இன்னிக்கு இந்த பதிவில் கருப்பு கவுனி அரிசி பயன்கள் பற்றி பார்க்கலாம். இப்போ சமீப காலமாகாவே கருப்பு கவுனி அரிசியோட முக்கியத்துவம் நம்ம எல்லா மக்களையும் சேர்ந்து அடைந்சிடுச்சு.
இது எங்கெல்லாம் பயிரிடறாங்கன்னு பாத்தீங்கன்னா, இந்தியாவோட வடகிழக்கு பகுதிகளிலும் தெற்கு பகுதிகள் தான் பயிரிடறாங்க. வடகிழக்கு பகுதியில இதோட பெயர் என்ன என்று பார்த்தீங்கன்னா Chak Hao.
தெற்கு பகுதி அதாவது தமிழ்ல நம்ம என்னன்னு சொல்றோம் பார்த்தீங்கன்னா கவுனி அரிசின்னு சொல்றோம். சரிங்க இந்த கருப்பு கருப்பு கவுனி அரிசி பயன்கள் என்னென்னு பார்க்கலாம்.
கருப்பு கவுனி அரிசி பயன்கள் | Karuppu Kavuni Rice Benefits in Tamil
கருப்பு கவுனி அரிசில எல்லா அரிசியை விட ஆன்டி-ஆக்ஸிடன்ஸ் அதிக அளவில் இருக்கு. இது எப்படி வந்து வெளிப்படுது அப்படின்னு பாத்தீங்கன்னா இந்த கவுனி அரிசியோட கலர வச்சு தான் சொல்றாங்க. கவுனி அரிசியோட கலர் கறுப்பாவும், ஊதா நீலம் கலந்ததாகவும் இருப்பதால் அந்த கலரை வைத்து தான் வந்து இதுல ஆன்டிஆக்சன்ஸ் அதிகமா இருக்கு அப்படின்றத வந்து தெளிவாவே அது வந்து வெளிப்படுத்துது.
இந்த கருப்பரிசில வெளி அடுக்கல ஆந்தோசைனின் அப்படின்ற ஆன்டிஆக்சிஜன் பெரிய அளவுல வந்து காணப்படுகிறது. இந்த ஆந்தோசைனின் இதய நோய்களை தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், வீக்கத்தை குறிக்கவும் உதவுது.
கருப்பு கவுனி அரிசி நார்சத்துக்கு நல்ல மூலாதாராமா உள்ளது. இந்த நார்சத்து எது எக்கெல்லாம் உதவுது அப்படின்னு பார்த்தீங்கன்னா, குடல் அசைவுகளை சீராக்குவது, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மற்றும் வீக்கம் ஆகியவற்றை தடுக்கவும் உதவுகிறது.
இந்த நார்சத்து வேறு எதற்கெல்லாம் உதவுகிறது அப்படின்னு பார்த்தீங்கன்னா கழிவுகளை செரிமான மண்டலத்தில் பிணைக்கவும், செரிமான சுழற்சி முறைந்ததும் அதை வெளியேற்றும் இந்த பைபர் வந்து உதவுது. இப்ப இந்த பைபர் வந்து நம்ம நிறைய நொறுக்கு தீனிகள் மற்றும் அதிகமாக உண்பதை வந்து தடுக்கவும் வந்து இந்த பைபர் உதவுது.
ஏன் பார்த்தீங்கன்னா கருப்பரிசில பைபர் அதிகமா இருக்கும் போது அதெல்லாம் நீங்க சாப்பிட்டீங்கன்னா வயிறு நிரம்பி விட்டது என்ற ஒரு உணர்வை அது தருகிறது.
உடல் பருமன் அபாயத்தை தடுக்கிறது. நீங்க உடல் பருமனை எதிர்த்து போராடுகிறீர்கள் ஆனால் கருப்பரிசி உங்களுக்கு ஒரு சிறந்த வழி. இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இத சாப்பிட்ட உடனே உங்களுக்கு வயிறு முழுமையாக நிறைந்து விட்டது என்ற ஒரு உணர்வை இது குறிக்கிறது.
அது மட்டும் இல்லாமல் இந்த கருப்பரிசி நீரிழிவு மற்றும் உடல் பருவுடன் இணைக்கப்பட்டுள்ள இன்சுலின் எதிர்ப்பை தடுக்கவும் இது உதவுகிறது.
கருப்பு கவுனி அரிசி இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது. இயற்கை நச்சு நீங்குதல் பல நோய்களை தவிர்க்க உதவுகிறது. கருப்பு அரிசி என்பது பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் வளமான மூலமாகும். ப்ரீ ரேடிக்கல்ஸ் நீக்குவதற்கும் இது அதிகாபட்சமா உதவுது.
இதய ஆறோக்கியத்தை மேம்படுத்துகிறது. கருப்பு அரிசில அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு இருக்கிறது. இவை இரண்டும் இதை ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்கவை. பைபர் அதிக படியான கொழுப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.
ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | Ambur Chicken Biryani Recipe in Tamil | Puthiyathagaval