்னா நம்ம தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான இரும்பு சத்து இருக்கு. அது கூட வைட்டமின் ஏ, வைட்டமின் சி, போலிக் அமிலம் சொல்லிட்டு நிறைய சத்துக்கள் வந்து இருக்கு.

அதுலயும் நம்ம டெய்லியும் சாப்பிடுற அந்த கருவேப்பிலை கூட ஒரு வகையான கீரை வகைகளை சேர்ந்ததுதான். அதை கூட நீங்க வந்து கருவேப்பிலை குழம்பு எல்லாம் வந்து கருவேப்பிலை பொடியா அரைச்சு வச்சு கூட நீங்க வந்து ரெகுலரா உணவில் சாப்பிட்டு வந்தீங்கன்னா தலைமுடி வந்து நல்லாவே வளரும்.

 

நெய் இல்லாமல் கேசரி செய்வது எப்படி | Rava Kesari Without Ghee Tamil | Puthiyathagaval

Scroll to Top