நெய் இல்லாமல் கேசரி செய்வது எப்படி | Rava Kesari Without Ghee Tamil | Puthiyathagaval

நெய் இல்லாமல் கேசரி செய்வது எப்படி | Rava Kesari Recipe in Tamil

இந்த பதிவில்  நெய் இல்லாமல் கேசரி செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது செய்றதுக்கு ஒரு கப் ரவை (200 கிராம்) எடுத்துக்கொங்க.இப்போ ஒரு கடாய் வச்சிட்டு இதுல ரெண்டு டேபிள் ஸ்பூன் சன்பிளவர் ஆயில் விட்டுக்கோங்க. நெய்க்கு பதிலா  சன் பிளவர் ஆயில் சேர்க்க போறோம்.

நெய் இல்லாமல் கேசரி செய்வது எப்படி

இப்ப இது கூட கொஞ்சம் முந்திரி பருப்பு, கொஞ்சம் கிஸ்மிஸ் பழமும் போட்டு நல்லா வறுத்து எடுத்துக்கோங்க.

நல்லா வருத்தத்துக்கு அப்புறமா இது வந்து ஒரு வேற ஒரு பிளேட்டுக்கு மாற்றி வெச்சுக்கோங்க. இப்ப அதே எண்ணெயில் அந்த 200 கிராம் ரவையை வந்து சேர்த்து நல்லா வறுத்து எடுத்துக்கோங்க.

நல்லா கோல்டன் பிரவுனா லைட்டா ஆனதுக்கு அப்புறமா இது வந்து ஒரு பிளேட்டுக்கு மாற்றி வைத்து நன்றாக ஆற  விட்டுவிடுங்கள்.

இப்ப அதே கடாயில் மூன்று கப் அளவுக்கு தண்ணி விட்டுக்கோங்க. எந்த கப்பால ரவை எடுத்தோமோ அதே கப்பலை மூணு கப் தண்ணி எடுத்துக்கோங்க.

இப்ப இது நல்லா கொதிக்க ஆரம்பித்ததும், இதுல வந்து நம்ம வறுத்து வைத்திருந்த ரவையை உள்ள சேர்த்து எல்லாம்.

இது நல்லா கட்டியாக ஆரம்பிக்கும் அப்ப அது வரைக்கும் நல்லா கிண்டிக்கிட்டே இருங்க. கட்டி விழாத மாதிரி. இப்ப இதுல கொஞ்சமா கலர் பொடியை சேர்த்துக்கோங்க. உங்களுக்கு விருப்பமான கலர்ல நீங்க சேர்த்துக்கலாம்.

இப்ப இதுல வந்து நம்ம 200 கிராம் சர்க்கரை சேர்க்கணும். நம்ம வந்து ஒரு கப் ரவை எடுத்திருந்தோம், அதே மாதிரி இது ஒரு கப் சர்க்கரை. 

கொஞ்சமா சர்க்கரை எடுத்து அத வந்து நாலு பெரிய சைஸ் ஏலக்காயை போட்டு நல்ல பவுடர் பண்ணி அதையும் உள்ள சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுக்கோங்க. நீங்க ஏலக்காய் தூள் சேர்த்துக்கலாம்.

சன் பிளவர் ஆயில் வந்து கொஞ்சம் கொஞ்சமா விட்டு நல்ல மிக்ஸ் பண்ணி எடுத்துக்கோங்க. இப்ப இது கூட வந்து நம்ம எண்ணெயில் வறுத்து வைத்திருந்த முந்திரி பருப்பையும், கிஸ் மிஸ்ஸையும் சேர்த்துக்கலாம்.

அப்புறம் கொஞ்சம் டூட்டி ஃபுருட்டி சேர்த்து இருக்கேன். இது வந்து ஆப்ஷனல் தான். நீங்க சேர்க்கலாம் இல்லனா வேண்டாம். நல்லா மிக்ஸ் பண்ணி விட்டுக்கோங்க.

இப்ப இத வந்து ஒரு பிளேட்லமெதுவா திருப்பி போட்டுட்டு ஒரு நிமிஷத்துக்கு கழிச்சு எடுத்து என்ன அழகா வந்துடும். இதுக்கு மேல ஒரு முந்திரிப்பருப்பு வச்சு நீங்க செர்வ் பண்ணீங்கன்னா ரொம்பவே சூப்பரா இருக்கும்.

                                             இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் என்ன பலன் | Iluppai Oil Benefits | Puthiyathagaval

Scroll to Top