காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு | Karl Marx History in Tamil
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு – ஒரு நல்ல இலக்கை அடைய தொடர்ந்து பாடுபடும் மனிதனின் செயல்பாடு பிற்காலத்தில் அனைவரும் படிக்க வேண்டிய வரலாறாக மாறும் என்று தன் வரலாற்றை முன்னறிவித்த தீர்க்கதரிசி (Karl Marx) கார்ல் மார்க்ஸ்.
மேலும் ஒருவன் தனக்காக தன் வாழ்க்கைக்காக உழைக்கும் போது மனிதன் ஆகிறான். இதுவே ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக வாழும் போது அவன் உண்மையான மனிதன் ஆகிறான் என்று என்றும் உண்மை பேச தயங்காத தலைசிறந்த சிந்தனையாளன்.
உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்த தீபத்தில் மற்றவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றுக்கொள்ளட்டும் என்று பொதுவுடமை கொள்கையை உலகமெங்கும் சென்றடைய செய்த மாபெரும் புரட்சியாளன் யார் இவர்? இவரைப் பற்றி நாம் ஏன் அறிந்து கொள்ள வேண்டும்? என்று உங்கள் என்ன ஓட்டத்தில் உதித்தார் இந்த பதிவின் மூலம் இவரின் வரலாற்றையும் இவர் விட்டுச் சென்ற தத்துவங்களையும் கற்றுத் தெளிவோம் வாருங்கள்.
நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து என்று மக்களுக்காகவும், இந்த ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் தன் இறுதி மூச்சுவரை போராடி மடிந்த வரலாறு போற்றும் முற்போக்கு சிந்தனையாளன் கால்மார்க்சை பற்றித்தான்பார்க்க போகிறோம்.
குறிப்பாக இவரின் தத்துவங்கள் நம் அன்றாட வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய உந்து சக்தியாக உள்ளது.
இவரின் கொள்கையை இன்றும் 100 கோடிக்கும் மேல் உள்ள மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு, கார்ல் மார்க்ஸ்சின் முழு பெயர் கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx). 1818 ஆம் ஆண்டு மே ஐந்தாம் தேதி ஜெர்மனியில் உள்ள புருசியாவில் ட்ரையர் என்னும் நகரில் பிறந்தவர்.
இவரின் தந்தை ஹென்ரிச் மார்க்ஸ். இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவருக்கு கார்ல் மார்க்ஸ் மூன்றாவது பிள்ளை.
அன்று அவர் அறியவில்லை தன் மகன் இவ்வுலகை தன் சிந்தனையால் மாற்றி அமைப்பான் என்று.
மேலும் 1830-ம் ஆண்டு பள்ளி படிப்பில் சேர்ந்த மார்ச் முற்போக்கு கருத்தின் தாக்கத்திற்கு உள்ளானார்.
ஆனால் படிப்பில் ஆர்வம் மிகுந்த இவர் ஜெர்மன், இலத்தீன், கிரேக்கம், பிரஞ்சு உள்ளிட்ட மொழிகளில் கற்றுத் தெரிந்தவர்.
இது மட்டும் இன்றி கணிதம், வரலாறு, இயற்பியல், மதவியல் உள்ளிட்ட துறைகளிலும் புலமை மிகுந்தவர் மார்க்ஸ்.
மக்களுக்காக வாழ வேண்டும் என்ற எண்ணம் தன் பள்ளி பருவம் முதலில் மேலோங்கி இருந்தது.
நாம் வீணடிக்கும் ஒவ்வொரு நொடியும் நம் வாழ்வில் திரும்பப் பெற முடியாத அதிர்ஷ்டம் என்று மார்க்ஸ் சொன்னது மட்டுமல்லாமல், அதற்கேற்ப செயல்பட்டார்.
விதைத்தவன் உறங்கலாம் ஆனால் விதைகள் என்றும் உறங்குவதில்லை என்று தன் உறக்கத்திலும் உழைக்கும் பாட்டாளி வர்க்கத்திற்காக சிந்தனைகளை செலவிட்டு வந்தவர் மார்க்ஸ்.
அவர் விதைத்த விதைகள் தான் இன்றும் இந்த உலகையே இயக்கிக் கொண்டு வருகிறது. தன் சிறு வயது முதலை புரட்சிகர சிந்தனையில் இருந்த கார்ல் மார்க்ஸ் 17 ஆம் வயதில் பால் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார்.
