ஒருவரை வசியம் செய்வது எப்படி? இதை செய்தால் மாட்டும் போதும் எப்படி பட்டவரும் வீழ்ந்து விடுவார்கள்..!

ஒருவரை வசியம் செய்வது எப்படி | Vasiyam Seivathu Eppadi 

 நீங்கள் நேசிக்கும் ஒருவர் உங்களை புரிந்து கொள்ளவில்லையா, கணவன் மனைவி புரிதல் பிரச்சனையா, மாமியார் மருமகள் பிரச்சனையா அல்லது வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் உயர் அதிகாரியோடு கருத்து வேறுபாடா,

நீங்கள் வசியம் செய்யலாம் எதுவானாலும் கவலை வேண்டாம். நீங்கள் அவர்களை வசியம் செய்து உங்களைப் பற்றிய நல்ல எண்ணங்களை ஏற்படுத்த முடியும்.

சரியாக புரிந்து கொண்டால் கட்டாயம் உங்களாலும் வசியம் செய்ய முடியும். ஆழ்மனம் என்னும் பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்துவதன் மூலம் இது சாத்தியமே.

வாருங்கள் விரிவாக பார்ப்போம். நம் மனதிற்கு அவ்வளவு ஆற்றலா என்று சந்தேகம் எழக்கூடும்.

நீங்கள் யாருக்காவது போன் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது அவருடைய போன் கால் வந்திருப்பதை உணர்ந்திருப்பீர்கள்.

நண்பரிடமும் அல்லது காதலியிடமோ ஏதாவது பேச நினைத்ததை அவர்களே பேசி இருப்பார், மனைவி வாங்க வேண்டும் என்று நினைத்து கணவனிடம் கூறாததை கணவனே வாங்கி வந்திருப்பார்.

சில நேரங்களில் நாம் மனதில் முணுமுணுக்கும் பாடலை அருகில் யாராவது பாடுவார்கள், இதெல்லாம் எப்படி நடந்தது என்று நீங்கள் சிந்தித்தது உண்டா? மனமென்னும் என்ன அலைகளின் மூலம் தான் இவையெல்லாம் நடந்திருக்கிறது.

செல்போனில் ஒருவருடன் ஒருவர் பேசுவது மின்காந்த அலைகள். அதேபோல மனிதர்களின் எண்ண அலைகளுக்கும் சக்தி உண்டு.

மாமியாரை பற்றி மருமகளும், உயர் அதிகாரி பற்றி ஊழியரோ தவறாக எண்ணினால் அந்த அதிர்வலைகள் அவர்களின் மனதில் உங்களைப் பற்றி தவறான புரிதலை ஏற்படுத்தும். ஆகவேதான் சிறு கருத்து வேறுபாடு பெரிய பிரச்சினையாக மாறுகிறது.

நீங்கள் யாரை விமர்சிக்கிறீர்களோ தவறாக எண்ணுகிறீர்களோ அவர்களுடன் கருத்து வேறுபாடு வளர்ந்து கொண்டே தான் போகும்.

வைரத்தை வைரத்தால் அறுப்பது போல, இதே முறையை பயன்படுத்தி நம்மால் வசியம் செய்ய முடியும்.

நேரடியாக சமாதானம் பேசப்போனால் கூட விவாதமாக மாறலாம். வார்த்தைகள் வம்பில் முடியலாம்.

ஆனால் ஆழ்மனதிலிருந்து பேசுவதன் மூலம் எந்த ஒரு மனதிலும் மாற்றத்தை ,அன்பை, கனிவை ஏற்படுத்த முடியும்.

நண்பர் ஒருவர் வங்கியில் லோன் பெற நீண்ட நாட்களாக அலைந்தார். இந்த மனதோடு பேசும் முறையை பயன்படுத்தினார். லோன் கேட்க சென்றவர் மேனேஜர் லோன் இல்லை என்று கூறி அனுப்பிவிட்டார்.

திடீரென் ஒருநாள் தனது உதவியாளரை விட்டு அவரை கூட்டி வரச் சொன்னார். நான் லோன் தருகிறேன் உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று தோன்றியது என்று கூறி கொடுத்துள்ளார். இதுதான் மனதின் சக்தி.

இதே லோன் கேட்கச் செல்லும் மேனேஜரை கண்டபடி திட்டிக்கொண்டு, எதிர்மறையாக எண்ணிக் கொண்டு சென்றால் கொடுப்பவர் கூட கொடுக்க மாட்டார்கள்.

இதேபோல காதலியுடன் சண்டை போட்டு ஒருவர் பேச வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவரது எண்ணை அந்த பெண் பிளாக் செய்துவிட்டார்.

எப்படி பேசுவது என்று தெரியாமல் தவித்தார், இந்த மனதோடு பேசும் முறையை பயன்படுத்தி மீண்டும் காதலியோடு பேசிவிட்டார். காதலியுடன் சேர்ந்து விட்டார்.

நீங்களும் உங்களின் மன ஆற்றலை பயன்படுத்தி நீங்கள் நேசிப்பவரின் மனதில் உங்களைப் பற்றிய நல்ல புரிதலை ஏற்படுத்த முடியும்.

வசிய முறையை எவ்வாறு வசியம் செய்வது எப்படி?

இரவில் தூங்கும் மற்றும் காலை எழுந்தவுடன் யார் மனதில் உங்கள் அன்பை அல்லது உங்களைப் பற்றிய நல்ல எண்ணங்களை ஏற்படுத்த வேண்டுமோ அவர்களை நினைத்து உங்கள் கண்களை மூடி அன்புடன் மனதிற்கு கூறுங்கள்.

நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் நீங்கள் என்னை புரிந்து கொண்டமைக்கு நன்றி.

என்னுடன் எப்போதும் அன்புடன் பழகும் உங்களுக்கு நன்றி, என்று மனதிற்கு சொல்லிக் கொண்டே அவர்களுடன் நீங்கள் மகிழ்வுடன் இருப்பது போல நினைத்துக் கொண்டு பேச வேண்டும். என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே அவர்களும் நீங்களும் மகிழ்வுடன் இருப்பது போல நினைத்துக் கொண்டு பேச வேண்டும்.

இப்படி உங்களுடைய ஆழ்மன ஆற்றலை பயன்படுத்தி மனதோடு மனதினை தொடர்பு கொள்வதன் மூலமும் ஒருவரை பற்றி நேர்மறையாகவும், அவரின் மீது அன்போடு நீங்கள் என்னை புரிந்து கொள்கிறீர்கள்.

என்னுடைய அன்பு உங்களுக்கு புரியும் என்ற நேர்மறையான எண்ணங்களோடு அவரை சிந்தித்துக்கொண்டு இந்த முறையை கட்டாயம் நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றங்கள் விரைவில் உங்கள் எண்ணம்போல் நடைபெறும், நல்லதையே எண்ணங்கள் நல்லதே நடக்கும் மகிழ்வுடன் வாழ்க.

உள்ளுணவு என்றால் என்ன? தமிழில் முழு விளக்கம்