ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | Ambur Chicken Biryani Recipe in Tamil | Puthiyathagaval

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி இதற்கு துக்கு இந்த மூணு மட்டும் கரெக்டா சேருங்க போதும் அது வேற லெவல்ல இருக்கும். அது எல்லாமே என்னன்னு பார்க்கலாம்.

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | Ambur Chicken Biryani Recipe in Tamil

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி | Ambur Chicken Biryani Seivathu Eppadi 

ஆம்பூர் சிக்கன் பிரியாணி செய்வது எப்படி? முதல்ல மிளகாய் பேஸ்ட் ரெடி பண்ணிக்கலாம். இதுக்கு சுடுதண்ணில ஒரு மணி நேரம் வரமிளகாய் ஊற வச்சிக்கோங்க .அது ஜார்ல சேர்த்துட்டு இதுகூட கொஞ்சமா தண்ணி சேர்த்து நல்லா நைஸா அரைச்சு எடுத்துக்கோங்க. இது ரொம்ப ரொம்ப முக்கியம். 

இது மிளகாய் பொடி எல்லாம் சேர்க்க மாட்டோம். மிளகாய் பேஸ்ட் மட்டும் தான் உங்க காரத்துக்கு ஏத்த அளவுக்கு மிளகாய் வச்சிட்டு அரைச்சு எடுத்துக்கோங்க. அப்படி எக்ஸ்ட்ரா மீந்தாலுமே சரியா அதை பிரிட்ஜ்ல ஸ்டோர் பண்ணி வச்சுட்டு நீங்க வேற எதுக்கு வேணாலும் யூஸ் பண்ணிக்கலாம்.

இப்போ குக்கரில் எண்ணெய் சேர்த்துக்கலாம்.  எண்ணெய் சூடு ஆகட்டும் இது கூடவே ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்துக்கலாம். இதுல பட்ட கிராம்பு, ஏலக்காய் மட்டும் தான் சேர்க்க போறோம். எப்பயும் சேக்குற பிரியாணி விட கொஞ்சம் ஜாஸ்தி சேர்த்துக்கோங்க. இதுல ஏன்னா இதுல கரம் மசாலா கிடையாது. இப்போ ஒரு டேபிள்ஸ்பூன் பூண்டு பேஸ்ட் மட்டும் சேர்த்து நல்லா வதக்கிக்கணும். கொஞ்சம் கூட இந்த பூண்டு இருக்கிறது தெரிய கூடாது அந்த அளவுக்கு வதக்கிட்டு இதுல நல்ல ஸ்லைஸ்சா கட் பண்ண வெங்காயம் (ரெண்டு பெரிய சைஸ் வெங்காயம்) சேர்த்துக்கலாம் 

நல்லா வதங்கினதும் அதே அளவுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் இஞ்சி பேஸ்ட் சேர்த்துக்கோங்க. இந்த பிரியாணிக்கு இஞ்சி ஃபிளேவர் நல்லா தெரியணும். மீடியம் ஃப்ளேம்ல வச்சுட்டு செய்யுங்க. இப்போ இதுல ஒரு ரெண்டு தக்காளிசேர்த்துக்கலாம்.. ஒரு கைப்பிடி ஃபுல்லா புதினா சேர்த்துக்கலாம். அதே அளவுக்கு கொத்தமல்லி நல்லா பொடியா கட் பண்ணி சேர்த்துக்கோங்க.

இப்ப ஏதாவது சேர்த்து நல்லா வதக்கிக்கலாம் தக்காளி வதங்கட்டும். எல்லாமே நம்ம செய்ற பிரியாணி போடுற மாதிரி தானே இருக்கு அப்புறம் என்ன டிஃபரென்ஸ்னு யோசிக்க வேண்டாம்.

தனித்தனியா அந்த இஞ்சி பூண்டு வதக்கறதா ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். இப்ப இதுல நம்ம மிளகா பேஸ்ட் சேர்த்துக்கலாம். காரத்துக்கு ஏத்த அளவுக்கு (1 1/2 டேபிள் ஸ்பூன்) சேர்த்துக்கோங்க. இதெல்லாம் வதக்கிட்டு இதுல ஒரு டேபிள் ஸ்பூன் இல்லை 1 1/2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்துக்கலாம்.

ஒரு பாதி லெமனோட ஜூஸ் எடுத்துக்கலாம் அவ்ளோ தாங்க மசாலா வேற எதுவுமே கிடையாது. பிரியாணி மசாலா, மஞ்சள் பொடி, கரம் மசாலா அது இதுன்னு எதுவுமே தேவையில்லை.

தயிர், லெமன் சேத்து லைட்டா மிக்ஸ் பண்ணிட்டு 1 கேஜி சிக்கன் கிளீன் பண்ணி வச்சிகோங்க. அதை இது கூட சேர்த்து மசாலா கூட நல்லா மிக்ஸ் பண்ணி எடுத்துக்கோங்க. இது கூடவே நான் ஒரு கப்பு ஃபுல்லா தண்ணி சேர்த்துகோங்க.

சிக்கன் வந்து மூடி வச்சிருங்க வேகட்டும் விசில் விட வேண்டாம். கரெக்டா 15 மினிட்ஸ் போதும். உப்பு செக் பண்ணிட்டு எக்ஸ்ட்ரா தேவைப்பட்டால் கொஞ்சம் ஆட் பண்ணிட்டு நல்லா மிக்ஸ் பண்ணி மூடி வச்சிருங்க.

சிக்கன் வேகற டைம்ல ஒரு பாத்திரத்தில் தண்ணி வச்சிட்டு மூடி வைத்துவிடலாம் நல்லா கொதிக்கட்டும். அந்த கொதிக்கிற டைம்ல கொஞ்சமா உப்பு சேர்த்துட்டு அரை மணி நேரம் ஊற வச்சிருக்க சீராக சம்பா ரைஸ் அத சேத்துக்கலாம்.

இந்த பிரியாணிக்கு பாஸ்மதி ரைஸ் தான் நல்லா இருக்காது. சீரக சம்பா சீத்தா மட்டும்தான் சூப்பரா இருக்கும். அப்பதான் அந்த ஒரிஜினல் டேஸ்ட் உங்களுக்கு தெரியும் சோ ஒரு தடவை இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க. ரைஸ் போட்டுட்டு கரெக்ட்டா ரெண்டுல இருந்து மூணு நிமிஷம் போதும் அதுக்கு மேல இருக்கக்கூடாது. அப்படியே லைட்டா சுடுதண்ணில போட்டு எடுத்த மாதிரி இருக்கணும். ரைஸ் எடுத்து பார்த்தால் லைட்டா அழுதனும் ஆனா உடைக்க கூடாது அந்த பதத்துக்கு இருக்கணும்.

சிக்கன் வெந்துகிட்டு இருக்கும் அந்த சூடோடவே இந்த ரைஸ் வடிகட்டிட்டு  மிக்ஸ் பண்ணிக்கலாம். இப்ப மூடி போட்டு வெயிட் போட்டு வெச்சிருங்க . அதாவது 10 நிமிஷம் சிம்லயே இருக்கட்டும் ரொம்ப லோ பிளேம்ல. அதுக்கு அப்புறம் ஓபன் பண்ணி பாத்தீங்கன்னா நல்ல கம கமன்னு ஒரு சூப்பரான ஒரிஜினல் ஆம்பூர் பிரியாணி ரெடி. 

முகப்பொலிவுக்கு என்ன செய்ய வேண்டும்| Face Glowing Home Remedies in Tamil | Puthiyathagaval

Scroll to Top