அப்போதே பொதுவுடமை கொள்கை கொண்ட மார்க்ஸ் சோசியலிசம் துண்டறிக்கை வெளியிட்டதை கண்டித்து பல்கலைக்கழகம் அவரை வெளியேற்றியது.
அதைத் தொடர்ந்து 1841 ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை பெர்லின் பல்கலைக் கழகத்தில் முடித்தார்.
இலக்கிய ஆளுமை எழுத்தில் அதீத ஆர்வம் கொண்ட தனது சிறுவயது தோழியான ஜென்னியை பல தடைகளை கடந்து 1843 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் மார்க்ஸ்.
மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும், மறு உற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வின் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியும் என்று வெளிச்சம் இட்டு காட்டியதன் மூலம் வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார்.
இன்று பழமொழி படங்களில் பொதுவுடமை பற்றி பேசினாலும் கூட அதற்கெல்லாம் முன்னோடியாக திகழ்ந்தவர் கால் மார்க்ஸினும் அறிவியல் போற்றும் சிந்தனையாளன்.
எதிரி ஆயுதம் எந்தாத வரை விமர்சனம் என்பதை ஆயுதம், அவன் ஆயுதம் ஏந்தி விட்டால் ஆயுதம் என்பதை விமர்சனம் என்று எந்த விமர்சனத்திற்கும் அஞ்சாமல் தனது கருத்தை முதலில் முன்வைத்தவர் கார்ல் மார்க்ஸ்.
இவர் எழுதிய தத்துவத்தின் வறுமை, பொதுவுடமை அறிக்கை, மூலதனம் போன்ற புத்தகங்கள் இவ்வுலகில் பல மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது. எந்த ஒரு பிரச்சனையானாலும் அதன் வேரிலிருந்து துவங்குங்கள்.
அதுவே அதை தீர்ப்பதற்கான ஒரே வழி என்று இன்று நாம் பிரச்சனையிலிருந்து மீளவழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் அன்றே அதற்கான தீர்வை வித்திட்ட அவர் கால் மாக்ஸ்.
மாற்றங்களை ஏற்றுக்கொள்ள மன உறுதி வேண்டும் மாற்றம் என்பதை தவிர இவ்வுலகில் மாறாதது எதுவுமில்லை என்று மாற்றத்தை பற்றி அன்றே கணித்தவர்.
இப்படி மாற்றத்தை பற்றியும், மக்களின் ஏற்றத்தை பற்றியும் தன் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து அதற்கேற்றார் போல் செயல்பட்டு இறுதியாய் மார்ச் 14ஆம் தேதி 1883 ஆம் ஆண்டு கார்ல் மார்க்ஸ் (Karl Marx) லண்டனில் உயிர் துறந்தார்.
கால் மார்க்ஸிலும் தலை சிறந்த சிந்தனை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லையே என்று நீ ஏங்கும் ஒவ்வொரு தருணத்திலும், உன்னை நீ இழந்து கொண்டிருக்கின்றாய் என்று அவர் சொன்ன தத்துவத்தை உற்று நோக்கினால் நாம் அனைவரும் ஏதோ ஒரு தருணத்தில் தனித்துவிடப்படுகிறோம். அதனால் நாம் மன அளவில் பாதிப்பதோடு நமக்கே நம் மீது உள்ள நம்பிக்கை உடைக்கிறது.
ஆதலால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ அவர்கள் என்னை நிராகரிப்பார்களோ என்று எண்ணி நேரத்தை வீணடிக்காமல் உங்களுக்காக வாழுங்கள். முடிந்தவரை உங்களுக்காக நேரம் ஒதுக்க பாருங்கள்.
ஏனெனில் இந்த வாழ்க்கை ஒருமுறைதான் அவ்வாழ்க்கையை நமக்கு பிடித்தபடி வாழ்வதும், வரலாறாக மாற்றுவதும் பிறர்க்கையில் இல்லை. நம்மிடத்தில் உண்டு. கடினமாக உழைக்கும் ஒவ்வொரு உழைப்பாளர்களின் கையிலும் உண்டு.
முகப்பொலிவுக்கு என்ன செய்ய வேண்டும்| Face Glowing Home Remedies in Tamil | Puthiyathagaval